செவ்வாய், மே 19, 2015

தாயின் அந்தஸ்து என்ன ?

தாயை மறக்காதே! மனைவியை வெறுக்காதே!
இருவரும் உனக்கு இரண்டு கண்கள்!
தந்தை உன் தலைபோல் !
தலை இல்லாமல் புண்டமாக இருக்க முடியுமா?
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன் ....
பெற்றோர்களைப் பற்றிய சில குறிப்புகள்..

இக்காலத்தில் அநேகர் பெற்றோர்களுக்கு செலுத்த வேண்டிய கடமைகளைச் சரிவர நிறைவேற்றாமல் பெரும் பாவத்திலே மூழ்கியுள்ளார்கள். இன்னும் சிலர் பெற்றோர்களை தம்முடைய விரோதியாகக் கருதி அவர்களின் முகத்தில் விழிப்பதற்கு கூட விரும்பவில்லை. வேறு சிலர் தம்முடைய பெற்றோர்களின் மீது கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து அவர்களைக் குற்றக் கூண்டிலே ஏற்றி அவர்களை அவமானப்படுத்துவதையும் நாம் காண்கிறோம். எந்தலவென்றால் தம்முடைய பெற்றோர்கள் நோயாளியாக ஆனாலும்கூட அவர்களுக்கு கித்மத் செய்வது ஒருபுறமிருக்கட்டும், அவர்களை நோய் விசாரிக்கக் கூடச் செல்வதில்லை. அது மட்டுமல்ல, அவர்கள் மரணித்த பிறகும் கூட அந்த மையித்தைப் பார்க்க செல்வதுமில்லை. மேலும் அந்த ஜனாஸாவின் வைபவங்களில் கூட பங்கு பெறுவதில்லை.


இவனை அவள் பத்து மாதங்கள் வயிற்றிலே சுமந்து கஷ்டப்பட்டதும் இவனைப் பெற்றெடுக்கும் பொழுது அவள் அடைந்த கஷ்ட்டங்களும் இவனை பெற்றெடுத்த பிறகு இவன் ஆளாகும் வரை அவள் எடுத்துக் கொண்ட சிரமங்களும், கஷ்டங்களும் ஒன்றா இரண்டா? இவன் குழந்தையாக இருக்கும் பொழுது இரவு 12 மணிக்கும் ஒரு மணிக்கும் விழித்து அலறும்பொழுது அந்த தாய் பதைபதைத்து விழித்தெழுந்து இவனுக்குப் பாலூட்டி சீராட்டி நிம்மதியாகத் தூங்க வைத்தது இவனுக்கு நினைவில்லையா? இம்மாதரி நடந்தது ஒரு நாளா இரண்டு நாளா? பல நூற்றுக்கணக்கான நாட்கள் இவ்வாறு நடந்ததை இவன் மறந்து விட்டானா?

இவன் சிறு குழந்தையாக இருக்கும் பொழுது மல ஜலம் கழித்து உடம்பெல்லாம் பூசிக் கொண்டு வீறிட்டு அழுத சமயம் பெற்றெடுத்த தாய் இவன் மீதுள்ள அந்த அசுத்தத்தை அகற்றி வெந்நீர் வைத்து அதைக் கொண்டு இவனை கழுவி சுத்தம் செய்து இவனுடைய சிரமத்தை நீக்கியதையும் அதே சமயத்தில் இவனை கொஞ்சி குலாவி முத்தமிட்டு மகிழ்ந்ததையும் இவன் மறந்து விட்டானா?

யாவன் குழந்தையாக இருந்த சமயம் ஒரு சிறு எறும்பு கடிப்பதைக் கோடா சகிக்க முடியாத அந்த தாய் பாசத்தை யாராலும் உணர முடியாது. தாய் பாசம் என்பதைப் பெற்றெடுத்த தாயைத் தவிர யாரும் உணர முடியாது.  மனிதனே! சிந்தித்துப் பார். எத்தனையோ இரவுகள் நீ தூங்காமல் அலுத்து கொண்டிருந்த பொழுது அவள் தூங்காமல் விழித்திருந்து உனக்காக சிரமப்பட்டதை நீ மறந்து விட்டாயா?

நீ சுகக் குறைவாக இருந்த சமயம் உன்னைப் பார்த்து பார்த்து அந்த தாய் கண்ணீர் வடித்தாள்  . மேலும் உனக்காக மனவேதனைப்பட்டதையும், உன் சுகக் குறைவின் காரணமாக பல நாட்கள் பட்டினியாக இருந்தாலே உன் தாய்!  நீ அதையும் மறந்து விட்டாயா ?

தாயின் செய்த  தியாகம் உனக்கு தெரியவில்லை. மனைவிக்கு முன்னாள் உன் தாயை அவமதிக்கின்றாய் . மனைவியின் பேச்சைக் கேட்டு, அந்த தாயை வேதனைப்படுத்துகிறாய். அல்லாஹ்வின் கட்டளைகளை மறந்து விட்டாய் . அண்ணல் நபி [ஸல்] அவர்களின் அழகான வழிமுறைகளை விட்டுவிட்டாய்.

ஓ மனிதனே! நீர் இரண்டு கிலோ உள்ள ஓர் கல்லை  எடுத்து வயிற்றில் கட்டிக் கொள்  சில நாட்கள் மட்டும். அப்பொழுது உனக்கு தெரியும் அதன் சிரமம் , அதன் வலி  , வேதனை . இரவில் உன் விருப்பம்போல் படுக்கையில் அந்த பக்கம் இந்த பக்கம் என்று திரும்ப முடியாது. உன்னால் சில நாட்களுக்கே முடியாது என்று தெரியும் . தாய் பல மாதங்கள் உன்னை சுமந்தால் என்பதை இன்னும் நீ ஏன் உணரவில்லை?

உன்னை பெற்றெடுக்கும் பொழுது அவள் சிரமத்துடன்  'உம' என்று முனங்கினாலே, உன் வாழ்க்கை முழுதும் அவளை உன் தலையில் சுமந்து சென்றாலும் அதற்கு ஈடாக முடியாது என்பதை மறந்து விடாதே!  பெற்ற தாயின் அந்தச்துஎவ்வலவு உயர்ந்தது என்பதை  அல்லாஹ்வின் திருவேதம் மூலமாகவும், அண்ணல் நபி [ஸல்] அவர்களின் ஹதீஸ்கள் மூலமாகவும் நன்கு அறிந்தும், புரிந்தும் கொள்ளலாம்.

எல்லாம் வல்ல அல்லாஹ்  நம் அனைவருக்கும் தாயின் மேன்மைகளை விளங்கி அவர்களின் கடமைகளை நிறைவேற்ற நல்லருள் புரிவானாக!  [ஆமீன்]

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
இன்ஷாஅல்லாஹ்  அடுத்த கட்டுரையின் தலைப்பு
தந்தை செய்த உபகாரங்கள் என்ன என்ற தலைப்பில் காணலாம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!