அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

செவ்வாய், நவம்பர் 17, 2015

இஸ்லாமியனே நீ எவ்வகையில் முன் மாதரி...?

அல்லாஹ்வின் திருபெயரால்.........
''[விசுவாசிகளே!] நீங்கள்தான் மனிதர்களில் தோன்றிய வகுப்பார்களில் எல்லாம் மிக்க மேன்மையானவர்கள் , [ஏனெனில்] நீங்கள் [மனிதர்களை] நன்மையான காரியங்களை [செய்யும்படி] ஏவி , பாவமான செயல்களிலிருந்து [அவர்களை] விலக்குகின்றீர்கள் .'' [அல்குர் ஆன் ]

இஸ்லாமிய சமுதாயம் உயர்ந்த சமுதாயம் . உலகில் தோற்றுவிக்கப்பட்ட சமுதாயங்களில் சிறப்புமிக்க சமுதாயம். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் எக்காரணத்தால் அது சிறந்த சமுதாயமாகக் காணப்படுகிறது ?

இஸ்லாமியர் இறைவனை மறவாது ஐவேளை தொழுவதால், சிறந்த சமுதாயமாகக் கருதப்படுகிரார்களா ? அல்லது அவர்கள் உலகே வியக்கும் வண்ணம் ரமலான் மாதம் நோன்பிருப்பதால், அவ்வாறு திகழ்கிறார்கலா ? அல்லது ஆண்டுச்  சேமிப்பில் நாற்பதில் ஒன்றை தாராளமாக அவர்கள் ஏழைகளுக்கு வழங்குவதால், சிறப்பு மிகப் பெற்றார்களா? அல்லது அவர்கள் பெற்ற சிறப்பு உற்றார் , பெற்றாரை உவப்பதிநாலா ? ஊராரை மதிப்பதிநாலா ? 

இல்லை! இல்லை! இவைகளில் எதுவுமே காரணமில்லை! அக்கேள்விக்கான விடை குறித்து மேற்காணும்  இறைவசனம் விளக்கம் தருகிறது. நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும்  சிறப்பினால் தான் பாரம்பரிய மிக்க சமுதாயமாக அவர்கள் பரிணமிக்கிறார்கள். 

நன்மையை ஏவி தீமையை விலக்கி என்ற பண்பாட்டை திருக்குர் ஆன் நமக்குள்ளே [இஸ்லாமியர்களுகுள்ளே ] என்று குறுக்கிக் காட்டவில்லை . எனவே அப்பண்பாடு உலகளாவிய வண்ணம் விரித்து அமைய வேண்டுமென்றே விளங்க முடிகிறது.

உலகத்தில் சத்தியத்தை நிலைநாட்டி, அசத்தியத்தை ஒழிக்கும் மகத்தான பணி, இஸ்லாமிய சமுதாயத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளது . சுருங்கக் கூறுமிடத்து  உலகில் அநியாயங்கள் , முறைகேடுகள் நடைபெறுவதை இஸ்லாமிய சமுதாயம் பார்த்துக் கொண்டு வாளாது இருக்கலாகாது .

சமுதாயம் என்றால் என்ன?
தனிமனிதர்களின் தொகுப்புக்கே சமுதாயம் என்று கூறப்படும் . பல தனி மனிதர்கள் பங்கு கொண்ட பணியே சமுதாயப் பணியாகும் . தனி மனிதர்கள் பங்கு பெறாவிட்டால் சமுதாயப் பணி எப்படி உருவகம் பெற முடியும்?  இதன்படி உலக அரங்கில் நேர்மையும், நீதியையும் நிலை நாட்டும் பணி ஒவ்வொரு இஸ்லாமியரையும் சாருகிறது . அவர்கள் ஒவ்வொருவரும் அதற்காகப் பாடுப்படும்போதுதான் , அவர்கள் சார்ந்துள்ள சமுதாயம் சிறந்த சமுதாயமாக, இறைவனால் பாராட்டப்  பெற்ற உயர முடியும் .

நியாய விலைக் கடை
இஸ்லாமிய சமுதாயத்தின் அங்கத்தினர் ஆண்டி முதல் அரசன் வரை பல தரப்பட்ட மக்களாக வேறுபட்டு நிற்கும்போது , அநீதி அகற்றுவதை ஒவ்வொருவர்  மீதும் விதியாக்குவது சிரமமளிக்காதா ? அவரவர்களுக்கு  சொந்த பணிகள் இல்லையா ? என்ற கேள்வி எழ நியாயமுண்டு .
விலைவாசி கட்டுகடங்காத உயர்ந்து கொண்டிருக்கும்போது , அதைக் கட்டுப்படுத்துவதற்கு  அரசு நியாயவிலைக் கடைகளை ஏற்படுத்துவதைக் காணுகிறோம் . அதன் மூலம் தரமான பொருள் குறைந்த விலையில் கிடைக்க வழி செய்ய அவர்கள் முயல்கிறார்கள் .
அதுபோன்று ஒவ்வொரு இஸ்லாமியனும் தான் சார்ந்திருக்கும் பணியில் , எந்நிலையிலும் நியாயமான முறையில் தோற்றமளிக்க வேண்டும். வியாபரத்தை ஒரு முஸ்லிம் தொழிலாகக் கொண்டிருந்தாள் கொள்ளை லாபமடிப்பவர்கள்  மத்தியில் நியாயமான லாபத்தை அடிப்படியாக கொண்டு அவர் வியாபாரம் செய்ய வேண்டும். '' பாய்க்கு'' அந்த விலைக்கு கட்டுபடியாகும் போது உனக்கு கட்டுபடியாகாதா? என்ற கேள்வி பொது மக்கள் நாவில் தோன்றும் . அதனால் கொள்ளை லாபங்கள் ஒடுக்க முடியும்.

