அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வெள்ளி, ஜனவரி 08, 2016

முஸ்லிம்களின் பாதுகாப்பு கவசங்கள்[ அவசியம் படிக்கவும். ]

அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்..
''யா அல்லாஹ் ! பயனில்லாத கல்வியை விட்டும், இறையச்சம் இல்லாத இதயத்தை விட்டும், போதுமாக்கிக் கொள்ளாத உள்ளத்தை விட்டும், ஏற்கப்படாத பிரச்சனைகளை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்.
நபிமொழி

இந்த துஆவை அரபியில் அல்லது தமிழிலே மனம் செய்து கொள்ளவும் . ஒரு அருமையான துஆ!


உலகில் பிறகும் ஒவ்வொருவரும் நல்லவர்களாகத்தான் பிறக்கிறார்கள். அவரது சமய சமுதாயச் சூழ்நிலைகளின் தாக்கத்தால், செயல்பாடுகளால் மாற்றம் பெறுகின்றனர். இவை சிறப்பையும் தரலாம். இழிவையும் தரலாம். நல்லனப்  போற்றியும், அல்லன அகற்றியும் வாழ நினைப்பவர்கள் மேற்கண்ட பிரார்த்தனையைப் புரிந்து,  அதன்படி செயலாற்றினால் இம்மை, மறுமை வாழ்வில் ஏற்றம் பெறலாம் என்பது இப்பொன்மொழியின் உட்கருத்தாகும்.

முதலாவதாக கல்வியறிவு. கல்வி கரையில கற்பவர் நாள் சில. தெள்ளிதின் ஆராய்ந்து தனக்குப் பயன்தரும் கல்வியைக் கற்பதே ஏற்புடையதாகும். தற்போதைய நிலையில் உற்று நோக்கினால், அக்கிரமங்களும், பாலியல் வன்கொடுமைகளும், கடத்தல்கள், பதுக்கல்கள் , கொலை, கொள்ளைகள் மது- மாதுக்களின் தவறான ஈர்ப்பு இவற்றிற்குக் காரணம் பயனற்ற கல்வி முறையோ என்று எண்ணத் தோன்றுகிறது. உள்ளத்தை பண்படுத்தும் ஒழுக்கம் சார்ந்த கல்வியே தேவை என உணரும் தருணம் இது. தவறுகளை தவிடு பொடி  ஆக்க வேண்டுமானால் இறையச்சம் என்ற  'தக்வா'' உள்ளத்தில் பதிந்து இருக்க வேண்டும். இம்மையிலும், மறுமையிலும் இறையச்சம் இல்லாமையால் இழிவுகள் ஏற்படும். இறைவனின் கட்டளைகளுக்குப் பணிந்து வாழ்வதால் நன்மதிப்பும், புகழும், சுவனப்பேரும்  கிடைக்கும் என்பது மிகையன்று.

'போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து ' என்பர். பேராசை என்பது மனிதனை பற்றிக் கொல்லும்  புற்று நோய். இந்த நோயிலிருந்து விடுபட வேண்டுமானால், அல்லாஹ்  தனக்கு உவந்தளித்தவற்றை மனமார ஏற்று, தான் பெற்ற செல்வத்தை இறைகூரும் நல்வழியில் ஜகாத், சதகா , ஏழைகளுக்கு உதவுதல் போன்றவற்றில் செலவழித்தால் வாழ்வில் இன்பம் சுரக்கும். கவலைகள் தானாகத் தேய்ந்து விடும்.

இறுதியாக ஏற்கப்படாத பிரச்சனைகளில் இருந்து இறுதி நபி [ஸல்] அவர்கள் பாதுகாவல் தேடுகிறார்கள். உற்ற துணைகளின், பெற்றோர்களின் , நெருங்கிய உறவினர்களின் நட்பால் இணைக்கப்பட்டவர்களின் இழப்பு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனை எவரும்விரும்புவதில்லை . எனினும் தவிர்க்க முடியாத விதியின் வழியால் ஏற்படுவது என மனதில் கொண்டு பாதுகாப்புத்  தேட வேண்டும். இவ்வாறு துஆ செய்தால் சுபிட்சம் பெறலாம்.
நன்றி.. பேராசிரியை ஹாஜியா கே. கமருன்னிசா /நர்கிஸ்
அல்லாஹ்  மிக்க அறிந்தவன்.
அவசியம் படிக்கவும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!