செவ்வாய், ஆகஸ்ட் 25, 2015

உங்க அப்பான் வீட்டு சொத்தா..? அம்மா வீட்டு சொத்தா ..?

உங்க அப்பான் வீட்டு சொத்தா..? அம்மா வீட்டு சொத்தா ..?

அன்பார்ந்த சகோதரர்களே ! இந்த கட்டுரையைக் கவனமாக படியுங்கள் ! உங்களுக்கு அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் எத்தி வையுங்கள் ! இன்று பல அமைப்புகள் இருக்கின்றன எதை குறிப்பிட விரும்ப வில்லை . முஸ்லிம்கள் கொடுக்கக் கூடிய சதக்கா அல்லது ஜகாத்து இன்னும் சந்தா அல்லது நன்கொடைகள் இவைகள் மூலமாக தான் இயக்கங்கள் [அமைப்புகள் ] இயங்கி வருவதை எல்லோரும் அறிவார்கள். இன்று அந்த பணம் எப்படி வீண் விரயம் செய்ய படுகிறது, தவறான வழிகளில் கையாலபடுகிறது என்பதை அல்லாஹ் நன்கு அறிவான். அல்லாஹ் எல்லாத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். இயக்கத்தில்  உள்ள பொறுப்பு தாரிகளே ! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் !  மறுமை நாளில்  தண்டனைக் குரியவர்களாக ஆக வேண்டாம் ...
சத்திய பாதை இஸ்லாம்

இறைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஸகாத்/சதகா வசூலிப்பிற்காக இப்னுல் லுதைபாஹ் என்ற சஹாபியை அனுப்பி வைக்கின்றார்கள், அவற்றை சேகரித்துக் கொண்டு வந்த அவர் : இது திறைசேரிக்கு உரியது, இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்று கூறினார்.
அதைக்கேட்ட ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கொடியிருந்த சஹாபா தோழர்களை நோக்கி அல்லாஹ்வை துதித்து புகழ்ந்து விட்டு கேட்கின்றார்கள் :
நான் ஒரு பிரதிநிதியை அதிகாரபூர்வமாக நியமித்து ஸகாத் வஸுளுக்காக அனுப்புகின்றேன், அவர் திரும்பி வந்து இது திறைசேரிக்கு உரியது, இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்று கூறுகிறார், அவரது நிலையை அறிவீர்களா ?
அவரது தாயார் வீட்டில் அல்லது தந்தை வீட்டில் அமர்ந்திருந்தால் அந்த அன்பளிப்பு அவரை தேடி வருமா எ ன்று? வினவினார்கள்.பின்னர் :
இந்த முஹம்மதுடைய உயிர் எவர் பிடியில் இருக்கிறதோ அவர் மீது சத்தியமாக அவ்வாறு பெறப்படும் அன்பளிப்புக்களை சுமந்தவராக நாளை அவர் அல்லாஹ்வை சந்திப்பார்.
கத்துகின்ற நிலையில், ஒரு ஒட்டகையை ஒரு பசுமாட்டை, அல்லது ஒரு ஆட்டை கழுத்தில் சுமந்தவராக உங்களில் ஒருவர் அல்லாஹ்வை சந்திக்க விரும்புவாரா ? என்று கேட்டார்கள்.
அதன் பின்னர் தனது இருகரங்களையும் (அக்குள் தெரியும் அளவிற்கு) வானின் பக்கம் உயர்த்தி அல்லாஹ்வே நான் எத்தி வைத்து விட்டேனா ? என இரண்டு முறை கூறினார்கள்..!
இந்த அறிவிப்பு புஹாரி முஸ்லிம் ஆகிய இரண்டு கிரந்தங்களிலும் பதிவாகியுள்ளது.
அன்று வரிவசூலிப்பு அவ்வாறு தான் நடந்தது, மக்களின் வரிப்பணத்தை ஏப்பம் விடுபவர் அல்லது குறை மதிப்பெடுகளுக்காக அன்பளிப்பு பெறுபவர்கள் மாத்திரமன்றி மக்கள் சேவைக்காக நியமனம் பெற்றவர்கள் அன்பளிப்புக்களை பெறுவதனை இவ்வாறு இரை தூதர் (ஸல்) வன்மையாக கண்டித்தார்கள்.
இலஞ்சம் பெறுவோரை இறைதூதர் (ஸல்) சபித்துள்ளார்கள், கொடுப்பவரும் எடுப்பவரும் நரகிற்குச் செல்வார்கள் எனக் கூறியுள்ளார்கள், அது இரை நிராகரிப்பு என்று வர்ணித்துள்ளார்கள்.
தேர்தல் காலங்களில் வணக்கச்தளங்களுக்கும், மஸ்ஜித்களுக்கும் உதவி என்ற பெயரிலும், தனி நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும் வழங்கப்பட்ட நிதிகள் அன்பளிப்புக்கள் எவ்வாறு எங்கிருந்து என்று அறியப்படாதவரை ஹராமாகும்.
பல இலட்சங்களில்,கோடிகளில் பொதுமக்கள் சொத்தை கொள்ளையிடும் பகல் கொள்ளை காரர்களிடம் நெருங்காதீர்கள், உழைப்பு என்ற பெயரில் அண்டிப் பிழைக்க முனையாதீர்கள், அவர்களை ஆவிகளுக்கு அழைத்து அசிங்கப் படுத்தாதீர்கள்.
குறுக்கு வழியில், ஹராமாக உழைக்கலாம் என்ற என்ன இருப்பின் அரசியலை அண்டாதீர்கள்.
என்ன அப்பன், வீட்டு சொத்தா..அம்மா வீட்டு சொத்தா ?
என்று கேட்டவர் வேறு யாருமில்லை..நமது உயிரிலும் மேலான கண்மணி முஹம்மத் (ஸல்) அவர்கள்..தொனியில் ஆழத்தை புரிந்து செயற்படுவோமாக.
இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளியன்று நாடு முழுவதும் மேடைகளில் உலமாக்கள் "இலஞ்சம் ஊழல் மோசடி-இஸ்லாமியப் பார்வை" என்ற தலைப்பில் குத்பா ஓதுங்கள்.
நன்றி.. கற்பிட்டியின் குரல் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!