அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

புதன், ஜனவரி 27, 2016

ஒரு முஸ்லிம் நேசிப்பார், நேசிக்கப்படுவார் ...[அவசியம் படிக்கவும்]

ஒரு முஸ்லிம் நேசிப்பார், நேசிக்கப்படுவார் ...[அவசியம் படிக்கவும்]

அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்...
மார்க்க நேர்வழியின் பிரகாசத்தைப் பெற்றுள்ள முஸ்லிம் மென்மையானவராகவும், நேசிப்பவராகவும், நேசத்திற்கு உரியவராகவும் இருப்பார். அவர் பிறரை நேசித்து இணைந்திருந்து அவர்களிடம் அன்பையும் பரிவையும் வெளிப்படுத்துவார். பிறரும் அவரை நேசித்து அவருடன் நல்லுறவு கொண்டு அவர் மீது அன்பையும் பரிவையும்  வெளிப்படுத்துவார்கள். இதுதான் தனது மார்க்கத்தின் தூதுத்துவத்தைப் பேணி வரும் முஸ்லிம்களின் சமுதாய அமைப்பின் தனித் தன்மையாகும். சமூகத்தில் மக்களுடன் இணைந்து அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றிருப்பது  முஸ்லிமின் தலையாயக் கடமைகளில் ஒன்றாகும். அதுவே அம்மக்களை சத்திய வார்த்தையையும் அதன் மேலான மாண்புகளையும் ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கான உறுதியான வழிமுறையாகும்.


 நபி [ஸல்] அவர்கள்,  ''எனக்கு உங்களில் மிகவும் நேசத்திற்குரியவரும்   சபையில் உங்களில் மிக நெருங்கியவருமான மனிதரைப் பற்றி உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா?''  என்று இரண்டு அல்லது மூன்று முறை கேட்டார்கள். தோழர்கள் , '' அறிவித்துத் தாருங்கள் அல்லாஹ்வின்  தூதரே! '' என்றார்கள். நபி [ஸல்] அவர்கள், ''உங்களில் நற்குணமுடையவர் '' எனக் கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில், '' பிறரை நேசிக்கும், பிறரால் நேசிக்கப்படும் மென்மையான பண்புடையவர்கள்'' என்று கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம்.. முஸ்னத் அஹ்மத்]

பிறரை நேசித்து பிறரால் நேசிக்கப்படுவது முஸ்லிமின் பண்பாகும். மனிதர்களை அவர் விரும்புவார். மனிதர்களும் அவரை விரும்புவார்கள். அவர் மனிதர்களைப் புறக்கணிக்கமாட்டார் . அவர்களும் அவரைப் புறக்கணிக்கமாட்டார்கள் . முஸ்லிம் இத்தன்மைகளை உடையவராக இல்லையெனில், அவர் அழைப்புப் பணியை நிறைவாகச் செய்ய இயலாது. அவரது கட்டளைகள் மதிக்கப்படாமல் அலட்சியம் செய்யப்படும். அவரால் சமூகத்திற்கு எந்தவொரு நன்மையையும் கிடைக்காமல் போய்விடும்.
அன்பு சகோதர/ சகோதரிகளே! மேலே கூறியுள்ள வரிகளை நன்றாக சிந்திக்க வேண்டும்.  இன்று நடக்கும் நடப்புகளைப் பற்றி நம்மில் இருக்கும் நிறைய குறைப்பாடுகளைப் பற்றி  ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கவேண்டும்!

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..  '' முஃமின் நேசிப்பவராக, நேசிக்கப்படுபவராக இருப்பார். நேசிக்காத, நேசிக்கப்படாத மனிதரிடம் எந்தவொரு நலவும் கிடையாது.
ஆதாரம்.. முஸ்னத் அஹ்மத் ]

பிற மனிதர்களுடன் நன்னடத்தையை  மேற்கொள்வதிலும் இதயங்களை வெற்றி கொள்வதிலும் நபி [ஸல்] அவர்கள் அழகியதோர் முன்மாதரியைக் காட்டித் தந்துள்ளார்கள். பிறரிடம் சொல், செயல், நடத்தையில் மேன்மையைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தினார்கள். நேசத்தாலும், அன்பாலும் மனிதர்களின் மனங்களை வெற்றி கொள்வதற்கான எளிதான அணுகுமுறைகளை வகுத்தளித்தார்கள்.

நபி [ஸல்] அவர்கள் எல்லா நிலையிலும் மலர்ந்த முகமும் மென்மையான அணுகுமுறையும் கொண்டு எளிமையாகத் திகழ்ந்தார்கள்.  எந்த நிலையிலும் கடுமையை வெளிப்படுத்தியதே இல்லை.

அன்னை ஆயிஷா [ரழி ] அவர்கள் கூறினார்கள்.. நபி [ஸல்] அவர்கள் மனிதர்களில் தீயவர்களிடமிருந்து விலகிக் கொள்வார்கள். அவர்களை தங்களது மென்மையான  வார்த்தைகளாலும் நன்னடத்தையாலும் ஈர்ப்பார்கள்.  நபி [ஸல்] அவர்களைச் சந்திக்க ஒரு மனிதர் அனுமதி கேட்டார். நபி [ஸல்] அவர்கள், ''அவருக்கு அனுமதி அளியுங்கள்! இவன் குடும்பத்தில் மிகக் கெட்டவன்  '' என்றார்கள்.
அம்மனிதர் உள்ளே நுழைந்தபோது அவரிடம் மென்மையாக உரையாடினார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! [அவரைப் பற்றி] ஏதேதோ கூறினீர்கள். பின்பு அவருடன் மென்மையாக உரையாடிநீர்களே ! என்று கேட்டபோது. நபி [ஸல்] அவர்கள், ஆயிஷாவே! மனிதர்களில் மிகக் கெட்டவன்  அவனது கீழ்த்தரமான நடத்தைக்கு அஞ்சி மக்களால் புறக்கணிக்கப்படுபவனே  '' என்று கூறினார்கள்.
ஆதாரம் .. புகாரி, முஸ்லிம்]

இதன் கருத்து.. எந்தத் தீயவரையும் நாம் ஒதுக்கி வைத்திடக்கூடாது  அவரை அணுகி அவருக்கும் நல்வழி காட்ட வேண்டும்.
முஸ்லிம் நல்லவர், கெட்டவர்  எனப் பிற மனிதர்களுடன்  உறவாடும் விஷயத்தில் நபி [ஸல்] அவர்களின் அழகிய வழிமுறையைப் பின்பற்றுவார். மக்கள் அனைவராலும் நேசிக்கப்படும் நல்லவராகத் திகழ்வார்.

அல்லாஹ்  மிக்க அறிந்தவன்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!