அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

திங்கள், ஆகஸ்ட் 31, 2015

நோயினால் வரும் நன்மை !

அல்லாஹ்வின் திருபெயரால்.....

மனிதனுக்கு நோய் வந்தால் என்றால் மனமும் , உடலும் சோர்ந்து விடும் . உடலில் ஒருவித மாற்றங்கள் காணப்படும். முகத்தில் பிரகாசம் இருக்காது. பசி இருக்காது. நாவில் ருசியும் இருக்காது. செல்வத்திலே சிறந்தது 'ஆரோக்கியம்' தாம்! ஒருவருக்கு நோய் வந்தால் , அவர் எப்படி பொறுமைக் காக்க வேண்டும். 

பொறுமையாக இருப்பது என்பது ஒரு எளிதான காரியம் அல்ல . ரொம்ப சிரமம்தான்! பொறுமை காக்க , அல்லாஹ்வின் உதவியும், கிருபையும் அவசியம் வேண்டும். பொறுமையின் தன்மை நமக்கு அல்லாஹ் தந்துவிட்டான் என்றால் ''அல்ஹம்துலில்லாஹ்!'' பொறுமையாக இருக்கும் விசுவாசிகளைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்..

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்,, ஆனால் பொறுமையுடையோருக்கு [நபியே] நீர் நன்மாராயங் கூறுவீராக!

[பொறுமை உடையோராகிய] அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது , 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்,, நிச்சயமாக அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள்.

இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள் .

அல்லாஹ்வுக்காக எல்லாத்தையும் சகித்துக் கொண்டு பொறுமையாக இருப்பவரின் அந்தஸ்த்து உயர்வானது. நன்மைகள் , நற்கூலிகள் கணக்கின்றி பெறுவார்.

நோயினால் வரும் நன்மை என்ன என்பதைப் பார்ப்போம்..
ஒரு மனிதனுக்கு வியாதி ஏற்படும்போது இறைவன் நான்கு அமரர்களை அவனிடம் அனுப்புகிறான்,, அவர்களில் முதல் அமரருக்கு அந்த மனிதனின் வலிமையை அகற்றும்படி இறைவன் கட்டளையிடுகிறான்! அவர் அப்படியே செய்கின்றார். அந்த மனிதன் உடல் குன்றி விடுகிறான்!

இரண்டாவது அமரரிடம், அந்த மனிதனின் வாய் ருசியை அகற்றும்படி கட்டளையிடுகிறான். அவர் அப்படியே செய்கிறார்,, அந்த மனிதனுக்கு வாய் கசக்கின்றது.

மூன்றாவது அமரரிடம் அந்த மனிதனின் முகத்தில் பிரகாசத்தை அகற்றும்படி கட்டளையிடுகிறான்,, அவர் அப்படியே செய்கிறார்,, அந்த மனிதனின் முகம் மாறி களை  இழந்து விடுகிறது!

நான்காவது அமரரிடம் அந்த மனிதனின் சிறு பாவங்களை அகற்றி விடும்படி கட்டளையிடுகிறான்! அவர் அப்படியே செய்கிறார். அந்த மனிதன் பாவ மற்றவனாக ஆகி விடுகிறான். 

இறைவன் அந்த மனிதனுக்கு சுகத்தைக் கொடுக்கும்போது , அந்த அமரர்களை அழைத்து..
முதல் அமரரிடம் வலிமையை அந்த மனிதனுக்கு கொடுத்து விட கட்டளையிடுகிறான்,,  அம்மனிதன் வலிமை பெற்று விடுகிறான். இரண்டாவது அமரரிடம் அந்த மனிதனின் வாய் ருசியை கொடுத்து விடும்படி கட்டளையிடுகிறான்,, அந்த மனிதனின் வாய் ருசி மீண்டும் வந்து விடுகிறது! மூன்றாவது அமரரிடம் முகத்தின் பிரகாசத்தை கொடுக்கும்படி கட்டளையிடுகிறான்! அந்த மனிதனுக்கு பழையபடி களையுடன் இருக்கின்றான்! நான்காவது அமரர் இறைவனை நோக்கி, யா அல்லாஹ் ! நாங்கள் நான்கு அமரர்கள் வந்தோம்,, மற்றும் மூன்று பெரும் உன் கட்டளையைபடி செய்துவிட்டார்கள்!  நான்  அந்த மனிதனின் பாவங்களை சுமந்து கொண்டு இருக்கிறேனே. எனக்கு ஏன் கட்டளையிடவில்லை என்று அந்த அமரர் வினவியபோது அதற்கு அல்லாஹ்  இந்த மனிதனுக்கு வியாதி என்னும் துன்பத்தை கொடுத்ததினால் அவனுடைய பாவனைகளை மீண்டும் அவன் தலையில் சுமத்திட என் கருணை உள்ளம் சம்மதிக்கவில்லை என்று இறைவன் கூறினான். உடனே அந்த அமரர் இந்த பாவங்களை என்ன செய்வது என்று வினவ, அப்பாவங்களை கடலில் எரிந்து விடும்படி இறைவன் கூறினான்! 

ஒரு முஃமினுக்கு ஏற்படும் நோயினால் அவனுடைய சிறு பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.  [பெரும் பாவங்கள் தவ்பா செய்யாதவரை மன்னிக்கபடுவதில்லை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்] 

நோய் வருவதேன்? 
நோய்கள் மூலமாகவும் வறுமை மூலமாகவும் ஒவ்வொரு மனிதன் மீதுள்ள ஒவ்வொரு பாவங்களுக்கும் தக்கவாறு இறைவன் வேதனை கொடுத்து விடுகிறான். 
ஒரு உண்மையான ஈமான் தாரிக்கு ஒரு வியாதி வந்து அதனை அல்லாஹ்  நீக்கிவிட்டால் அது அவர் செய்த பாவங்களுக்கு பரிகாரமும் வருகின்ற காலத்தில் அவருக்கு ஒரு பாடமாகவும் அமைந்து விடுகின்றது. 

இறை இல்லம் எது..?
பொறுமை,[ஈமான் உறுதி இவ்விரண்டும் எந்த இதயத்தில் இருக்கின்றதோ அதுவே இறை இல்லம்  .
[ஹதீஸ் குத்ஸியில் இறைவன்]

மறைவாக இருக்கும் மனிதருக்காக ஒரு மனிதன்  வேண்டும் துஆ பிரார்த்தனை போன்று அதி விரைவாக ஏற்றுக் கொள்ளும் பிரார்த்தனை வேறில்லை. 
நூல்.. அபூதாவூத், முஸ்லிம்]

நல்ல விஷயங்களை படிப்பதோடு நிறுத்திவிடாமல் , அவைகளை நம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க  வேண்டும் . நாம் கற்றுக் கொண்ட நல்ல விஷயங்களை நாம் மட்டும் கடைபிடிக்கும் மட்டும் அல்லாமல் பிறருக்கும் நாம் எத்தி வைக்க வேண்டும். இதனால் நமக்கு இரு பலன்கள் கிட்டும். நம் இறப்புக்கும் பிறகும் ஒரு பலன் நமக்கு வந்துக் கொண்டே இருக்கும். [நன்மைகள்] 
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
சத்திய பாதை இஸ்லாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!