அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

செவ்வாய், மே 12, 2015

வெற்றிகரமான கணவர் [தொடர்ச்சி]

அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்......
வெற்றிகரமான கணவர் என்ற தலைப்பில் சென்ற இதழின் தொடர்ச்சி இன்ஷாஅல்லாஹ் பார்ப்போம்.. இன்றையக் காலக்கட்டத்திற்கு ஏற்ற கட்டுரை என்று நாம் எண்ணுகிறோம் .. இன்று கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைகள் கூட , தலாக்கில் போய் முடிகிறது . ஒருவர்கொருவர் நன்றாக புரிந்துக்கொண்டால் , அவரவர் பொறுப்பை செம்மையாக செய்தால் பிரச்சனை ஏன் வருகிறது ..? அல்ஹம்துலில்லாஹ் ...!!


கணவன் மனைவியிடம் சிறந்த முறையில் நடக்க வேண்டுமென இஸ்லாம் விரும்பும் அதே நேரத்தில் பெண் அல்லாஹ்வால் அனுமதிக்கப்பட்ட நேர்மையான விஷயங்களில் ஆணுக்குக் கட்டுப்பட வேண்டுமென மிக உறுதியான கட்டளையைப் பிறப்பிக்கிறது.

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் ..  ''நான் ஒருவரை ஒருவருக்கு சஜ்தா செய்ய வேண்டுமென ஏவுவதாக இருந்தால் கணவனுக்கு சஜ்தா செய்யுமாறு மனைவியை ஏவியிருப்பேன் .''
ஆதாரம்.. திர்மிதி]

மேலும் கணவன் திருப்தி கொள்வதை மனைவி சுவனம் நுழைவதற்கான காரணமாக இஸ்லாம் அமைத்துள்ளது.

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..  ''கணவன் தன்  மீது திருப்தி கொண்ட நிலையில் மரணம் அடையும் பெண்  சுவனம் நுழைவாள் .''
ஆதாரம்.. இப்னு மாஜா ]

கணவனுக்குக் கட்டுப்படாத பெண் மீது அவள் திருந்தி தனது கணவனுடன் இணக்கமாக நடந்து கொள்ளும் வரை மலக்குகள் சாபமிடுகிறார்கள் என்று நபி [ஸல்] அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..  ''ஒரு பெண் தனது கணவனின் படுக்கையை வெறுத்த நிலையில் இரவைக் கழித்தால் விடியும் வரை மலக்குகள் அவளை சபிக்கிறார்கள்.''
ஆதாரம்.. புகாரீ, முஸ்லிம்]

ஆணுக்குப் பெண் மீது அதிகாரம் உள்ளது , கணவனுக்குக் கட்டுப்பட்டு அவனை திருப்திப்படுத்த வேண்டும் என்ற காரணத்தால் ரமலான் அல்லாத காலங்களில் கணவனின் அனுமதியின்றி நோன்பு நோற்கக் கூடாது என்றும்,  அவனது அனுமதியின்றி எந்தவொரு விருந்தினரையும் அனுமதிக்கக் கூடாது என்றும் இஸ்லாம் வலியுறுத்துகிறது.

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..  ''கணவன் தன்னுடன் இருக்கும்போது அவனது அனுமதியின்றி நோன்பு நோற்க பெண்ணுக்கு அனுமதியில்லை. கணவனின் வீட்டில் அவனது அனுமதியின்றி எவரையும் அனுமதிக்கலாகாது.''
ஆதாரம்.. புகாரீ]

