அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வெள்ளி, நவம்பர் 27, 2015

பெண்களின் பாதுகாப்புக்கு இஸ்லாம் காட்டும் நெறிமுறைகள்

என் அழகு என் கணவருக்கு மட்டும்தான்
பெண் என்பவள் வைரம் போன்றவள் .
அவளை கவனமாக பாதுகாக்க வேண்டும்!
அல்லாஹ்வின் திருபெயரால்  செய்கிறேன்...
பெண் என்பவள் மனித குலத்தின் முகவரி ; வாழ்க்கை விருட்சத்தின் வேர்; உலக உருண்டையின் அச்சாணி. அவளின்றி உயிரினங்கள் எதுவும் உலகில் உருவாகியிருக்காது. படைப்பினர்களிலேயே மிகச் சிறந்த நபிமார்களை தம் வயிற்றில் சுமந்த பாக்கியசாலி அவள். இத்தகைய பெண்களை நாட்டின் கண்களாக போற்ற வேண்டிய ஆணினம் இன்று அவர்கள் மீது பாலியல் வன்முறைகளை புரிகிறது. அவர்களின் கற்புகளை சூறையாடுகிறது. அவர்களை வெறும் போகப் பொருளாகவும், ஆபாசத்தின் அடையாளச் சின்னமாகவும் அறிமுகப்படுத்துகிறது. வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண்ணின் கற்புக்கும் , உயிருக்கும் எந்தவித உத்திரவாதமும் இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது.


இன்று பல அரசியல்வாதிகளும் [வியாதிகள்] , மேடைப் பேச்சாளர்களும் பெண் சுந்ததிரம் பற்றி வாய்கிழியப் பேசி தமக்கு விளம்பரம் தேடிக் கொள்ளத்தான் முற்படுகிறார்கள் தவிர, அதனை செயல்படுத்துவதற்கு முயல்வதில்லை. இந்நிலையில் பெண்கள் தங்களின் பாதுகாப்பை தாங்களே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இன்று பெண்களின் மீது கட்டவிழ்த்து விடப்படும் பல வன்முறைகள் நிகழ்வதற்கு அந்தப் பெண்கள்தான் மூல காரணம் என்றால் அது மிகையல்ல.

அந்நிய ஆண்களை ஈர்க்கும்படியான அவர்களின் அலங்காரம் , அங்கங்கள் தெரியும்படியான ஆடை, ஆண்களோடு சகஜமாக பேசுவது , பழகுவது , அவர்களோடு சேர்ந்து சுற்றுவது , இது போன்ற பெண்களிடமிருந்து நிகழும் பல  செயல்கள் தான் சாதாரண ஆண்களைக் கூட தவறான செயல்களுக்கு தூண்டக்கூடிய சாதனமாக இருக்கிறது என்பது கண்கூடு.

எனவே பெண் சமுதாயம் அவர்களுக்குரிய உண்மையான அந்தஸ்த்தையும், உயர்வையும் பெற வேண்டுமானால், தங்களின் விலைமதிக்க முடியாத உயிரையும், கற்பையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால், உலகின் அனைத்து பகுதிகளிலும் பெண்கள் மிருகங்களை விட இழிவாக நடத்தப்பட்டு வந்த காலத்தில், அவர்களுக்கு உயர்வையும், உன்னத தகுதியையும் எந்த இஸ்லாம் வழங்கியதோ, அவர்களின் பாதுகாப்பை எந்த இஸ்லாம் உறுதி செய்ததோ, அந்த உயரிய இஸ்லாம் கூறும் பாதுகாப்பு நெறிமுறைகளை, தங்கள் வாழ்வின் வழிமுறைகளாக பெண்கள் சமுதாயம் ஆக்கிக் கொள்ள வேண்டும். அதன் மூலம் மட்டுமே மதிப்பு மிக்கவர்களாகவும், பாதுகாப்பை பெற்றவர்களாகவும்,மேன்மை  குரியவர்கலாகவும் பெண்கள் மாற முடியும்.

இஸ்லாம் கூறும் இந்தப் பாதுகாப்பு நெறிகளை ஏற்றுக் கொண்ட பெண்கள், இன்று தங்களின் பெண்மையை முழுமையாகப் பாதுகாத்து சுதந்திரக் காற்றை சுவாசித்து வருகிறார்கள். உலகில் வாழும் ஒவ்வொரு பெண்ணும் இந்த பாக்கியத்தை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து இஸ்லாம் காட்டும்  நெறிமுறைகளை சுருக்கமாக உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
பர்தா என்னும் பாதுகாப்புக் கவசம்

இஸ்லாம் பெண்களுக்கு மிக அதிக கண்ணியம் அளித்துள்ளது . விலையுயர்ந்த  ஆபரணங்களை பெட்டியில் மறைத்து பாதுகாப்பது போன்று, பெண்களையும் பாதுகாக்க இஸ்லாம் தந்துள்ள பாதுகாப்புக் கவசமே  பர்தாவாகும். வயது வந்த பெண்கள் அவசியமான காரணங்களுக்காக வெளியில் செல்ல நேரிட்டால், தங்களின் முகம், கைகளை தவிர முழு உடலையும் மறைத்தவாறு  செல்ல வேண்டும் என்பது இறைவனின் கட்டளையாகும் .

