சனி, மே 30, 2015

ஏழைப்பங்காளர் ஏந்தல் நபி [ஸல்] அவர்கள்

ரமலான் நம்மை நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது!
அல்லாஹ்விடம் அதிகம் அதிகம் துஆச் செய்வோம்!
ரமலானை அடைவதற்காக !!!**
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்....
அண்ணலாரின் வாழ்க்கையில் அரிய நிகழ்ச்சிகள்..
அண்ணல் நபி [ஸல்] அவர்களின் வாழ்க்கையை உலகமே வியக்கும் அளவுக்கு , அவர்கள் வாழ்ந்துக் காட்டினார்கள் . ஆனால் , முஸ்லிமாகிய நாம் , நம் வாழ்க்கை எப்படி இருக்கிறது..? அண்ணலாரின் வாழ்க்கையில்  அரிய நிகழ்ச்சிகளில் ஏதாவது ஒன்று நம் வாழ்க்கையில் நடந்து இருக்கிறதா ? அப்படி நடந்து இருந்தாலும் , அண்ணலாரைப் போல் நாம் நடந்து கொண்டமா? 

ஒரு வீட்டில் ஒரு பேரீத்தம் மரம் நின்றிருந்தது,, அதன் கிளைகளில் ஒன்று அடுத்தவீட்டில் வளைந்திருந்தது. அண்டைவீட்டுக்காரர் ஓர் ஏழை. மரத்தின் உரிமையாளர் பழங்களை உலுக்கும்போது சில பழங்கள் அண்டைவீட்டிலும் விழுந்துவிடும் .


அவ்வீட்டு ஏழைக்குழந்தைகள் பழங்களை எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும். இதனை மரத்தின் உரிமையாளர் பார்த்ததும் பழம்  பறிப்பதையும் விட்டுவிட்டு, உடனே கீழே இறங்கி வந்து , குழந்தைகளின் கைகளில் உள்ள பழங்களைப் பிடுங்கிக்கொள்வதுடன் , குழந்தைகளின் வாயில் பழங்கள் இருப்பின், தம் கைவிரல்களை வாயில் இட்டு பழங்களை  எடுத்துக்கொள்வார்.

அந்த ஏழை மனிதர் இவரின் இச்செயல் குறித்து அண்ணல் நபி [ஸல்] அவர்களிடம் வந்து முறையிட்டார்கள். நபி [ஸல்] அவர்கள் அவர் கூறியதைக் கேட்டறிந்தபின்,  '' சரி நீங்கள் போகலாம். அதுபற்றி அவரிடம் கேட்கிறேன் '' என்று ஆறுதல் கூறி அனுப்பி விட்டு,  மரத்தின் உரிமையாளரை அழைத்துவருமாறு ஒரு தோழரிடம் கூறினார்கள் , அவரும் வந்தார். அவரிடம்  '' உமது பேரீத்தம் மரங்களில் ஒன்று பக்கத்து வீட்டின் பக்கம் வளைந்து நிற்கிரதாமே, அதற்கு ஈடாக சுவர்க்கத்தில் ஒரு மரம் கொடுப்பதாக வாக்களித்தால் அம்மரத்தை என்னிடம் கொடுத்து விடுவீரா? '' என்று நபி [ஸல்] அவர்கள் கேட்டார்கள்.

''நாயகமே! அம்மரத்திற்குப் பல பங்காளிகள் உள்ளனர்,, என்னிடம் வேறு மரங்கள் இருப்பினும் இம்மரத்தின் பழங்கள்தான் எனக்கு மிக விருப்பமானவை'' என்று கூறி மழுப்பினார். மரத்திற்கு அவரேதான் உரிமையாளர் என்று அறிந்து கொண்ட அண்ணலார் [ஸல்] அவர்கள் வேறொன்றும் பேசவில்லை,, மரத்தின் உரிமையாளர் சென்று விட்டார். இவ்வுரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தத் தோழர்களில் ஒருவர்,  ''அல்லாஹ்வின் தூதரே!  நான் அம்மரத்தை வாங்கித் தங்களிடம் கொடுத்தால், சுவர்க்கத்தில் எனக்குப் பேரீத்த மரம் கொடுப்பதாக வாக்களிப்பீர்களா? எனக் கேட்டார். ஆவலுடன் கேட்ட அத்தோழரை விளித்து,  ''ஆம் ! உமக்கும் தான் அவ்வாக்குறுதி '' என கருணை நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.

அத்தோழர் உடனே எழுந்து அம்மரத்தின் உரிமையாளரிடம் சென்று, அவரிடம்,  ''என்னிடம் ஒரு பேரீத்த மரத்தோப்புள்ளது . உம்முடைய அந்த வளைந்து நிற்கும்  அம்மரத்தை என்ன விலை வந்தால் கொடுப்பீர்? என்று கேட்டபோது.

''நபி [ஸல்] அவர்களே! அம்மரத்திற்கு ஈடாக சுவனத்தில் ஒரு மரம் கிடைக்கச் செய்வதாக வாக்களித்தார்கள். அதற்கு ஒப்பவில்லை,, இம்மரம் எனக்கு மிகபிடித்தமானது,, அப்படியே இதை விற்பதாயினும் இதற்குரிய விலையை எவர்தாம் கொடுக்க முன்வருவார் ....! என்று பேச்சை இழுத்து நிறுத்தினார்.