குடும்பத்தைப் பாதுகாத்து, நேர்வழியின்பால் அழைத்துச் செல்வார் என்பதால்தான் இஸ்லாம் ஆணுக்கு பெண்ணை நிர்வகிக்கும் உரிமையைக் கொடுத்திருக்கிறது. மேலும் பெண்களால் ஏற்படும் குழப்பங்களுக்கு ஆண்கள் ஆளாகிவிடக்கூடாது எனக்  கடுமையாக இஸ்லாம் எச்சரிக்கிறது. அப்படி அவர்கள் பெண்களின் பெண்களின் குழப்பங்களுக்கு ஆளாகும்போது அவர்களது கண்கள் குருடாகி , வீரத்தை இழந்து மார்க்கத்தில் பலவீனமடைந்து, நேரிய பாதையிலிருந்து தவறி விடுகிறார்கள். இறுதியில் கடிவாளம் அவர்களது கை நழுவி, வழி தவறிய பெண்ணின் கட்டுப்பாட்டுக்குள் குடும்பம் சிக்குண்டு விடுகிறது. பின்பு அவளது பேச்சை மறுக்க முடியாத, அவளது கட்டளையை மீற  முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுவிடுகிறது. இதைப் பற்றி நபி [ஸல்] அவர்கள் மிகத் தெளிவாக முன்னுரைத்தார்கள்..

''எனது மரணத்திற்குப் பின் பெண்களால் ஏற்படும் சோதனைதான் ஆண்களுக்கு மிக இடையூறாக இருக்கும்.
ஆதாரம் .. புகாரீ]

முஸ்லிம் தனது வழி தவறிய மனைவியின் எந்தவொரு குழப்பத்திற்கும் அடிபணிந்திடமாட்டார் . அவள் குழப்பத்தை ஏற்படுத்தினால் அறிவுநுட்பத்துடன் அதை எதிர்கொண்டு அன்பு மனைவியின் தீமையைக் கண்டிப்பார். ஏனெனில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்கே அவர் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஒரு மனிதன் தனது மனைவியை எவ்வளவுதான் நேசித்தாலும் அந்த நேசம் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிப்பதற்கு அடுத்ததாகத்தான் அமைய வேண்டும்.

 [நபியே! விசுவாசிகளை நோக்கி] நீர் கூறும்.. உங்களுடைய தந்தைகளும், உங்களுடைய மக்களும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிகளும், உங்களுடைய குடும்பங்களும், நீங்கள் சம்பாதித்து வைத்திருக்கும் உங்கள் பொருள்களும், நஷ்டமாகிவிடுமோ என நீங்கள் பயந்து மிக எச்சரிக்கையுடன் செய்து வரும் வர்த்தகமும் , உங்களுக்கு மிக்க விருப்பமுள்ள உங்கள் வீடுகளும் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் விடவும், அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் புரிவதை விடவும் உங்களுக்கு மிக விருப்பமானவைகளாயிருந்தால் நீங்கள் உண்மை விசுவாசிகளல்ல . நீங்கள் அடைய வேண்டிய தண்டனையைப் பற்றி  அல்லாஹ்வுடைய கட்டளை வரும் வரையில் நீங்கள் எதிர்பார்த்திருங்கள். இது போன்ற பாவிகளை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை.
அல்குர் ஆன் .. 9..24]

தங்களை முஸ்லிம்களென வாதிக்கும் பலருடைய இல்லங்களில் காணப்படுவது போன்று முரண்டு பிடிக்கும் பெண்களை உண்மை முஸ்லிமின் இல்லங்களில் காண இயலாது.

ஒருவர் தனது மனைவியை அல்லது சகோதரியை அல்லது மகளை அரைகுறை ஆடையுடன் தலையைத் திறந்து போட்டவளாக, நெஞ்சுப் பகுதியை மறைக்காமல் வெளியேறிச் செல்வதைக் காணுகிறார். இஸ்லாமின் ஒழுக்கப் பண்புகளும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலும் இவ்வாறு புறக்கணிக்கப்பட்டுள்ள இந்தச் சூழலை மாற்றுவதற்குரிய முயற்சியை அவர் மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர் ஆணுக்குரிய வீரத்தை இழந்து மார்க்கத்திலிருந்து விலகி அல்லாஹ்வின் கோவத்துக்கு இலக்காகி விட்டார் என்பதுதான் பொருளாகும். கண்டிக்காமலிருந்து குற்றத்திற்காக உண்மையான பாவமன்னிப்புக் கோருதலைத்  தவிர வேறெந்த பரிகாரமும் வருக்கு இருக்க முடியாது.

