வியாழன், ஜூலை 23, 2015

எந்த பெண்மணி சிறந்தவள் ..?

அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்..

இன்றைய உலகில் பல்வேறு மதங்கள் மலிந்து கிடப்பதை நாம் காண்கிறோம். எல்லா மதங்களும், மதவாதிகளும் 'தங்கள் மதமே சிறந்தது' என்று அறிவித்துக் கொள்கின்றனர். தங்கள் மதத்தைப் பிரச்சாரம் செய்கின்றனர்.

எனினும் மற்ற மதங்களை விட இஸ்லாம் பல வகையில் சிறந்து விளங்குவதை சிந்தனையாளர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.


இஸ்லாம் வெறும் வணக்க வழிபாடுகளை மட்டும் சொல்லித் தரும் மதமாக இல்லாமல் மனித வாழ்வின் எல்லாப் பிரச்சனைகளையும் கவனிக்கிறது!
அதில் தலையிடுகிறது! தக்க தீர்வையும் சொல்கிறது! அன்றிலிருந்து இன்று வரை மனிதக் கரங்களால் மாசு படுத்த முடியாத மகத்தான வேதத்தை இஸ்லாம் மட்டுமே வைத்திருக்கிறது. இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமான மார்க்கமன்று . முழு உலகுக்கும் அருளப்பட்ட மார்க்கமாகும்.

ஆண்களைப் போலவே பெண்களுக்கும் உரிமைகள் உள்ளன.
பெண்களுக்கு கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்,, ஞானமிக்கவன் .
அல்குர்ஆன்

அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை.
திருக்குர்ஆன்

மனைவி கணவனுக்கு எப்படி கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அண்ணல் நபி [ஸல்] அவர்கள் அழகாக கூறியுள்ளார்கள்.

''அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் சிரம் பணிதல் [சஜ்தா] செய்வது ஆகுமென்றிருந்தால் கணவர்களுக்கு சிரம் பணியும்படி பெண்களை ஏவி இருப்பேன் . காரணம் பெண்களின் தேவைகளை கணவர்கள் நிறைவேற்றி வைக்கும் பொறுப்பாளர்களாக இருக்கிறார்கள் '' என்று நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் நவின்றார்கள்.
இந்த செய்தி மூலம் நமக்கு என்ன விளங்குகிறது என்றால் , கணவனின் சிறப்பு  அந்த கணவருக்கு  மனைவிகள் கட்டுப்பாட்டு நடக்க வேண்டும். கணவனின் மனம் நோகாமல்  பணிந்து நடக்க வேண்டும்.

எந்த பெண்மணி சிறந்தவள்..?
'பெண்களின் சிறந்தவள் யார்? என நபிமணி நாயகம் [ஸல்] அவர்கள் இடத்தில் ஒருவர் கேட்டார்  . அதற்கு நபி [ஸல்] அவர்கள்,  ''கணவன் அவளைப் பார்த்தால் மகிழசியடைவான். அவன் ஒரு காரியத்தை ஏவினால் அவள் அதைச் சந்தோஷத்தோடு செய்வாள். கணவன் அனுமதி இன்றி வெளியே செல்லாமல் கற்பைக் காப்பாற்றுவாள். அவளே உத்தம பெண்மணி'' என்று விடையளித்தார்கள் என ஹஜ்ரத்  அபூஹுரைரா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இன்று பெரும்பாலும் மனைவிமார்கள் . கணவர்களுக்கு மாற்றமாகத்தான் நடக்குகிறார்கள் . கணவனுக்கு கட்டுப்பட்டு நடக்கும் எத்தனை மனைவிமார்கள் இருக்கிறார்கள்..? கணவன் மனைவியைப்  பார்த்தால் எங்கே கணவன் மகிழ்ச்சியடைகிறான்..? வெறுப்பாகத்தான் பார்க்கிறான் . கணவன் மனைவியிடம் ஓர் காரியம் செய்யும்படி கூறினால் . மனைவி எங்கே அதைச் செய்கிறாள்?  பெண்கள் டிவி க்கு முன்னால்  உட்கார்ந்தால் அவர்களையே மறந்து விடுகிறார்கள்  . சீரியல் மோகம் ! இப்படி உள்ளவர்கள் எப்படி சிறந்தவர்களாக ஆக முடியும்? கணவனின் திருப்தியை பெற முடியும்? எப்படி சுவனம் நுழைய முடியும்? அன்பு சகோதரிகளே ! சிந்திக்க வேண்டாமா??

எந்த பெண்மணி சொர்க்கம் செல்வாள்??
ஒரு பெண் அவள் கணவன் அவள் மீது திருப்தி கொண்டிருக்கும் நிலையில் இறந்து விட்டால்  அவள் சுவர்க்கம் சேருவாள். மேலும் ஒரு பெண் ஐங்காலத் தொழுகையை நியமாகத் தொழுது, புனித ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று, தன கற்பைக் காத்து, கணவனுக்கு வழிப்பட்டு நடந்தால் அவள் நாடிய வாயில்  வழியில் சுவர்க்கத்தில் பிரவேசிப்பால்.
ஆதாரம்.. மிஷ்காத்]

கணவனுக்கு நன்றி செலுத்த வேண்டுமா??
பெருமானார் [ஸல்] அவர்கள் பெருநாள் ஒன்றில் தொழும் இடத்திற்குச் செல்லும் சமயம் பெண்கள் கூட்டத்தினரைப் பார்த்து,  '' பெண்களே! நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் அதிகமான தான தருமங்கள் செய்யுங்கள். காரணம் பெண்களில் பெரும்பான்மையோரை மிஃராஜ் இரவில்] நரகத்தில் நான் கண்டேன்'' என்றுரைக்க, பெண்மணிகள் பெருமானாரிடம் , அல்லாஹ்வின் திருத் தூதரே! எதனால்? என்று கேட்டார்கள். ''நீங்கள் அதிகமாக சபிக்கின்றீர்கள். மேலும் கணவர்களுக்கு நன்றி குறைந்தவர்களாக இருக்கின்றீர்கள் '' என்று நபியவர்கள் கூறிச் சென்றார்கள்.
[மிஷ்காத்]

இன்றைய பெண்கள் , அல்லாஹ்வின் திருப்தியையும் பெறவும் இல்லை, கணவனின் திருப்தியையும் பெறவும் இல்லை. அப்படி இருக்க இப்படி சுவனத்தில் பிரவேசிக்க முடியும் என்பதை  சிந்திக்க வேண்டும்.!!!
சிறந்த பெண்மணிகளாக வாழ அல்லாஹ் அருள் செய்ய வேண்டும் ! அல்லாஹ்வுக்கும் அவன் தூதர் அண்ணல் நபி [ஸல்] அவர்களுக்கும் கட்டுப்பட்டு, கணவனுக்கும் கட்டுப்பட்டு வாழ கூடிய பாக்கியம் செய்வானாக!![ஆமீன்]
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!