லஞ்ச லாவண்யங்கள் மலிந்த அலுவலங்களில் முஸ்லிம் அதிகாரிகள் ஊழலற்ற அதிகாரிகளாகத் திகழ்வார்கலானால், அவர்களுக்கு ஏற்படும் மதிப்பு மரியாதையைக் கண்டு மற்றவர்களும் திருந்த வாய்ப்பு ஏற்படும்.
இஸ்லாம் கூறும் நீதி , நேர்மையான அரசியல் முறையை நாடாளும் முஸ்லிம்கள்  துணிச்சலுடன் செயலாற்றுவார்கலானால் , அதனால் குற்றம் அழிவதை கண்ட அந்நியரும் அந்த ஆட்சி  முறையைப் பின்பற்ற மாட்டார்களா? அதனால் அநீதி ஆட்சி முறையைக் கலைந்த பெருமை இஸ்லாமியர்களுக்கு

வைத்திய தொழில் புரியும் இஸ்லாமியரும் , பொறியியல் வல்லுநர்களாகத் திகழும் முஸ்லிம்களும் பெருவாரியாக நியாயமான ஊதியத்தை அடிப்படையாகக் கொண்டு தொழில் புரிந்தால் , அத்துறையில் முறைகேடுகளை களைய முடியாதா?

இஸ்லாமியர்களின் கடைநிலை ஊழியர் , முதல்தர பதவி வகிப்போர் உட்பட அனைவரும் தத்தம் துறையில் நேர்மையைக் கடைபிடித்தால் , அவர்கள் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வார்கள் , அவர்களைப் போன்று மற்றவர்களும் வாழ முடியும் என்பதற்கு அவர்கள் முன்னுதாரணமாக , சாட்சியமாக ஆகிவிடுகிறார்கள்.

''நீங்கள் மக்களிடையே சாட்சியாளராக ஆகுவதற்காக , உங்களை நாம் நடுத்தர சமுதாயமாக ஆக்கியுள்ளோம் '' [அல்குர் ஆன் ] என்ற திருவசனம் மேல்  காணும் கருத்துக்கு வலுவூட்டுவதாக அமைகிறது.
அண்ணல் நாயகம் [ஸல்] அவர்கள் வாழ்வின் பலநிலைகளிலும்  நேர்மையாளராக நடந்ததைக் கண்டு , எண்ணற்ற மக்கள் தம்மைத் திருத்திக் கொண்டது வரலாறு காட்டும் உண்மையாகும்.
சிறுவராக இருந்த ஹஜ்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் ஒரு உண்மை பேசியதால் , ஒரு கொள்ளைக் கூட்டமே திருந்துவதற்கு காரணமாக அமைந்த வரலாறும்  நமக்கு எடுத்துக்காட்டாகும் .

ஒரு நல்லவராக வாழ்ந்தால் , அவரைப் பார்த்து எல்லோரும் திருந்துவர் என்ற உண்மையைக் குறித்தோ என்னவோ , ஒரு புலவர் '' நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டால் எல்லோருக்கும் பெய்யும் மழை'' என்று பாடினார்.

ஒவ்வொரு நிலையிலும் இஸ்லாமியர்கள் நேர்மையாளர்களாக வாழ்ந்துபோது  , முறைகேடுகள் நாட்டை விட்டே வெருண்டோடிய  முன்மாதறி அண்ணலாரின் காலத்திலும் , அதைத் தொடர்ந்து சஹாபாக்களின் காலத்திலும் ஏற்பட்டதை நாம் நன்கறிவோம் . குலபாக்களின் ஆட்சி முறை நம் நாட்டிலும் அமைய வேண்டுமென , நம் நாட்டின் முன்னோடிகள் ஆசைப்படும் அளவுக்கு சிறப்புக்குரிய வரலாறு நம்மிடம் உண்டு .

எனவே, இஸ்லாத்தின் அங்கத்தினர்களாகிய நாம் ஒவ்வொருவரும் , சிறியதோ, பெரியதோ நாம் சார்ந்திருக்கும் துறையால் ஒரு நல்ல முன்மாதரியாகத் திகழ வேண்டும். அதன் மூலம் அத்துறையில் அநியாயத்தை தகர்த்து , நியாயத்தை நிலை நாட்டப் பாடுபட வேண்டும்.
நன்றி.. o .M . அப்துல் காதிர் பாகவி /நர்கிஸ்

ஏற்படும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!