அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

புதன், ஏப்ரல் 01, 2015

விருந்து உபச்சாரம்

சுவையான உணவுகள் இல்லாவிட்டாலும்.அன்பான உபசரிப்பு அதுபோதும்!
அல்லாஹ்வின் திருபெயரால் ............

''அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர், தன் விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும் , பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது வாய் மூடி இருக்கட்டும் . [அல்ஹதீஸ் ]
 முஸ்லிம்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள் என்பது காலங்காலமாக கூறப்பட்ட உண்மை . நம் மார்க்கம் இஸ்லாம். நாம் சத்திய பாதையில் இருக்கிறோம். நம் உயிருக்கு மேலாக மதிக்கக் கூடிய அண்ணல் நபி [ஸல்] அவர்கள் , கற்றுத் தராத , சொல்லித் தராத, காட்டித் தராத எந்த ஒரு விடயமும் இல்லை . இம்மை, மறுமைக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் வாழ்ந்துக் காட்டி சென்றுள்ளார்கள் . அண்ணல் நபி [ஸல்] அவர்களைப் போன்ற மாமனிதர் இந்த உலகம் காணவில்லை . இனி ஒருபோதும் காணமுடியாது.


விருந்தாளிகள் பலவிதம். அழைக்கப்பட்ட விருந்தாளிகள். அழையா விருந்தாளிகள் . கௌரவ விருந்தாளிகள், எதிர்பாரா விருந்தாளிகள், சொந்த பந்தங்கள் என பல வகைகள் இருப்பினும், அழைக்கப்பட்ட விருந்தாளிகலாகச் செல்வதே மேலான பண்பாகும். விருந்தளிப்போர் இன்முகத்தோடு வரவேற்று அன்போடு உபசரித்தலும் , வயிறார உண்ணுங்கள், திருப்தியாக உண்ணுங்கள் எனக் கூறி விரிப்பில் அமர்த்தி, கை கழுவச் செய்து பின் பாசமாக பரிசுத்தமான நல்ல பதார்த்தங்களை பரிமாறியும் அவர்களை மகிழ்விக்க வேண்டும்.

நாம் விருந்தாளியாகச் சென்றால் எந்தளவு மரியாதையை எதிர்பார்க்கிரமோ, அதே மரியாதையை விருந்தினருக்கு அளிப்பதே மாண்புடைய செயலாகும்.  விருந்து உபசரிப்பின் காலம் பொதுவாக 3 நாட்களாகும். முதல் நாள் தரமான உணவை வழங்குவது விருந்தளிப்பவரின் கடமையாகும். மூன்று நாட்களுக்கு மேல் உணவளிப்பது தர்மமாகும்.  தமக்கு உணவு இல்லாதபோதும் ஒரு கயவனுக்கு விருந்தளித்து, அவன் கழித்து விட்டுச் சென்ற அசுத்தத்தினையும் தம் திருக் கரங்களால் கழுவி, அவன் விட்டுச் சென்ற வாலையும் அவனிடம் ஒப்படைத்த ஒப்பற்ற வரலாற்று நிகழ்ச்சியை நபிகளார் [ஸல்] அவர்கள் வாழ்விலன்றி வேறெங்கும் காண இயலாது.

விருந்தாளிகளிடம் பேசும் சொற்களும் அவர்களுக்கு உவப்பளிப்பதாக, பயனளிப்பதாக இருத்தல் அவசியம். அவர்கள் வரவை கண்டு முகம் சுழிப்பதும் , குத்தலான வார்த்தைகளைப் பேசுவதும் அவர்களை புண்படுத்துவதும் அல்லாஹ்வுக்கும், மறுமைக்கும் அஞ்சும் முஸ்லிமுக்கு அழகல்ல என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.

ஒருகாலம் இருந்தது. அப்பொழுது உங்களுக்கு தெரியும் எப்படி விருந்தாளிகள் நடத்தப்பட்டார்கள் என்பதையும், இன்று எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதையும்.  சுயநலமற்ற உறவுகள், விருந்து உபசரிப்புகள். அது ஒரு காலம் இருந்தது. இன்றைய காலம் எப்படி இருக்கிறது என்று உங்களுக்கு நன்றாக தெரியும்!  விருந்தாளிகளிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் சொல்லிவிட்டது. நாம்தாம் அறிந்து, புரிந்து நடந்துக் கொள்ள வேண்டும். விருந்தாளிகளின் துஆவையும் அல்லாஹ்வின் அருளையும் பெறுவோம்.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
நன்றி.. நர்கிஸ்.
நன்றி..ஹாஜியா . கே கமருன்னிசா அப்துல்லாஹ் .
சத்திய பாதை இஸ்லாம் இறுதிப் பகுதி..***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!