வெள்ளி, மே 15, 2015

கட்டுப்படாத மனைவியைத் திருத்த....

திருமணமாம் திருமணம் !
இருமனமும் இணையும் திருமணம்!
உங்கள் வாழ்வில் என்றும் நற்மணம் !
வேண்டாம் பிரியும் மனம்!
புரிந்துக் கொண்டால் எல்லாம்
இன்பம் மாயம் !
அல்லாஹ்வின் திருபெயரால் ...............
காலத்தின் கட்டாயம் இந்த கட்டுரை அவசியம்! மனைவியைப் பி டிக்கவில்லையென்றால் , உடனே அவளை தலாக்கு சொல்லிவிடவேண்டும் . அதுதான் இப்போ எளிதான வழிமுறை! தலாக்கு சொல்ல ஒரு வழி இருக்கும்போது , மனைவியைத் திருத்துவதற்கு பல வழிகள் இருக்கிறது. ஒன்றாக சேர்ந்து வாழ நிறைய வழிமுறைகள் இருக்கிறது.


குர்ஆனின் பார்வையில், கணவனின் தலைமைக்கு கட்டுப்பட்டு அவரின் சொல் கேட்டு நடக்கும் பெண்ணே நல்ல மனைவியாவாள். கணவருக்குச் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும்- முழுமையாக நிறைவேற்றுவதுடன், அவர் இல்லாத போது தனது கற்பையும், அவரின் பொருட்களையும் பாதுகாத்துக்  கொள்வாள். தனது கற்பையும், பொருட்களையும் பாதுகாத்துக் கொள்வது தான் இல்லறத்தின் மிக முக்கியமான கடமையாகும். கணவர் வீட்டில் இருக்கும் போதும் இல்லாதபோதும் இதில் சமமாக நடந்து கொள்ள வேண்டும். கணவர் இருக்கும்போது இதில் கவனமாக நடந்து கொள்வது, இல்லாதபோது அலட்சியம் காட்டுவது அறவே கூடாது.

அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கூறுகிறார்கள்..
'நல்ல மனைவி யாரெனில், அவளை நீங்கள் பார்த்தால் சந்தோஷம் அடைவீர்கள் . அவளுக்கு நீங்கள் கட்டளையிட்டால் அதற்கு கட்டுப்படுவாள். நீங்கள் இல்லாதபோது தனது கற்பையும், பொருட்களையும் பாதுகாத்துக் கொள்வாள்.'

'எந்தப் பெண் தனது கணவனுக்கு கட்டுப்படுகிறாலோ, அவளுக்காக வானங்களிலுள்ள வானவர்களும், ஆகாயத்தில் பறக்கும் பறவைகளும் கடலிலுள்ள மீன்களும், வனங்களிலுள்ள மிருகங்களும் பாவமன்னிப்புத் தேடிகின்றன.

கட்டுப்படாத மனைவியைத் திருத்த மூன்று வழிகள் 

ஒரு பெண் தனது கணவருக்கு கட்டுபபடாதவளாகவும் , அவரது கடமைகளை நிறைவேற்றாதவளாகவும் , கணவரிடம் நற்குணத்துடன் நடந்து கொள்ளாதவளாகவும் இருந்தால், அப்பெண்ணை திருத்துவதற்காக மூன்று வழிகளை  குர்ஆன் கூறுகிறது . மனைவியை  'தலாக்' விட வேண்டுமென எவரேனும் நாடியிருந்தால், அதற்கு முன் இந்த வழிமுறைகளின் படி செயல்படுவது அவசியமாகும்.

முதலாவது வழிமுறை 

கணவர் மென்மையான முறையில், மனைவியிடம் அவளது தவறுகளை எடுத்துக் கூறி விளங்க வைக்க வேண்டும். அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சுட்டிக்காட்டி, இனி இது போன்று நடக்கக் கூடாது என்பதை புரிய வைக்க வேண்டும். அதனை அவள் புரிந்து கொண்டு தனது தவறி உணர்ந்து திருந்திவிட்டால், அப்போதே பிரச்சனை முடிந்து விட்டது. இனி அவள் கணவனுக்கு கவலை தரும் விதத்தில் நடந்து கொள்ள மாட்டாள் .

