அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

ஞாயிறு, மே 17, 2015

மனதை நெகிழ வைத்த நிகழ்வுகள் .. அமானிதம் பேணல்


மனதை நெகிழ வைத்த நிகழ்வுகள் .. அமானிதம் பேணல்
23 ஆண்டு போராட்டத்திற்கு பின் கஅபாவிற்கு செல்கிறார்கள் அல்லாஹ்வின்
தூதர் (ஸல்). கஅபாவின் சாவி யாரிடம் இருக்கிறது என்று அல்லாஹ்வின் தூதர்
வினவினார்கள். அதற்கு உஸ்மான் பின் தல்ஹா அவர்களிடம் இருக்கிறது என்று
சொல்லப்பட்டது.
அந்த சாவியை வாங்க அலீ (ரலி) அவர்களிடம் கட்டளையிட்டார்கள் அண்ணலார்.
அப்பொழுது உஸ்மான் பின் தல்ஹா அவர்கள் இஸ்லாத்தை ஏற்கவில்லை. அலீ (ரலி)
அவர்கள் உஸ்மானிடம் சாவியை கேட்டார். அனால் உஸ்மான், “நான் இஸ்லாத்தை
ஏற்கவில்லை. ஆகையால் சாவியை தரமாட்டேன்” என்றார். பின் அலீ (ரலி) அவர்கள்
சாவியை உஸ்மானிடம் இருந்து பிடுங்கி வந்தார். சாவி அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களின் கரங்களில் கொடுக்கப்பட்டது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கஅபாவை திறந்தார்கள். அப்பொழுது அல்லாஹ்,
“நபியே! அமானிதத்தை அவரவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள்” என்று ஒரு
வசனத்தை இறக்கினான்.
பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடந்ததை உணர்ந்து கஅபாவின் சாவியை
உஸ்மானிடம் ஒப்படைக்க சொன்னார்கள். அலீ (ரலி) அவர்கள் உதுமானிடம் சாவியை
கொடுத்தார்.
அப்பொழுது உஸ்மான், “ஏன் நீங்கள் சாவியை திருப்பி தருகிறீர்கள்?” என்று
வினவினார். அலீ (ரலி) அவர்கள் நடந்த நிகழ்வினை கூறினார். அதை கேட்ட
உஸ்மான் சொன்னார், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று
சொல்லுங்கள் நான் இஸ்லாத்தை ஏற்று கொண்டேன் என்று ” (அல்லாஹு அக்பர்).
Source: ஆரூர் யூசுஃப்தீன்


தோள் கொடுத்த தூய நபி -[ஸல்]

மக்காவின் வெற்றிக்கு பின்னர் ஒருநாள்  நபி [ஸல்] அவர்களிடம் ஒருவர் வருகைதந்து  ''அல்லாஹ்வின் தூதரே! நான் ஓர் ஏழை , எனக்கு இருக்க ஓர் இடமில்லை என முறையிட்டு நின்றார்.

நபி [ஸல்] அவர்கள் அவரை அழைத்துக்கொண்டு கஃபாவின் பக்கம் வந்தார்கள்,  'இதோ! இந்த இடத்தில் நீர் உமக்கு ஒரு வீட்டைக் கட்டிக்கொள்ளும்'' எனக்கூறினார்கள் . கூறியதுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. அந்த ஏழைமனிதர் தம் வீட்டிற்குச் சுவர் எழுப்பமுனைந்தபோது மண்குழைத்துக் கொடுத்தார்கள் மண்பதையை  வாழ்விக்க வந்த மாநபி [ஸல்] அவர்கள்.

சுவர் எழுப்பப்பட்டுவிட்டது . வீட்டிற்கு முகடு அமைத்திடும் வேலையை அவர் செய்து கொண்டிருந்தார். அது உயரமாக இருந்ததால் எட்டவில்லை . இதனைக்கண்ட நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள்  , 'நண்பரே ! நான் கீழே அமர்ந்து கொள்கிறேன் நீர் என் தோள்மீது ஏறி முகடு அமைத்துகொள்ளும்'' என்றார்கள்.

அண்ணலாரின் மொழிகேட்டு அதிர்ந்துபோன அத்தோழர் , '' என்ன  தங்களின் புனிதமிகு  தோள்களின் மீது ஏரியா நான் என் வீட்டிற்கு முகடு அமைத்துக் கொள்வது ? எனக்கு வீடே வேண்டாம் .''  என  அழுதவர்ரக் கூறலுற்றார் . நபி [ஸல்] அவர்கள் அவரைச் சமாதானம் செய்து தம்புனித தோள்களில்  ஏறி முகடு அமைத்துக் கொள்ள உதவினார்கள் .

அவரோ வேண்டாவெறுப்புடன் கண்ணீர் சிந்தியவாறு தோளின்  மீதேறி முகடு அமைத்தார்.  உண்டா இப்படி ஒரு வரலாற்று நிகழ்ச்சி மற்றவர் வாழ்க்கையில்..?

நாட்டில் எத்துணையோ தலைவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் , தம் தொண்டனுக்குத் தோள்கொடுத்த  தலைவர் உண்டா? தோள் கொடுக்க வேண்டாம். தம்தோளில் போட்டிருக்கும் துண்டைக் கொடுத்திடும் மனவலமாவது உண்டா அவர்களிடம்...!

