அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வியாழன், மே 21, 2015

தந்தை செய்த உபகாரங்கள் என்ன?

இன்ஷாஅல்லாஹ் ரமலான் நம்மை நோக்கி
வருகிறது! அதற்க்கான ஏற்பாடுகளை இன்றே செய்யுங்கள்!
அல்லாஹ்விடம் அழுது கேளுங்கள்!
ரமலானை அடைவதற்கு ....
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்......
ஒருவருக்கு ஒரு தொழிலைப் பற்றி தெரிந்தால் தான், அதை செமையாகவும், நல்ல முறையில் கவனமாகவும் , சிறப்பாகவும், பிறர் மெச்சும் அளவுக்கு செய்தால்தான் அந்த தொழில் சிறப்படையும். அதுப்போல் தான் பெற்றோர்களின் சிறப்பும் , அவர்கள் செய்த தியாகங்கள் , அவர்களுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று ஒரு மனிதர் அறிந்தால் தான் . அவர் அவருடைய பெற்றோர்களுக்கு நல்ல முறையில் பணிவிடையும் , பாசமாகவும், நல்லவிதமாக நடந்துக் கொள்வதும் கடமைகளை செய்ய முடியும்.


உன் தந்தை உன் வாழ்விற்காக இரவு பகலாக பாடுபட்டு சம்பாதித்து உனக்கு ஆக வேண்டிய செலவுகளை அவரே செய்தார். உன் தாய் உன்னை வயிற்றில் சுமந்திருந்த சமயம் ஏற்பட்ட வைத்திய செலவையும் நீ பிறக்கும் பொழுதும், பிறந்த பிறகும் ஏற்பட்ட வைத்திய செலவையும் உன் தந்தைதான் ஏற்றுக் கொண்டார் . உன்னுடைய உணவிற்கும் உடைக்கும் இன்னும் ஆக வேண்டிய மற்ற செலவினங்களுக்கும் அவர்தான் பாடுப்பட்டு சம்பாதித்தார். நீ இடை இடையே சுகக் குறைவாக இருந்த சமயம் அதற்கான வைத்திய செலவுகளை உன் தந்தைதான் பொறுபேற்றுக் கொண்டார். நீ சிறுவனாக இருந்த சமயம் உன்னை மகிழ்விப்பதற்காக விளையாட்டுப் பொருள்களை வாங்கி வந்து உன்னை மகிழ்வித்ததும் உன் தந்தை தான் . மேலும் உன்னை சந்தோஷப்படுவதர்க்ககவும் வெளியில் செல்லும் பொழுதெல்லாம் உன்னை அவர் லைத்துச் சென்றார். அவ்வாறு செல்லும்பொழுது சில சமயங்களில் உன்னால் நடந்து செல்ல இயலாமிளிருந்து . அப்பொழுது அவர் உன்னை தூக்கிக்  கொண்டு சென்றார். பெருநாட்கள் வரும்போதெல்லாம் உனக்கு நல்ல நல்ல ஆடைகளை வாங்கித் தந்தார். இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம் ... தந்தையின் உபகாரம் ...

உன் தந்தை உனக்காக இவ்வளவு சிரமங்களை ஏற்று உன்னை ஆளாக்கிய உன் தந்தையை உன் வீட்டு வேலைக்காரனை விட கேவலமாக நினைக்கின்றாய். நம் அருமை நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் பெற்றோர்களுடன் நடந்து கொள்ள வேண்டிய முறைகளையும் அவர்களுடைய மேன்மைகளையும் அவர்களுடன் விரோதம் செய்து கொண்டால் என்னென்ன தீமைகள் உண்டாகும் என்பதைப் பற்றியெல்லாம் பல தலைப்புகளில் மிகத் தெளிவாகக் கூறியுள்ள ஹதீஸ்களை நன்றாக படித்துப் பார். ஒரு தடவையல்ல பல தடவை படித்துத் பார். அவ்வாறு நீ படித்து பார்த்தால் நீ யார்? உன் தந்தை யார்? உன் தாய் யார்? அவர்களின் அந்தஸ்த்து உன்னதத்தில் எப்படி இருக்க வேண்டும்? என்பதையெல்லாம் தெளிவாகப் புரிந்துக் கொள்வாய். சுருங்கக் கூறின், உன்னுடைய பெற்றோர்கள்தான் சொர்க்கமும், நரகமும்'' என்று கூறும்பொழுது இதைவிட வேறு என்ன வேண்டும்?  அதாவது பெற்றோர்களுக்கு கட்டுப்பட்டு நடந்தால் சொர்க்கமும், அவர்களுக்கு கட்டுப்படாமல் நடந்தால் நரகமும் கிடைக்கும் என்பதுதான் இதுனுடைய பொருள்.

குறிப்பு..*
மார்க்கத்திற்கு விரோதமான காரியங்களில்  பெற்றோர்களுக்கு கட்டுப்படுவது கூடாது என்பதை மறந்து விடக் கூடாது. மேலும் பெற்றோர்களின் வெறுப்பை ஏற்றுக் கொண்ட பலர் இவ்வுலகிலேயே பல துன்பங்களையும் சிரமங்களையும் அனுபவித்த பிறகும் அவர்களுக்கு புத்தி வருவதில்லை. எல்லாம் வல்ல அல்லாஹ்  நம் அனைவரையும் அவனும் அவனுடைய தூதர் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களும் எம்முறையில் கட்டுப்படும்படி ஏவினார்களோ அம்முறையில் கட்டுப்பட்டு அவனுடைய திருப்பொருத்தத்தை அடைய நல்லருள் புரிவானாக ! [ஆமீன்]

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

இன்ஷாஅல்லாஹ்  ரொம்ப தெளிவாக பெற்றோர்களைப்  பற்றி விரிவாக பார்க்கலாம்......
இதைப் பற்றி உங்கள் விமர்சனம் என்ன  ..? விருப்பம் இருந்தால் தெரிவிக்கலாம்.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!