அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வியாழன், ஆகஸ்ட் 20, 2015

வீரத்தோடு வாழ்ந்திடுவோம்

அல்லாஹ்வின் திருபெயரால் .............
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக..!!

அருமை நாயகம் [ஸல்] அவர்கள் கூறினார்கள் ,, ''யார் உண்மையில் அல்லாஹ்விடம் வீர மரணத்தைக் கேட்கின்றாரோ , அல்லாஹ் அவரை வீர தியாகிகளின் மேலான படித்தரங்களுக்கு அடையச் செய்வான். அவர் படுக்கையில் வைத்து மரணமுற்றாலும் சரி!
ஆதாரம்.. முஸ்லிம்]

காலம் பூராவும் பூனையாக வாழ்வதைவிட ஒருமணி நேரமாயினும் சிங்கமாக வாழ்ந்து மடி என்று பெரியவர்கள் அறிவுரை பகர்வார்கள்.


ஆம்! உண்மைதான்! கலிமாவைச் சொன்னவர் யாராக இருந்தாலும் உருக்குலையாத நெஞ்சத்துடன் வீரத்தையும் நெஞ்சுரத்தையும் தமது இலங்குருதியில் இரண்டறக் கலக்கச் செய்தாக வேண்டும் என்று இஸ்லாம் அறிவுறுத்துகின்றது.

கோழைத்தனம்! அச்சம்! பின்வாங்குதல் இதெல்லாம் ஒரு ஆண்மகனிடம் இருக்ககூடாது  அற்ப குணங்கள் என்று இஸ்லாம் சித்தரிக்கின்றது.
இஸ்லாம் முதன்முதலாக அறிமுகப்படுத்திக் கொண்ட ஆரம்ப காலம்,, ஓரளவு முஸ்லிம்களே கலிமாவை முழங்கிய வண்ணமிருந்தனர். ஜீவனுள்ள முழக்கம்! எவரின் அச்சுறுத்தலுக்கும் இம்மியும் அசைந்து கொடுக்காத வீரமுழக்கம்!

ஆனால் , விரல்விட்டு எண்ணக்கூடிய இந்த இறை நேசர்களுக்கு அவ்வப்பொழுது பல முனைகளிலிருந்து சவால்கள்! உங்களை அழித்துவிடுவோம் , பூண்டோடு மிதித்து விடுவோம் என்ற மிரட்டல்கள். இஸ்லாத்தின் வளர்ச்சியைக் காணப் பொறுக்காத கொடியோர் கூட்டம் முஸ்லிம்களது குரல் வளையை நெரித்து அமுக்கப்பார்த்தனர். அப்பொழுது தான் பின்வரும் வசனம் இறங்கியது.

''நபியே! முஃமின்களிடம் [எதிர்த்துப்] போராடும்படி தூண்டுவீர்! உங்களில் பொறுமையுள்ள 20 பேர் இருந்தால், அவர்களில் 200 பேரை வென்று விடுவர் , உங்களில் 100 பேர் இருந்தால், அவர்களில் 1000 பேரை வெல்வர்''.
அல்குர்ஆன் ..8.65]

இந்த வசனத்தை இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் ஆழமாக சிந்திக்க வேண்டும்.  இப்பொழுது இந்தியாவில் முஸ்லிம்களை எதிர்க்கும் கூட்டம் ஒரு சொர்ப்பக் கூட்டம்.  அவர்களை நாம் அல்லாஹ்வின் உதவியால், அருளால் நாம் அவர்களை வென்று விடலாம். நாம்தான் பல கூறுகளாக பிரிந்து இருக்கிறோம். ஒவ்வொரு கூட்டமும் மற்ற கூட்டத்தை ஏசி பேசிக் கொண்டு திரிகிறோம்! இப்படி இருக்க நமக்கு எப்படி அல்லாஹ்வின் உதவி கிட்டும்..? கொஞ்சம் சிந்திப்போம்!

அல்லாஹ் அந்த வசனத்தில் எவ்வளவு ஆணித்தரமாக தமது விசுவாசிகளைப் பற்றி இறைவன் நம்பிக்கை வெளியிடுகின்றான்? எனது விசுவாசிகள் இப்படித்தான் இருப்பர் ! எந்தப் பனங்காட்டு நரியின் சலசலப்புக்கு அஞ்சாதிருப்பர்  என்ற தனது கருத்தை அல்லாஹ் எவ்வளவு உறுதி தொனிக்க தெளிவு படுத்திவிட்டான்.

மேல்கூறிய வசனத்தில் அல்லாஹ் அந்த நல்லடியார்கள் பற்றி முஃமின் என்று குறிப்பிடுகின்றான். முஃமின் என்றால் யார்?
''அல்லாஹ் , ரசூலை முழுக்க நம்பி, அவனது துணை தமக்கு என்றும் உண்டு என்று உறுதிகொண்டு  அமைதி காண்பவர்''! இப்படிப்பட்டவருக்கு அஞ்சாமை, கோழைத்தனம் எங்கிருந்து வரும்! எனவே தான், அஞ்சா, நெஞ்சம் படைத்த அவர்கள் சிறு படையினராக இருந்தாலும்  ''இப்படைதொற்கின் எப்படை வெல்லும்'' என்ற வீர உணர்வுபடைத்தவர்கள் என்பதை அல்லாஹ் இவ்வசனத்தின் வாயிலாக சுட்டிக்காட்டுகின்றான்.

இன்னொரு வசனத்தின் வாயிலாக இக்கருத்தை நேரடியாகவே அல்லாஹ் இயம்பிக்காட்டுகின்றான்..

நீங்கள் சோர்ந்து போகாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்களே மேலானவர்கள்!

அப்படியானால் முஃமின் என்றும் சோரமாட்டார் , பின்தங்கமாட்டார் , மேலாண்மை பெரும் வரை ஓயமாட்டார் என்பதுதான் இவ்வசனத்தின் கருத்து. திருக்குர்ஆன் இப்படி வீர வசனங்களை எடுத்திச் சொல்லி நமக்கு உணர்ச்சி ஊட்டுகின்றது என்றால், இஸ்லாத்தை மக்களிடம் சமர்பிக்க வந்த சத்திய தூதர் அவர்களோ  மிகப் பெரும் வீரராக திகழ்ந்து காவியம் படைத்திருகின்றார்கள். அவர்கள் மிகப் பெரும் வீரர்,, பலசாலி, பராக்கிரமசாலி என்பதற்கு ஹஜ்ரத் உமர் [ரலி] அவர்கள் கூறும் புகழாரமே சான்று!

இன்ஷாஅல்லாஹ் இதன் தொடர்ச்சி பிறகு பார்க்கலாம்.........
அல்லாஹ் மிக்க அறிந்தவன்...  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!