மேடையேறி அண்ணலாரின் சிறப்பியல்புகள் குறித்துப் பேசுகிறோம். அவர்களிடமிருந்து அழகிய குணங்களில் ஏதாவது இருக்கிறதா..? அவர்களின் சுன்னத்தைப்  பின்பற்றியொழுகும் மேடைப் பேச்சாளர்கள் எத்துணைபேர்கள் இருக்கின்றனர்? உண்ணும்போது, குடிக்கும்போது, உறங்கும்போது, சிறுநீர் கழிக்கும்போது இன்னும் பிறவற்றில் பேணுதலாவது  கடைபிடிக்கப்படுகிறதா?

பொறுமையின் முன்மாதரி

அண்ணல் நபி [ஸல்] அவர்கள் காலை [சுப்ஹ் ] தொழுகையை முடித்துவிட்டு வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் வருகையை எதிர்பார்த்தவாறு ஒரு யூதப்பெண் தனது வீட்டின் மாடியில் நின்று கொண்டிருக்கிறாள். நபி [ஸல்] அவர்கள் அப்பெண்ணின் வீட்டின் அருகே வந்ததும் கையில் வைத்திருந்தக் கூடையிலுள்ள குப்பையை கொட்டுகின்றாள் அண்ணலாரின் தலைமீது!

அண்ணல் நபி [ஸல்] அவர்கள் தம் தலையை உயர்த்திபார்த்து புன்னகை பூத்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர் இவ்வாறே நாள்தோறும் நடக்கிறது.

ஒருநாள் நபி [ஸல்] அவர்கள் வழக்கம்போல் தொழுதுவிட்டு அவ்வீட்டின் அருகே வந்தார்கள். தம் மீது குப்பைக் கொட்டப்படாதது கண்டு, அண்ணலார் [ஸல்] அண்டை வீட்டாரிடம் அப்பெண்ணைக் குறித்து வினவுகின்றனர்.

'அப்பெண் கடும் காய்ச்சலால் அவதிபடுகிறாள். என பதில் கிடைக்கிறது. உடனே  அவளின் இல்லம் சென்றனர்,, அண்ணலாரின் வருகையைச் சிறிதும் எதிர்ப்பாராதிருந்த அப்பெண், படுக்கையைவிட்டும் திடுக்கிட்டு எழுந்திட முயன்றாள் . அண்ணலார் அவர்கள் அவளை எழவேண்டாம் என்று கூறிவிட்டு, அவள் உடைக் நலம்பெற இறைவனை இறைஞ்சினார்கள் . அவள் அது கண்டு மிகவும் வெட்கமுற்று துவண்டுபோனாள் .

அண்ணலாரின் பெருந்தன்மையும், பொறுமை குணத்தையும் கண்டு கலங்கினாள் .. வியப்புற்றாள் ,, கண்ணீர் சிந்தினாள் . பின்னர் இஸ்லாத்தில் இணைந்து விட்டாள்  . ஒருவர் அண்ணலாரிடம் வந்து அவர்களின் முகத்துக்கு நேரே நின்றுகொண்டு,,  ''பொறுமை என்றால் என்ன? என்று கேட்டார் .
''கோபப்படாதிருப்பது.'' என அண்ணலார் [ஸல்] கூறினார்கள். மீண்டும் அவர் அவர்களின் வலப்பக்கம் வந்து நின்றுகொண்டு ,

''பொறுமை என்றால் என்ன? '' என்று கேட்டார்.
''கோபப்படாதிருப்பது .'' என்று பதிலளித்தார்கள்.
''மீண்டும் அவர் இடப்பக்கம் வந்து நின்று கொண்டு ''பொறுமை என்றால் என்ன? என்று கேட்டார்
''கோபப்படாதிருப்பது.'' எனக்கூறினார்கள்.

அனபர்களே! நாம் அவர்கள்மீது அன்பிருப்பதாகக் கூறிக்கொள்கிறோம். இதேகேள்வியை ஒருவர் நம்மிடம் வந்து மீண்டும் மீண்டும் வினவினால் நாம் அவருக்கு தரும் பதில் புன்னைகையுடன் கூடியதாகயிருக்குமா? அல்லது...?
சிந்திக்கக் கடமைப் பட்டிருக்கிறோம். எத்தகைய பொறுமை ஏந்தல் நபி [ஸல்] அவர்களிடம் குடிகொண்டிருந்தது! எண்ணிப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது அவர்களின் வாழ்க்கை முறையை!

நம் உறவினர்கள் யாரவது ஒருவர் உடல் நலம் சரியில்லாமல் இருந்தால் . நாம் சென்று  உடல் நலம் விசாரிப்போமா? நம்மில் வீட்டில் பக்கத்துவீட்டுக் காரர் நம் வீட்டுக் கொல்லையில்  அறியாமல் அல்லது அறிந்தோ குப்பையைக் கொட்டினால் நாம் என்ன செய்வோம் ? இருந்தாலும் நாம் முஸ்லிம்கள் ...!
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
சத்திய பாதை இஸ்லாம் ********************  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!