அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

செவ்வாய், நவம்பர் 24, 2015

நபி வழி! நல் வழி ![தொடர்ச்சி]

நபி வழி! நல் வழி ![தொடர்ச்சி]

அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்..

அருமை நபியவர்களின் அறிவாழத்தை  ஹஜ்ரத் வஹபு பின் முனப்பஹ்  [ரலி] அவர்கள் தெரிவிக்கின்றார்கள்..
''உலகம் தோன்றியது முதல், கியாமநாள் முடிவு வரை தோன்றும் மனிதர்கள் அனைவரது அறிவையும் , அறிவுக்கரசர்  எம்பெருமானார் ஒருவரது அறிவாற்றலையும் , இருபக்கம் வைத்து நிறுத்துப் பார்த்தால் உலகெங்கும் குவித்துள்ள மணர் பரப்புக்கு முன், ஒரேயொரு குவியலை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு சமமாகும். அண்ணலாரின் அறிவுக் கூர்மை அந்தளவு பரந்த ஒன்றாகும் .''


நபிகளாரின் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும், அத்தியாயமும் இந்த ஒப்பீட்டின் உயர்வுக்கு தெளிவுரை கூறும்.
முரட்டுத்தனமாகவோ , விபரமறியாமலோ தம்முடன் மோதிக் கொள்ள கூடியவர்களிடம் , மிகச் சாந்தமுடன் நடந்து , தமது விவேகத்தை பெருமானார் [ஸல்] அவர்கள் காட்டியிருக்கிறார்கள்.

ஹஜ்ரத் ஜூபைர்  பின் முன்இம் [ரலி] அவர்கள் கூறுகின்றார்கள்..
''நபிகளார் ஹூனைன் போரில் இருந்து திரும்பும் பொழுது , நானும் , சில நபித் தோழர்களுடன் உடன் இருந்தோம் . அப்பொழுது சில கிராம அரபுக்கள் நபிகளாரிடம்  வந்து ' அதைத் தாருங்கள்- இதைத் தாருங்கள் ' என நச்சரித்து பெருமானாரிடம் இருப்பதை எல்லாம் கேட்டு வாங்கிக் கொண்டிருந்தனர் . இறுதியில் நபிகளாரை அருகிலிருந்து முள் மரத்தருகே  தள்ளிக் கொண்டே வந்துவிட்டனர் . நபிகளார் மேனியில் போர்த்தியிருந்த மேலாடையையும் உருவிக் கொண்டனர் . அண்ணலார் இயல்பான பொறுமையுடன் கூறினார்கள்-
''நண்பர்களே! என்னுடைய மேலாடையைத் தந்து விடுங்கள். இந்த வனத்தில் வளர்ந்துள்ள எல்லா மரங்கலளவும் என்னிடம் உயிரினம் இருந்தால், அனைத்தையும் உங்களுக்கே பிரித்து வழங்கி விடுவேன் . அப்பொழுது என்னை ஒரு கருமியாகவோ , பொய்யணாகவோ , கோழையாகவோ பெற்றுக் கொள்ள மாட்டீர்கள்'' எனக் கூறினார்கள் .
ஆதாரம் புகாரி]

நபிகளாருக்கு நிகழ்ந்த இந்த வினோதமான சூழ்நிலையிலும் உணர்ச்சி மேலிடாமல், வெறுப்பு  உண்டாகி விடாமல், உண்டாக்கி விடாமல், சாந்த முகமுடன் நடந்து கொள்கின்றனர் . தன்னை ஒரு பெரிய மனிதராகக் காட்டிக் கொண்டால் , மக்கள் தம்மை அணுக தயங்கி , சத்தியத்தை விட்டு விலகிச் சென்று விடுவர் என்ற ஞானம் அவர்களுக்கு இருந்தது.

