அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

சனி, மே 23, 2015

பர்மா முஸ்லிம்கள் ........???

அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்............
அல்லாஹ் கூறுகின்றான்...

உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா ? அவர்களை [வறுமை, பிணி போன்ற] கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன,, ''அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்'' என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள் ,,  ''நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது''  [என்று நாம் ஆறுதல் கூறினோம்]
அல்குர் ஆன் .. அத் 2 /வசனம் 214/பகுதி 2


நபிக்கை கொண்டோரும் , [காஃபிர்களின் கொடுமைகளால் நாட்டை விட்டு] துறந்தவர்களும் , அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தோரும் அல்லாஹ்வின் [கருணையை] ரஹ்மத்தை - நிச்சயமாக எதிர்பார்க்கிறார்கள் ,, மேலும், அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், பேரன்புடையோனாகவும் இருக்கின்றான்.

வசனம்.. 218

நிச்சயமாக அல்லாஹ்  முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற [அடிப்படையில்] விலைக்கு வாங்கிக் கொண்டான்,, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள்- அப்போது அவர்கள் [எதிர்களை] வெட்டுகிறார்கள்,, [எதிரிகளால்] வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும் , இன்ஜீலிலும், குர்ஆனிலும்  இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே , நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள்- இதுவே மகத்தான வெற்றியாகும்.
அத் 9.. பகுதி 11 /வசனம் 111.

சில வருடங்களாக பர்மா முஸ்லிம்கள் தொல்லைக்கும் , துன்பத்துக்கும் ஆளாகி வருகிறார்கள். அவர்களில் சிலர் கொல்லப்பட்டும் இருக்கிறார்கள் . ஊடகங்கள்  இந்த துயர செய்தியை மறைத்துவிட்டது. காரணம் கொல்லப்படுவது முஸ்லிம்கள்தான்  . ஈமான் கொண்டோம் என்ற காரணத்தினால் தொல்லைக்கும் , துன்பத்துக்கும் ஆளாகி , நாட்டை விட்டு தொரத்தப்பட்டு . இப்பொழுது  அவர்கள் கப்பலில் தத்தளித்துக் கொண்டு , உணவும் இல்லை, குடிக்க தண்ணீரும் இல்லை, பசி பட்டினி குழந்தைகளுடன் அனாதையாக இருந்து வருகிறார்கள்.  அவர்களை ஆதரிக்க முஸ்லிம் நாடுகள் யாரும் முன்வந்ததாக தெரியவில்லை.  முஸ்லிம் நாடுகளும் கைக் கட்டிக் கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  பர்மா முஸ்லிம்கள் கதிகலங்கி நிற்பதைக் கண்டால்  , நம் மனம் வேதனையால் துடிக்கிறது. அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி துஆச் செய்கிறோம்.

உலகத்தில் பார்த்தால் . பெரும்பாலும் முஸ்லிம்கள்தாம் கஷ்டத்துக்கும், நஷ்ட்டத்துக்கும் ஆளாகிறார்கள் . நாடுகளை விட்டு அகதிகளாக ஆளாக்கப்படுகிறார்கள். தொட்டியையும் ஆட்டிக் கொண்டு , பிள்ளையின் தொடையை கிள்ளிக் கொண்டு  இரட்டை வேடம் போடும் அமெரிக்க வின் சதிகளை  , தந்திரங்களை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது முஸ்லிம் நாடுகள். அமெரிக்காவும் அதனுடன் சேர்ந்த இஸ்ரேயல் முஸ்லிம்களை அழிக்க வேண்டும்  . இஸ்லாத்தின் மீது அவதூறுகளைப் பரப்ப வேண்டும் என்று சூழ்ச்சி செய்த வன்னமாக இருக்கிறார்கள்.  அவர்களின் சூழ்ச்சியை அல்லாஹ்  சீக்கிரம் முறியடிப்பான். அல்லாஹ் சூழ்ச்சிக்காரன் களுக்கு எல்லாம் மிக சூழ்ச்சிக்காரன் !

அமெரிக்காவின் அடுத்த சூழ்ச்சி இலங்கை வாழும் முஸ்லிம்கள் தான்! இலங்கை முஸ்லிம்களுக்கு  தொல்லைக் கொடுப்பது  அங்குள்ள புத்தமதத்தை சேர்ந்த பிகுகள்  . சமீபக் காலத்தில் முஸ்லிம்கள் தொல்லைக்கு ஆளானார்கள். அது நின்றுவிட்டது அல்ஹம்துல்லில்லாஹ்!!! மறுபடியும் வராது என்று சொல்ல முடியாது. அடுத்த குறி .. இந்தியா வாழும் முஸ்லிம்களின் நிலை மோடி ஆட்சிக்கு வந்தபிறகு  . முஸ்லிம்களுக்கு தொல்லைகளும், துன்பங்களும் கொடுக்கப்பட்டு வருகிறது.  அந்த சம்பவங்கள் வடமாநிலத்தில் தான் நடக்கிறது. தமிழ் நாட்டில் காவி பயங்கரவாதிகளின் சூழ்ச்சி இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக கால வைக்க பார்க்கிறார்கள்.

