அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

திங்கள், ஜூலை 27, 2015

சிந்தனைக்குச் சில வரிகள்

அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன் ...

[நபியே! அவர்களை நோக்கி] நீர் கூறும்.. நீங்கள் வெருண்டோடும் மரணம் உங்களை நிச்சயமாகப் பிடித்துக் கொள்ளும்...
அல்குர்ஆன்]

நீங்கள் எங்கிருந்த போதிலும், மரணம் உங்களை அடைந்தே தீரும்- மிகப் பலமான உயர்ந்த [கோட்டை] கொத்தளங்களின் மீது நீங்கள் இருந்தபோதிலும் சரியே..
அல்குர்ஆன் ]

வழிகாட்டும் வான்மறை அல்குர்ஆனும் நானில மக்களுக்கு நல்ல பல அறிவுரைகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் வள்ளல் நபிமணி [ஸல்] அவர்களின் நன்மொழியும் இம்மண்ணில் வாழுகின்ற எவரும் மரணத்தை விட்டும் ஒரு போதும் தப்பிக்க முடியாது ,, நிச்சயமாக ஒரு நாள் மரணித்தே ஆகவேண்டும் என்பது சுட்டிக் காட்டி எச்சரிக்கின்றன.


மரணம் அடையாமல் இம்மண்ணில் என்றென்றும் வாழ்வோம் என்று எவரும் உறுதி கூறமுடியாது . நாம் ஒவ்வொருவரும் பிறக்கின்றபோதே  'மரணம்'' என்ற பூ மாலையை கழுத்தில் அணிந்தவர்களாகவே இம்மாய உலகிற்கு வந்தோம். மேலும் நமக்கு மரணம் எப்போது? எந்த நாளில்? எந்த மாதத்தில்? எந்த வருடத்தில்? எந்த பூமியில்? எந்த நிலையில் ? எப்படி மரணம் நம்மை வந்து சேரும் என்பதை அறிய முடியாது.பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலுள்ள குறுகிய வாழ்நாளிலே என்றும் அழியாத வாழ்க்கையான ஆகிரத்து [மறுமைக்கு] க்குத் தேவையான அனைத்து சாதனங்களையும் தயார் செய்து கொண்டு செல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம்.

எனவே இவ்வுலக வாழ்வில் ஈமானுடன் நன்மைகள் பல செய்து வாழ்ந்து மறைவோமானால் 'மறுமை' எனும் அழியாப் பெருவாழ்வு இன்பமயமான அன்பு வாழ்வாக அமையும். அவ்வாறு இல்லையென்றால் என்றும் நீங்காத, அழியாத, பல கஷ்டங்களை துன்பங்களை மறுமையில் அடைய நேரிடும்.

ஆதலால் மரணத்தை நினைத்து மறுஉலக வாழ்வு சாந்தியையும் மகிழ்ச்சியும் நிறைந்த திருவாழ்வாக அமைவதற்குரிய வழிமுறைகளை அறிந்து செயலாற்றி உண்மையான முஃமின்களாக இவ்வுலகை விட்டும் செல்ல முயற்சிப்போமாக!

நாம் பிறந்திவிட்டோம். இறப்பும் நிச்சயமாக ஒன்று . அதை எவரும் சந்தேகிக்கவோ மறுக்கவோ இயலாது. பிறப்பு, இறப்பிற்கு இடையில் உள்ளதுதான் வாழ்க்கை என்பது  . இந்த வாழ்க்கையை இரண்டு வகையில் கழிக்கலாம் .

முதலாவது .. எப்படியும் வாழ்வது , அதாவது மனம் போன போக்கில் கண்டதே காட்சி,, கொண்டதே கோலம் என்ற வகையில் வாழ்வது. இவ்வாறு வாழ்பவர்கள் எந்த நபியையோ, வேதத்தையோ, யாருடைய அறிவுரைகளையோ பிபற்றி நடக்க வேண்டியதில்லை. சுருங்கக் கூறுமிடத்து, இப்படிப்பட்டவர்களின் வாழ்க்கை ஆடு, மாடு போன்ற மிருகங்களின் வாழ்க்கையை விட மிகவும் மட்டகரமான இழிவான வாழ்க்கையாகவே இருக்கும்.

மனித குளத்தில் இப்படிப்பட்ட வாழ்க்கை நீடித்தால் கொடிய பல செய்கைகளும் , மானங்கெட்ட செயல்களும் நாளக்கு நாள் பெருகிக் கொண்டே போய் இறுதியில் உலக நாசத்தையே உண்டாக்கிவிடும். இவ்வித வாழ்க்கை வாழும் மக்கள் எந்த நாட்டில் அதிகம் வசிக்கிறார்களோ அந்த நாட்டில், அல்லாஹ்வின் தண்டனையும் பற்பல ரூபத்தில் இறங்கிக் கொண்டேயிருக்கும்.

இரண்டாவது .. இப்படித்தான் வாழவேண்டும் என்பது. இது முற்றிலும் முன்பு கூறப்பட்ட வாழ்க்கைக்கு முரணானது. இவ்விதம் வாழ நினைப்பவர்கள் ஏதாவது ஒரு மார்க்கத்தைப் பின்பற்றிஎயாக வேண்டும்  . எனவே இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றி நடக்கக் கூடிய நாமும் இவ்வகையைச் சார்ந்தவர்களே. நாம் நமது இஷ்டத்திற்கு வாழ முடியாது.

நமக்கு இரு கண்மணிகளாக  திகழக் கூடிய உலகப் பொதுமறை அல்குர்ஆன்  அண்ணலார் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களின் ஹதீஸ் கருவூலங்களையும் நமது மண்ணுலக வாழ்க்கையின் வழிகாட்டியாகக் கொண்டு வாழக் கடமைப்பட்டிருக்கிறோம்.

நமது வாழ்நாளில் ஏற்படக்கூடிய அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தேவையான எல்லா முடிவுகளையும் இவ்விரு அறிவுக்களஞ்சியங்களில் நாம் நிச்சயமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்விதம் வாழ்வது சிறிது கஷ்டமாகத் தோன்றினாலும் இவ்வித வாழ்வில்தான் மறுமை வாழ்வின் பேரானந்தமும் இவ்வுலக வாழ்வின் இனிய சுகமும் மறைந்திருக்கின்றது. இத்தகைய இனிய பெருவாழ்வை பகுத்தறிவு படைத்த ஒவ்வொரு மனிதனும் விரும்புவான்  என்பதில் சந்தேகம் இல்லை. தூய இஸ்லாமிய நல்லற வாழ்வு வாழ அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக!
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!