பெருமானாரின் காதில் யாராகினும் முக்கியச் செய்தியைக் கூறினால் அதைக் கூறி முடித்து வாயை எடுக்கும் வரை, அவர் கூறுவதை நெற்றியைச் சுருக்கி செவிமடுப்பார்கள்.
தமது நண்பர்களுக்கு முன்னிலையில் ஒருபோதும் காலை நீட்ட மாட்டார்கள். தம்மை சந்திக்க வருவோரிடம் முதலில்  'சலாம் ' கூறி முசபஹாவுக்கு முதலில் தம் கைகளைக் கொடுத்து, தன் தோளில் படர்ந்துள்ள சால்வையை தரையில் விரித்து அமர வைத்து உபசரிப்பார்கள். காண வரும் நண்பர்களை அழகிய பெயரால் அழைப்பார்கள் . நண்பர்கள் செய்திகள் கூறிக் கொண்டிருக்கையில் பேச்சை இடைமறிக்காது , நிறுத்திவிடாது, புன்னகை சிந்த கேட்டுக் கொண்டிருப்பார்கள் .

வாழ்வில் தூய்மையும் , பேச்சில் நேர்மையும் ஒருங்கே கொண்டிருந்த நபிகளார், தம் முன் விரசமான சொல், செயல், நடிப்பு  இவற்றை கண்டால் நாணமுருவார்கள். அவர்களின் வெட்க உணர்வை அன்னை ஆயிஷா [ரலி] அவர்கள் விவரிக்கும் பொழுது , 'திரைக்குப் பின்னுள்ள பருவப் பெண்ணைவிட  சங்கோஜமுடையவர்கள்' என வர்ணிக்கின்றார்கள் .
உண்மையில் நாணம் ,வெட்கம் உடையவர்கள்  அசிங்கமான பழக்கங்கள் பாவங்கள் செய்ய முன் வரமாட்டார்கள் என்பது கண் கூடாகும் .

பணிவு , தாழ்மை , சகிப்பு மனிதத் தன்மை இத்தனையும் அவர்களிடம் ஒருங்கே இருந்தும், அவர்களின் தோற்றம் , பார்ப்போர் கண்ணை வசீகரித்தது .
ஒரு மனிதருடைய பட்டமோ , படாடோபமோ , செருக்கோ , பெருமையோ அவருக்கு கண்ணியம் சேர்க்காது. அவரிடமுள்ள மாண்புமிகு மனிதப்பண்புகள் தான் , அவரது அழகையும் , கம்பீரத்தையும் காட்டித் தரும் என்பதற்கு அவர்களே சிறந்த முன் மாதரி.
ஹஜ்ரத் ஜைது பி காரிஜா [ரலி] அவர்கள் கூறும் பொழுது..
''அண்ணலார் ஒரு சபையில் வீற்றிருந்தார்கள் என்றால் மிகப் பெரும் சக்கரவர்த்தியின் தர்பார் கூட அதற்கு நிகராது '' எனக் கூறுகிறார்கள்.

அவர்கள் கலந்து கொள்ளும் சபை கருணை , சாந்தி, நீதி , அமைதி , அமானிதம் நிறைந்த அருட்பேரவையாகவே அழகு சிந்தும்.
''அவர்கள் பேச துவங்கினால் , அனைத்து சாராரும் காதுகளை கூர்மையாக்கி  கொண்டு, தலை கவிழ்ந்து , அவர்தம் தலையில் சிட்டுக் குருவி  அமர்ந்துள்ள உஷார் நிலையில் பேச்சை செவிமடுப்பர்'' என ஹஜ்ரத் ஜாபிர் பின் சமுரா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.

உலகிலுள்ள எம்மதம் , கலாச்சாரம், வர்ணமுடையவராக இருந்தாலும் சரி, அகிலத்தின் அருட்கொடையாம் எங்கள் பெருமானார் [ஸல்] அவர்களின் வாழ்வின் வழி நடந்தால் போதும், அவர் வாழ்வில் எல்லா பலன்கள் , சௌபாக்கியங்களையும் அடைந்திடுவார் என்பது திண்ணம்.
முற்றும் .
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
நன்றி .. நர்கிஸ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!