இதெல்லாம் எதற்கு குறிப்பிடுகிறேன் என்றால் . முஸ்லிம்களை கருவறுக்க வேண்டும் என்று சில இஸ்லாமிய எதிரிகள் திட்டம் போட்டுக் கொண்டுயிருக்கிறார்கள். அந்த திட்டம் இன்ஷாஅல்லாஹ்  தவுடு பொடியாகிவிடும். முஸ்லிம்களுக்கு ஏதாவது ஒரு துன்பம் வந்தால் , அந்த துன்பத்தை நீக்குவது அல்லாஹ்தான்! அல்லாஹ்வின் உதவி எப்பொழுது கிடைக்கும்  ..? எப்படி கிடைக்கும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இன்று நாம் பல பிரிவுகளாக பிரிந்து இருக்கிறோம். பல கருத்துக்கள் மத்தியில் நாம் பிளவுப்பட்டு இருக்கிறோம்.  நம்முடைய பலஹீனம் என்ன என்பதை இஸ்லாமிய எதிரிகள் நன்றாக விளங்கி வைத்தியிருக்கிரார்கள். அந்த பலஹீனம் தான் ஒற்றுமையின்றி  வேற்றுமையாக இருப்பது. ஒருவொருகொருவர்  சண்டையிட்டுக் கொண்டு , விவாதம் , பிரச்சனை போராட்டம் , ஆர்பாட்டம் பல குழப்பத்தில் இருந்து வருகிறார்கள். இவைகள் களையப்பட வேண்டும். ஒற்றுமை நிலைப்பட வேண்டும் . ஒரு அணியில் இருந்து குரல் கொடுக்க வேண்டும். அப்பொழுது தான் அல்லாஹ்வின் உதவி நமக்கு கிட்டும் .

பர்மா முஸ்லிம்களுக்கு நடந்தது , நமக்கு ஏன்  நடக்கூடாது ..? எப்போ எது என்ன நடக்கும் என்பதை யார் சொல்ல முடியும்?  [அல்லாஹ் காப்பாற்றுவான்] . அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றாமல்  , அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களின் வழிமுறைகளை பின்பற்றாமல் . மனம் போன போக்கிலே வாழ்ந்து வந்தோம் என்றால் நிச்சயமாக நமக்கும் அல்லாஹ்வின் சோதனை  வரும் . நாமும் அல்லாஹ்வால் சோதிக்கப்படுவோம் . இப்பொழுதே நாம் சிந்திப்போம். பர்மா முஸ்லிம்களுக்கு எந்த முஸ்லிம் நாடுகளும்  எதுவும் செய்ய போவதில்லை . நாமும் அவர்களுக்கு என்ன செய்ய போகிறோம். ஒவ்வொருவருக்கும் வாட் ஸ் ப்பில்  செய்தியை அனுப்புவோம். இந்த செய்தியை எல்லோருக்கும் ஷேர் செய்யுங்கள் என்று சொல்லுவோம்'' நாம் ஐந்து வேளை  தொழுகையை பேணுதலாக தொழக்கூடியவர்களா ? நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் மீது உயிருக்கு மேலாக அன்பு வைத்திருக்கிறோம் என்று வாயளவில் சொல்கிறோம் தவிர அண்ணலார் காட்டிய வழிமுறைகளை பேணுகிறோமா ?? சகோதரத்துவம் என்று சொல்லிக் கொண்டு ஒருவொர்கொருவர்  சண்டையிட்டு கொள்கிறோம்!! நமக்கு அகக் கண்கள் முடியிருக்கிறது. உலகத்தின் ஆசைகள் உள்ளத்தில் குடிக் கொண்டுயிருக்கிறது. பல அமைப்புகள் , பல கட்சிகள் , பல ஜாமத்துக்கள் , பல பிரிவுகளாக இப்படி இருப்பதினால்  என்ன லாபம் கண்டோம்? என்ன நன்மை வந்தது? என்ன பலன் கிடைத்தது..? அன்பு சகோதரர்களே! சிந்திக்க மாட்டோமா?? அல்லாஹ்வை மறுமை நாளில் சந்திக்க மாட்டோமா? அல்லாஹ்  நம்மிடம் இதெல்லாம் கேட்க மாட்டானா? பணத்தை இப்படி வீண் விரயம் செய்வதைப் பற்றி விசாரிக்க மாட்டானா..?

பர்மா முஸ்லிகள் படும்  கஷ்டத்தைப் பாருங்கள் வீடியோ மூலம். ஒவ்வொரு தொழுகையிலும் அல்லாஹ்விடம் அழுது  கேளுங்கள்! அல்லாஹ் கருணை உள்ளவன். பிரார்த்தனையை ஏற்றுக் கொள்பவன். நிச்சயமாக அல்லாஹ் நம் துஆக்களை சீக்கிரம் ஏற்றுக் கொள்வான். உறுதியாக இருங்கள் ! ஒற்றுமையாக இருக்க மனம் வையுங்கள்! மனதில் உள்ள கசடுகளை அகற்றி விடுங்கள்! நீர் தௌஹீதா ..? அல்லது சுன்னத் ஜமாத்தா? அல்லது ஜாக்கா ? தமுமுக்கா ? இந்த அமைப்பா ? அந்த அமைப்பா என்று பார்ப்பதை முதலில் விட்டு ஒழியுங்கள்! தனி தனியாக பள்ளிகள் கட்டுவதை நிறுத்துங்கள்! ஆர்பாட்டம் , போராட்டம், பேரணி , ஊர்வலம், மாநாடு , கூச்சல், குழப்பம் இவைகளை விட்டு விட்டு ஆக்க பூர்வமான பணிகளைச் செய்யுங்கள்! மக்களுக்கு  பலன் தரும் காரியத்தில் ஈடுபடுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி கிட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.
இதுப் போன்று வீடியோக்கள் இன்னும் இருக்கிறது...
அல்லாஹ் மிக்க அறிந்தவன் .
சத்திய பாதை இஸ்லாம் ..........**************     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!