அந்த நபிதோழரோ அவரை விடுவதாயில்லை,, சரி என்ன விலைக்குத்தான் கொடுப்பீர்? எனக் கேட்டார்.  ''நாற்பது மரங்கள் கொடுப்பதாயின் விற்கலாம் என்றார்.  ''என்ன இந்த வளைந்த மரத்துக்கு நாற்பது மரங்களா? என வியப்புடன் வினவினார். சரி,, என ஒப்புக்கொண்ட அத்தோழர் .

''உமது விருப்படியே நாற்பது மரங்கள் கொடுத்தால் கொடுத்து விடுவீரா ? '' எனக் கேட்டார்.  '' நீங்கள் வாங்குவது உருதியாயின் நான் விற்பதற்கு தடையில்லை,, என்னினும் நீங்கள் நாற்பது மரங்கள் கொடுப்பதாக எனக்கு சத்தியம் செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

அத்தோழர் சத்தியம் செய்து கொடுத்தார், உடனே மரத்தின் உரிமையாளர்  '' நான் இம்மரத்தை விற்க விருப்பம் இல்லை . என்றார்.  '' நான் இனி ஒருபோதும் உம்முடைய ஒப்பந்தத்தை மீறமாட்டேன்.''  என்று கோபத்துடன் சஹாபி கூறியதும்  ''அப்படியென்றால் நாற்பது மரங்களும் ஒரே இடத்தில் சேர்ந்திருக்க வேண்டும் .'' என்றார் அக்கஞ்சமனம் படைத்த மரத்தின் உரிமையாளர்.

நபிதோழர் அந்த நிபந்தனையையும் ஏற்றுக்கொண்டார்.. ஒப்பந்தம் முடிந்தது. சஹாபி மகிழ்ச்சியுடன் நபி [ஸல்] அவர்களிடம் சென்று ,  ''அல்லாஹ்வின் தூதரே! அம்மரத்தை விலைக்கு வாங்கிவிட்டேன்,, அதனை தாங்களுக்கு காணிக்கையாக அளிக்கிறேன்.'' என்றார். அதனைக்கேட்ட நபி [ஸல்] அவர்கள் மிகவும் மகிழ்ந்தவர்களாக எழுந்து அந்த ஏழையின் இல்லம் சென்று அம்மரத்தை அவருக்கு உடைமை  ஆக்கினார்கள்.

இந்நிகழ்ச்சியினை நினைவூட்டியே  ''வல்லைலி '' என்னும் அத்தியாயம் திருக்குர்ஆனில் அருளப்பட்டுள்ளது.

 நபிகள் நாயகம் [ஸல்] அவர்களின் இரக்கச்சிந்தனை !
ஏழையரின் துயர் நீக்கவே நாங்கள் பாடுபடுகிறோம் என்று கூறி அவ்வேளைகளின் உழைப்பிலேயே தங்கள் வாழ்க்கையை உயர்த்திக் கொண்டுவரும் உலுத்தர்களைத்  தான் இவ்வுலகம் கண்டுவருகிறது.

ஆனால், எங்களின்  அண்ணல் நபியோ இறைவனிடம், 'இறைவா! நான் ஏழையாகவே வாழ்ந்து ஏழைகளுனேயே இருந்து ஏழைகளுடனேயே சுவர்க்கம் புக விரும்புகின்றேன்.'' என இறைஞ்சுகின்றவர்களாக வன்றோ இருந்துவந்தனர்.

மேலும் பாருங்கள் , அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் சொல்லில் எத்துணையளவு  அவர்களின் தோழர்கள் நம்பிக்கை வைத்திருந்தனர்.!

சுவர்க்கத்தில் ஒரு மரம் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தவுடன், தன்னுடைய தோப்பிலுள்ள மரங்களில் நாற்பதைக் கொடுத்துவிட்டு, சுவனமரதைப் பெற்றிட அத்தோழர் கொண்ட ஆவல் எத்தகையது?
தோப்பையே கேட்டிருந்தாலும் வளைந்த ஒரு மரத்திற்கு ஈடாகக் கொடுத்துவிட்டு, சுவனத்திலுள்ள அந்த ஒரு மரத்தையே அந்த சஹாபிப் பெற்றிட நினைப்பார்களேயன்றி சுவன மரத்தை புறகணிக்க மாட்டார்கள்.
அவர்களின் ஈமானின் உறுதி அத்தகையது.

நாமும் தான் சலவாத்துக்கள் சொல்லிகின்றோம் நபிகளாரின் மீது,, அவர்களின் சொல்லில் நம்பிக்கை இருக்கின்றதா நமக்கு?
நமக்கு உதட்டுளவில் தான் அண்ணலாரின் மீது அன்பு இருக்கிறது. இன்னும் நம் உள்ளத்துக்குள் புகவில்லை.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்...
சத்திய பாதை இஸ்லாம் ....*************    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!