இன்னும் '' முஃமினான பெண்களுக்கு  [நபியே] நீர் கூறுவீராக! தம் பார்வைகளை அவர்கள் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தம் வெட்கத்தலங்களை   பேணிக் கொள்ள வேண்டும்; தம் அலங்காரத்தை அதிலிருந்து [சாதாரணமாக ] வெளியில் தெரிவதை தவிர [மற்றவற்றை ] அவர்கள் வெளியாக்கக்  கூடாது. தம் முந்தானையை தம்மேல் சட்டையின் மீது போட்டு [தலை, கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து] க் கொள்ள வேண்டும்.
[அல்குர் ஆன் ]

1400 ஆண்டுகளுக்கு முன் இஸ்லாம் போதித்த இந்த பர்தா முறை அன்றும் இன்றும் மட்டுமல்ல . உலக முடிவுநாள் வரை வரக்கூடிய  பெண் சமுதாயத்தின் பாதுகாப்புக்கு  உத்திரவாதம் அளிக்க கூடிய அற்புதமான வழிமுறையாகும்.

இன்று  ''ஆணும் பெண்ணும் '' சமம் என்ற பொய்யை உரத்துச்  சொல்வதால், அதைத்தவிர வேறு எதுவும் நமது நவீன கால யுவதி களுக்கு காதில் விழுவதில்லை . தாராளமாக பர்தா இன்றிச் செல்வது கூடும் என்ற நிலைக்கு அவர்கள் வந்து விட்டனர் . அதனால் ஏற்படும் விளைவுகளை கண்கூடாக பார்த்த பின்னும் அதன் அவசியத்தை  விளங்க முடியாத அளவு அவர்கள் மூளைச்சலவை  செய்யப்பட்டுள்ளனர் .

பெண்ணினத்தின் பெருமை காக்கும் இந்த பர்தாவை, பெண்ணுரிமையினை பறிக்கும் செயல் என சில பிற்போக்குவாதிகள் செய்து வரும் விஷமப் பிரச்சாரத்திற்கு  நமது பிள்ளைகளும் பலியாகி விட்டார்களோ  என்ற எண்ணத் தோன்றுகிறது .

பர்தா பெண்ணுரிமையை பறிக்கிறது என்றால், அரைகுறை ஆடைகளின் மூலமாக பெண்களை கேவலப்படுத்துவதுதான் பெண்ணுரிமையா ? பெண்களின் ஒவ்வொரு உறுப்புக்கும் விலைபேசி , ஆண்கள் பயன்படுத்தும் பொருட்களில்  கூட பெண்களின் ஆபாசப் படத்தை போட்டு விளம்பரம்  செய்வதுதான் பெண்ணுரிமையா ? தொலைநோக்குப் பார்வையோடு இஸ்லாம் போதிக்கும் இந்த பர்தா முறை ஒரு புறம் விமர்சனத்திற்குல்லாக்கப்பட்டாலும், மறுபுறம் இஸ்லாம் உலகில் வேகமாக பரவ காரணமாகவும் இருந்து வருகிறது .

ஏனெனில் இன்று உலகம் முழுதும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வக்கிரமங்களிளிருந்து  பாதுகாப்புப் பெற பர்தாவே சிறந்த வழி என்பதை மக்கள் உணரத் தொடங்கி விட்டனர். அமெரிக்காவில் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் ஒரு பெண் இஸ்லாத்தை தழுவினார்.  அவர்தான் இஸ்லாத்தை ஏற்றது  பற்றிக் கூறும்போது , '' இஸ்லாத்தில் பெண்களுக்கான  ஆடை பற்றிய சட்டம் கூறப்பட்டிருப்பதை பார்த்துதான் நான் முஸ்லிமானேன் . புர்காதான்  அமெரிக்காவில் எனக்கு புதிய உலகத்தை ஏற்படுத்தித் தந்தது . யாரும் என்னை பார்க்க முடியாது என்பதால் நான் நிம்மதியாக நடமாட முடிகிறது'' என்றார் .

இஸ்லாத்தின் எதிரிகளும் , ஊடகங்களும்  கைகோர்த்து எந்த பர்தாவை காரணம் காட்டி இஸ்லாத்தை விமர்சனம் செய்கின்றனரோ , அதே பர்தாதான் மேற்குலகில் இஸ்லாம் வேகமாக பரவ காரணமாக உள்ளது. லண்டன்  'டைம்ஸ் ' நாளிதழ் பிரிட்டனில்  ஆண்களைவிட பெண்களே இஸ்லாத்தை அதிகம் ஏற்கின்றனர் என்று கூறுகின்றது . அமெரிக்காவில் ஆண்களைவிட பெண்கள் நான்கு மடங்கு அதிகமாக இஸ்லாத்தை ஏற்கின்றனர் என கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன .

இன்ஷாஅல்லாஹ் [அல்லாஹ் நாடினால்]  இன்னும் மலரும் ... தொடரும்
அல்லாஹ் மிக்க அறிந்தவன் .
நன்றி..மௌலவி முஃப்தி . முஹம்மது ஹூசைன்  தாவூதி பாஜில் தேவ்பந்து .நன்றி.. நர்கிஸ்
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!