முஸ்லிம் பெண்மணி இஸ்லாமிய அமுதுண்டவள்,, இஸ்லாமெனும் நீண்ட நிழலில் இளைப்பாரியவள். எனவே இஸ்லாமின் ஹிஜாபை திருப்தி கொண்ட நிம்மதியான இதயத்துடனும், ஆழிய விருப்பத்துடனும் ஏற்றுக் கொள்வாள். இது இரட்சகனாகிய அல்லாஹ்வின் கட்டளையாகும். ஹிஜாப் அணிவது ஆணின் வற்புறுத்தலுக்காக இல்லை,, ஆணின் அகம்பாவத்தை திருப்திப்படுத்துவதர்க்காக இல்லை,  எவ்வித ஆதாரமுமின்றி அருள்மறையின் வழிகாட்டுதலின் மேன்மையை விளங்கிக் கொள்ளாத வெட்கமற்ற சில பெண்கள் ஹிஜாபை பேணாமல் தெருக்களில் திரிந்து கொண்டிருக்கிறார்கள்.

அன்னை ஆயிஷா [ரலி] கூறினார்கள் ..  '' முதலாவதாக ஹிஜ்ரத் செய்த பெண்களுக்கு அல்லாஹ்  அருள் புரிவானாக...! தங்களது ஆடை ஆபரணம் போன்ற அலங்காரத்தை வெளிக் காட்டாது மறைத்துக் கொள்ளவும்  . தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக் கொள்ளவும்... என்ற பொருள் கொண்ட திருக்குர் ஆன் வசனம் அருளப்பட்டபோது தங்களது போர்வைகளைக் கிழித்து மறைத்துக் கொண்டனர்.

ஸஹீஹுல் புகாரியின் மற்றோர் அறிவிப்பில், '' அப்பெண்கள் தங்களது போர்வைகளை ஓரப்பகுதியில் கிழித்து தங்களை மறைத்துக் கொண்டனர் '' என்று காணப்படுகிறது.

இறுதியாக ஒன்றையொன்று கூறி முடிக்கிறேன்.....
இந்த இடத்தில் பல்கலைக் கழகத்தில் பர்தா அணிந்த ஒரு முஸ்லிம் பெண்ணை நினைவு கூர்கிறேன். அப்பெண்மணியிடம் அன்சாரிப் பெண்களிடம் காணப்பட்டதற்கு சற்றும் குறையாத ரோஷ உணர்வு வெளிப்பட்டது. டமாஸ்கஸ் பல்கலைக் கழக்கத்தில் பர்தா அணிந்திருந்த அந்த இளம் பெண்ணிடம்   ''இந்தக் கடுமையான கோடை காலத்தில் பர்தா அணிவது சிரமமாக இல்லையா?  என ஒரு தினசரி பத்திரிகையின் நிருபர் கேட்டபோது அப்பெண்மணி அருள்மறையின் திருவசனத்தையே பதிலாகக் கூறினார்.. [நபியே! ] கூறுவீராக! நரக நெருப்பு மிகக் கடுமையான வெப்பமுடையது...

இவ்வாறான பரிசுத்த பெண்கள் இன்றும் இஸ்லாமிய இல்லங்களில் அலங்கரித்து மிகச் சிறப்பான முறையில் குழந்தைகளைப் பராமரித்து வருகிறார்கள். சமூகத்தில் இத்தகைய பெண்கள் இன்னும் அதிகம் இருக்கத்தான் செய்கிறார்கள். அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

இவைகளை அல்லாஹ்வின் உதவிக் கொண்டு சுர்க்கமான முறையில் எழுதியுள்ளேன். இதை மற்றவர்களுக்கு பகிர் செய்யவும். அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக..
அஸ்ஸலாமு அழைக்கும் !
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!