அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

திங்கள், ஆகஸ்ட் 10, 2015

மண்ணறை வேதனை ! மாபெரும் போதனை!


அல்லாஹ்வின் திருபெயரால் ......
பிறந்த ஒவ்வொருவரும் ஒருநாள் இறக்க தான் வேண்டும்! மரணம் முடிவு அல்ல! ஆரம்பம் ஒரு புதிய வாழ்க்கைக்கு! 
அல்லாஹ்வின் திருவசனங்கள் பாருங்கள் ! படியுங்கள்! படிப்பினைப் பெறுங்கள்! 

''நிச்சயமாக நாம் அல்லாஹூக்காகவே [வாழ்கிறோம்] மேலும், நாம் நிச்சயமாக அவனிடமே மீளக் கூடியவர்களாய் உள்ளோம்!''
அல்குர்ஆன் 2..156]

''ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை அனுபவித்தே தீரும்.. பின்னர் நீங்கள் [விசாரணைக்காக] நம்மிடம் கொண்டு வரப்படுவீர்கள்''.
அல்குர்ஆன் ..29..57]

''நபியே! உங்களுக்கு முன் எந்த மனிதனுக்கும் நாம் மரணமற்ற வாழ்வை ஏற்படுத்தவில்லை. ஆகவே நீங்களே மரணமாகிய பிறகு [மனிதர்களாகிய] அவர்களா என்றென்றும் வாழப் போகிறார்கள்! 
அல்குர்ஆன் ..21..34]

''நீங்கள் எங்கிருந்த போதிலும், மரணம் உங்களை வந்தடைந்தே தீரும். வலுவான கோட்டைக்குள் நீங்கள் இருந்த போதிலும் சரியே !''
அல்குர்ஆன்..4..78]

கலிமாவின் சிறப்பு 
ஒருநாள் நபிமணி [ஸல்] அவர்கள் , உமர் [ரலி] அவர்களை நோக்கி , ''ஓ ! உமரே! உம்முடைய ஈமானை புதுப்பித்துக் கொள்ளும்'' என்றார்கள்! நான் தான் கலிமாவை சொல்லி ஈமான் கொண்டாகி விட்டதே ,, இப்போது ஏன்  புதுப்பிக்க வேண்டும் என்று கேட்டார்கள்! 

''ஓ ! உமரே உடலில் ரூஹ் இருக்கும் வரையில் இவ்வுலக மறதி ஈமானை மூடிக்கொண்டிருக்கும் ஆகையால்,, அடிக்கடி கலிமாவை சொல்லி திக்ரு செய்து மறதியை நீக்கி ஈமானை பிரகாசிக்கச் செய்வீராக! என்று திரு நபி [ஸல்] அவர்கள் பதில் கூறினார்கள். 

ஒருவரின் உயிர் உடலை விட்டுப் பிரியும் நேரத்தில் உயிர் வாங்கும் அமரர் வருகை தந்து,, மரிப்பவருடைய அவயவங்களை பிளந்து, பார்க்கின்றார் . அங்கு எவ்வித நன்மையையும் இல்லாததால் பிறகு இவருடைய இதயத்தை பிளந்து பார்க்கின்றார். அதிலும் எவ்வித நன்மை இல்லாததால் அவருடைய இரு இதழ்களையும் விரித்துப் பார்க்கின்றார்! அவருடைய நாவில் ஒரு மெல்லிய ஓசை லாயிலாஹ இல்லல்லாஹூ என்று சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்டார்கள்,, எனவே இந்த பரிசுத்த கலிமாவின் பொருட்டால், அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன! 
எவரொருவர் மரணிக்கும்போது  , ''லாயிலாஹ இல்லல்லாஹூ '' என்று சொல்லுகின்றோ அவர் சுவர்க்க வாதியாகின்றார்! 
திருநபி [ஸல்] 

உலகில் மூன்று தோழர்கள் !

ஒருவருக்கு மூன்று தோழர்கள் இருந்தார்கள். அவருக்கு மரணவேளை வந்துவிட்டது. அவர் தம் தோழர் ஒருவரிடம் நான் மரணம் அடையும் நிலையில் இருக்கிறேன். இந்நிலையில் எனக்கு நீ என்ன உதவி செய்யப் போகிறாய்? என்று வினவினர். உங்கள் வாழ்நாள் முழுதும் உதவியாக இருந்தேன். ஆனால் இப்போது எனக்கு எந்த உதவியும் செய்ய  முடியாது என்று சொன்னார். அதைக் கேட்ட மனிதர்  வேதனை அடைந்தார். தம் இரண்டாவது தோழரை அழைத்து உதவி வேண்டினார். நீங்கள் இறந்ததும் உங்களுக்கு செய்ய வேண்டிய கருமங்களை செய்து மண்ணறையில் அடக்கம் செய்கிறேன் என்று இரண்டாவது தோழர் கூறினார்.  பின் மூன்றாவது தோழரை அழைத்து உதவி வேண்டினார்.  ''தோழரே! வேதனைப்படாதீர்! உங்கள் ஆவி பிரிந்த பின்னும் நான் உங்களோடு வருவேன்  . மண்ணறையிலும் மறுமைநாளிலும் துணையாகவே இருப்பேன்'' என்று மூன்றாவது தோழர் கூறினார்.!

