செவ்வாய், ஜூலை 28, 2015

அடக்கத்திற்குச் செல்லும்போது நமக்கு அடக்கம் வேண்டும் !

 அடக்கத்திற்குச் செல்லும்போது நமக்கு அடக்கம் வேண்டும் !!! அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்........
அல்லாஹ்வின் நல்லடியார்களே! மரணம் இருப்பது  என்பது எல்லோருக்கும் தெரியும் ! தெரிந்தாலும் மனிதன் அதை மறந்து தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான். மரணத்தை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அந்த மரணத்தை மறந்து வாழ முடியும்!  மனிதன் மரணத்தை மறந்து வாழ்வதினால் அவனுக்கு உலக பற்று அதிகமாக இருக்கும். இன்னும் இந்த உலகத்தில் அதிக காலம் வாழ வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் தோன்றும். ஆனால் முஸ்லிம் அப்படி இந்த உலகத்தில் வாழ முடியாது. அப்படி வாழ கூடாது. மரணத்தை நினைவுக் கூற வேண்டும்.  மண்ணறையை ஜியாரத் செய்ய வேண்டும்.  ''ஒரு நாள் நானும் இந்த இடத்திற்கு நிச்சயமாக வர வேண்டியவன் '' என்ற எண்ணம் ஒவ்வொரு முஸ்லிம்க்கு வர வேண்டும்.

பெருமானார் [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. மரணம் என்பது உண்மையான முஃமினுக்கு காணிக்கையாகும்.
ஹதீஸ்..

பெருமானார் [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. இரண்டு வஸ்த்துக்களை மனிதன் வெறுக்கிறான். ஆனால் அவ்விரண்டும் மனிதனுக்கு உண்மையில் மேளானவைகளாகும் . 1. மரணத்தை வெறுக்கிறான். உண்மையில் மரணத்தின் மூலம் உலக குழப்ப நிலையை விட்டும் தன்னை தற்காத்துக் கொள்கிறான்.2. செல்வம் மிகவும் குறைவாக இருப்பதை வெறுக்கிறான். உண்மையில் செல்வம் குறைவாக இருப்பது மறுமையின் கேள்வி கணக்கை லேசாக்குகிறது.
நூல் அஹ்மத் ]

ஒருவர் இறந்துவிட்டார் , அவரைப் பார்க்க நிறைய பேர்கள் வருவார்கள் . அங்கே சிலர் நடந்துக் கொள்ளும் விதம். குறிப்பாக பெண்கள் எப்படி அந்த இடத்தில் நடந்துக் கொள்வார்கள். இறந்தவரின் வீட்டில் பேசக் கூடாத விடயங்கள் பேசுகிறார்கள் . அங்கே கூட அவர்களுக்கு மரணத்தின் பயம் வரவில்லை. நாமும் ஒரு நாள் மரணிப்போம் என்ற எண்ணம் வரவில்லை.

மரணித்தவரைக் காணச் செல்லுதலும், ஜனாஸா வுடன் செல்லுதலும் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களின் வழிமுறை [சுன்னத்] என்பதுடன், படிப்பினையும், இறை அச்சத்தையும், மரண நினைவையும் உண்டாக்குகின்றன.மரணித்தவருக்காக அழுபவர்கள்.உண்மை நிலையை உணர்ந்திருந்தால், மரணித்தவருக்காக அழ மாட்டார்கள். மாறாக இம்மரணம் தனக்கும் ஒரு நாள் ஏற்படுமே என்று பயந்து அழுவார்கள். 

ஜனாசாவுடன் செல்லும்போது மரணத்தைப் பற்றிச் சிந்தித்தவர்களாகச்  செல்லுவார்கள். ஜனாசாவுடன் செல்லும்போது , வீண் பேச்சுக்கள் பேசாமல், தச்பீஹ்  தஹ்லீல்கள் சப்தமின்றி கூறிச் செல்ல  வேண்டும். 

இன்று சில ஊரில் ஒருவர் இறந்து விட்டால், அவர் தௌஹீத் ஜமாத்தாக  இருந்தால் . அவரை அடக்கம் செய்யும் பொது , எவ்வளவு குழப்பம் , சண்டை , சச்சரவு.  ஜனாஸாவை வைத்துக் கொண்டு எவ்வளவு பிரச்சனை நடக்கிறது. இப்படி இருக்கும்போது எப்படி நமக்கு மரணம் சிந்தனை வரும்..? அடக்கும் இடத்தில் சிலருக்கு அடக்கம் இல்லாமல் பதட்டம் தான் நிலவுகிறது. வீண் பேச்சுக்களும்  , வாக்குவாதங்களும் தான் அங்கே நடக்கிறது. 

ஒரு மய்யித்திற்கு நீங்கள் சென்றால், அந்த மய்யித்தை பற்றி நல்லவற்றையே கூறுங்கள். ஏனெனில் நீங்கள் கூறும் வார்த்தைக்கு வானவர்கள் ஆமீன் கூறுகிறார்கள். ஆதாரம்.. மிஷ்காத்]

ஒரு முறை ஒரு ஜனாஸா சென்று கொண்டிருந்தது. அப்போது , அந்த மய்யித்தை  பற்றிப் புகழ்ந்து பேசப்பட்டது. இதைச் செவியுற்ற நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் [அப்புகழ் அவருக்குக்] கடமையாகி விட்டது, என்று மூன்று முறை கூறினார்கள் . மற்றொரு ஜனாஸா சென்று கொண்டிருந்தபோது, அந்த மய்யித்தை பற்றி இகழ்ந்து துரைக்கப்பட்டது. நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் , முன் போல்  ''கடமையாகி விட்டது'' என்று மூன்று முறை கூறினார்கள். இது பற்றி நபிகள் நாயகம்  [ஸல்] அவர்களிடம் உமர் [ரலி] அவர்கள் கேட்டபோது ''எவரை நீங்களெல்லாம் புகழ்ந்துரைத்தீர்களோ, அவருக்குச் சுவர்க்கம் கடமையாகி விட்டது! எவரை நீங்களெல்லாம் இகழ்ந்துரைத்தீர்களோ அவருக்கு நரகம் கடமையாகி விட்டது '' என்று பதிலளித்த நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் பூமியில் நீங்கள் தான் இறைவனின் சாட்சி யாலர்கலாயிருக்கிறீர்கள் '' என்று மூன்று முறை கூறினார்கள்.
ஆதாரம் .. முஸ்லிம்]

அன்பு சகோதர/ சகோதரிகளே! கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் !
இன்ஷாஅல்லாஹ் இனி வரும் காலத்தில் நாம் மார்க்கத்தை நன்றாக அறிந்து , செயல் படுத்த வேண்டும் . மரணத்தை அதிகமாக நினைவுக் கூறுவோம்! அல்லாஹ்வைச் சந்திக்க அதிகம் அதிகம்  ஆசை வைப்போம்!
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.   

  

2 கருத்துகள்:

  1. இன்னமும் கொஞ்சம் அழுத்தமாக, ஆழமாக செய்திகளை தந்திருக்கலாம். எனினும் கால நேரத்திற்கு தேவையான தகவல்.
    جزاك الله خيراً بارك الله فيك

    பதிலளிநீக்கு
  2. இன்னமும் கொஞ்சம் அழுத்தமாக, ஆழமாக செய்திகளை தந்திருக்கலாம். எனினும் கால நேரத்திற்கு தேவையான தகவல்.
    جزاك الله خيراً بارك الله فيك

    பதிலளிநீக்கு

Welcome to your comment!