இரண்டாவது வழிமுறை

மனைவியின் தவறுகளை சுட்டிக்காட்டி புரிய வைத்தும், வளம் அதனை ஏற்று கொள்ளாவிட்டால், அவள் மீது தனக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பை காட்டுவதற்காக, அவளிடமிருந்து தனது படுக்கையை தனியாக்கி விட வேண்டும்.  அவளோடு சேர்ந்து படுப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இது சாதாரண, ஆனால் மாற்றத்தை ஏற்படுத்தும் தண்டனையாகும்.

மூன்றாவது வழிமுறை

மேற்கண்ட செயலின் மூலமாகவும் மனைவி திருந்தவில்லையெனில் , அப்போது இலேசான முறையில் அடிக்கலாம். அதன் வரம்பு என்னவெனில் அடித்த வடுவோ, காயமோ உடலில் ஏற்படக் கூடாது. ஆனால் இந்த மூன்றாவது வழிமுறையை அல்லாஹ்வின் திருத்தூதர் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் விரும்பவில்லை. எனவே இந்த முறையை பயன்படுத்தாமலிருப்பது நல்லது. அவ்வாறு இலேசாக அடித்தபின் மனைவி வழிக்கு வந்து விட்டால், சிக்கல் சீராகி விட்டது எனில், நோக்கம் நிறைவேறி விட்டது.இனி தலாக் விட வேண்டிய தேவையில்லை.

இணக்கம் உண்டாக இன்னொரு முறை

மேற்கண்ட  மூன்று முறைகளும் வீட்டின் பிரச்னையை வீட்டுக்குள்ளேயே தீர்த்துக் கொள்ளும் வழிமுறைகள். சில நேரங்களில் பிரச்சனை பெரிதாகி விடும். மனைவியின் கட்டுப்படா நிலை, முழு சுதந்திரமாக இருக்க விரும்புதல் அல்லது கணவனின் குறைபாடுகள். கணவன் அநீதி இழைத்தல் , கொடுமைப்படுத்துதல் ஆகியவற்றின் காரணமாக, வீட்டின் விஷயம் வீட்டுக்கு வெளியே சென்று விடும். பொதுவாக இதுபோன்ற நிலைகளில் இருவரும் ஒருவரைப் பற்றி இன்னொருவர் பிறரிடம் குறை கூறி குற்றம் சுமத்துவர் . அதனால் இருவரிடையே ஏற்பட்ட விரிசல், இரு குடும்பங்களிடையே விரிசல் ஏற்படக் காரணமாகி விடும்.

இந்த விரிசலை அடைத்து சமாதானத்தை ஏற்படுத்துவதர்க்காக ஒரு மிகச்சிறந்த முறையை குர்ஆன் கூறுகிறது. அதாவது கணவன்- மனைவி இருவரின் குடும்பத்தினரோ அல்லது நெருங்கிய உறவினர்களோ சேர்ந்து இரண்டு பேரை நடுவர்களாக ஏற்படுத்த வேண்டும். அவர்களில் ஒருவர் கணவனின் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும், இன்னொருவர் மனைவியின் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

அவர்கள் எப்படி இருக்க வேண்டுமென்பதையும் குர்ஆன் கூறுகிறது..

1. இருவரும் மார்க்க அறிவுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

2. நீதமானவர்களாக இருக்க வேண்டும்.

3.கணவன்- மனைவியை சேர்த்து வைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

இந்தத் தன்மைகளுள்ள  நடுவர்களிருவரும் கணவன்- மனைவி இருவரிடமும் தூய்மையான எண்ணத்துடன் அமர்ந்து பேசி, அவர்களை இணைத்து வைக்க முயற்சி செய்தல், அல்லாஹ்வின் புறத்திலிருந்து மறைவான உதவியும் அவர்களுக்கு கிடைக்கும். அதன் மூலம் தம்பதிகளின் உள்ளங்களிலும் இணக்கத்தையும், அன்பையும் அல்லாஹ் ஏற்படுத்துவான்.
நன்றி, நர்கிஸ்
அல்லாஹ்  மிக்க அறிந்தவன்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!