இந்தக் கதையை எம்மான் நபி [ஸல்] அவர்கள் கூறி தம் சஹாபாக்களை நோக்கி இந்த தோழர்கள் யார்?  என்று உங்களுக்கு விளங்குமா! என்றார்கள். சஹாபாக்கள் மவுனம். பிறகு நபி [ஸல்[ அவர்கள்  முதலாவது தோழர் அவருடைய பொருட் செல்வம், இரண்டாவது தோழர் அவருடைய குடும்பமாகும் மூன்றாவது தோழர் அவர் வாழ்க்கையில் செயலாற்றிய நல்  அமல் என்று விளக்கம் தந்தார்கள். !

உலகத்தில் மூன்று தோழர்களும் அவசியம் . இருப்பினும் மூன்றாவது தோழருக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவர் தான் நம்முடம் கடைசி வரை இருக்க போகிறவர்  என்பதை ஒவ்வொருவரும் மனதில் பதிய வைத்துக் கொள்ளவும்  . 

மறுமைக்கு தேவைப்பட்டதை தயாரிக்காதவர்கள், மரண வேளையில் வேதனைப் படாமல் இருக்க முடியாது!  இன்று இப்பொழுது கவனமான நற் செயல் புரியுங்கள்!  ஊரார் உங்களைப் பற்றி பலதும் பேச ஆரம்பிப்பார்கள்,, பணம் சேர்த்தான், நல்ல காரியங்களுக்கு செலவு செய்தானா? அதை அனுபவிக்க போகிறவன் யார் யாரோ என்று பேசுவார்கள்!  மரணம் நெருங்கியதும் அவன் பேச  முடியாது. அவன் நிலையைப் பார்ப்பவர்கள் அனுதாப்பப்படுவார்கள்! உள்ள நிலை இதுதானே,, அப்போது உங்கள் நிலையம் இப்படித்தானே இருக்கும், எல்லோருடைய அனுதாபமும் உங்களுக்குப் பயன் தருமா?  எவருடைய உதவியும் உங்களுக்கு நலம் தருமா? 

இன்னும் சில நேரத்தில் உங்கள் உயிர் உடலை விட்டுப் பிரியப் போகிறது! அதன் பிறகு இந்த உலகில் உங்களுக்கு இடமில்லை,, அப்புறம் உங்களை கழுவி நீராட்டி,, மண்ணறையில் போட்டு விடுவார்கள்! இந்த உடலை நீங்கள் எப்படி எல்லாம் பேணி காத்து வந்ததில் என்ன பயன்? கேவலம் உங்கள் ஆயுள் முழுதும் , காலுக்கு கீழ் பறந்து கிடந்த மண்ணறை உங்கள் உடலை சுவைக்கப் போகிறது? அதற்க்கு பிறகு உங்கள் சொத்துக்கள் பங்கு போடுவதற்கு உற்றார்,, உறவினர்கள் ஒன்று கூடுவார்கள்! இது தான் உலகம்! 

நீ எந்த விதமான ஆடைகளை அணிந்து கொள்ள விரும்பினால் அணிந்து கொள்! ஆனால் நீ கடைசியாக அணிய வேண்டிய ஆடை கபன் . மய்யத்திற்கு  அணிவிக்க வேண்டிய ஆடை  என்பதை மட்டும் மறந்து விடாதே! மேலும், நீ எந்த வாகனத்தில் மீது ஏறிச் சுகிக்க விரும்பினாலும் சுகித்துக் கொள்! ஆனால் நீ கடைசியாக ஏறவேண்டிய வாகனம் என்ன தெரியுமா ? சந்தூக்கு [பிணப் பெட்டி] என்பதை மறந்து விடாதே! பெண்களே ! உலகில் உங்கள் கணவன்மார்களிடம் எந்த ஆடை வேண்டும் அந்த ஆடை வேண்டும் என்று  நச்சரிக்காதீர்கள் . வாங்கிக் கொடுப்பதை அணிந்துக் கொள்ளுங்கள்! மற்ற பெண்களப் பார்த்து அதுப் போல வேண்டும் என்று ஆசைப்படாதீர்கள்!  இருப்பத்தைக் கொண்டு திருப்தி கொள்ளுங்கள்! [அல்ஹம்துலில்லாஹ்![ இறந்த பிறகு எனக்கு அந்த ஆடையை கபனிடுங்கள்  என்று கூற முடியாது! ஆண்களே ! எனக்கு அந்த வாகனம்  வேண்டும் . இந்த வாகனம் வேண்டும் என்று உங்கள் பெற்றோர்களை  கஷ்ட்டப்படுத்தாதீர்கள்!  பணம் உள்ளவர்கள் நீங்கள் வைத்திருக்கும் வாகனத்தைக் கொண்டு பெருமை கொள்ளாதீர்கள்! ஏசி கார்களில் தான் போவேன் என்று  ஆடபரமும், ஆணவமும் கொள்ளாதீர்கள . ஒருநாள் நீங்களும் சரி நாங்களும் சரி ஒரே வாகனம் தான் அதுதான் சந்தூக்கு'' ! 

மண்ணறையில் நமக்கு சுவர்க்கத்தின் பூஞ்சோலையா? அல்லது நரகத்தில் ஒரு படுக்குழியா ? எது என்பதை நீங்களும் , நாங்களும் தீர்மானிக்க வேண்டும்! நல்ல அமல்கள் செய்ய வேண்டும் ! நம் இறுதி முடிவு அல்லாஹ்வின் கையில் உள்ளது ! 
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!