புதன், ஜனவரி 13, 2016

சுவனக்கோட்டை யாருக்கு?[தொடர்ச்சி.....]இறுதிப் பகுதி]

அல்லாஹ்வின் கருணை ,அன்பு , நேசம் .
சுவனக்கோட்டை  யாருக்கு என்பதை
இதன் மூலம் அறியலாம்..
மன்னிப்பை நாம் மனபூரவாமாக
அள்ளித் தெளிக்கலாம்...
  அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்...

அல்லாஹ்  கூறுகின்றான்..
''என் அடியார்களே! [உங்களில்] எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம்- நிச்சயமாக அல்லாஹ்  பாவங்கள் யாவையும் மன்னிப்பான்- நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்,, மிக்கக் கருணையுடையவன்'' [என்று நான் கூறியதை நபியே ] நீர் கூறுவீராக .
39..53]
இந்த ஆயத்தை ஆழமாக சிந்தித்துப் பார்க்கவும். யாராவது அப்படி அதிகமாக பாவங்கள் செய்து , ''இதுவரை நான் நிறைய பாவங்கள் செய்துவிட்டேன் இனி என்னை அல்லாஹ்  எங்கே மன்னிக்க போகிறான் என்று எண்ணிவிடக் கூடாது. அல்லாஹ்  மிக்கக் கருணையுள்ளவன் என்பதை மேலே கூறியுள்ள வசனம் ஒன்று போதும். அதே நேரத்தில்  நிறைய பாவங்கள் செய்யலாம் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது.  பாவங்கள் செய்துக் கொண்டு பிறகு பாவமன்னிப்பு கோரலாம் என்று இருந்துவிடக் கூடாது. ஒருவருக்கு எப்பொழுது, எப்படி மரணம் வரும் என்று சொல்ல முடியாது. கவனமாக மனதில் பதிய வைத்துக் கொள்ளவும்!


[முஸ்லிம்] யா அல்லாஹ் ! நீ மன்னிப்பவன், மன்னிப்பையே நீ அதிகம் விரும்புகின்றாய், ஆகவே என்னை மன்னிப்பாயாக! என்ற சிறிய பிரார்த்தனையின் மகத்துவத்தைப் பார்த்தீர்களா? இதுவரை இந்தப் திருபெயரால் இறைவனை அழைக்கவில்லையே என்று நம்மை எண்ணி நாமே வெட்கப்படவேண்டும். ஆகவே இனி இந்தப் திருப்பெயரால் அழைத்து அவனது அளவற்ற மன்னிப்பிற்கு உரித்தானவர்களாக மாறுவோம். தொடர்ந்து வரும் நாட்களில் வந்து அல் அஃபுவ்  திருப்பெயரால் உயிர் வாழ்வோம்.

ஒரே வார்த்தை ! இறைவன் உங்களது தவறுகளை மன்னிக்க வேண்டுமெனில் நீங்கள் பிறரை மன்னியுங்கள். இறைவா! உனது மன்னிப்பின் எல்லை விரிவானது. நான் ஒரு பலவீனமான மனிதன். ஆகவே எனது பாவங்களை நீ மன்னிப்பாயாக!  இதோ நான் எனது சகோதரர்களில் தவறுகளை மன்னிக்கிறேன் என்று இறைவனிடம் கூறுங்கள். அவ்வளவுதான்! பிறர் தவறை மன்னிப்பதால் இறைவன் தரும் வெகுமதி என்ன தெரியுமா? அதனைப் பெருமானார் [ஸல்] அவர்களே குறிப்பிடுகின்றார்கள்..

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின் அரியணைக்கு முன்பாக இரண்டு பேர்  கொண்டுவரப்படுவார்கள். ஒருவர் கூறுவார். இறைவா! எனது சகோதரர் எனக்கு அநீதி செய்துள்ளார். எனக்கு நீதி வேண்டும்  . அப்போது மற்றொரு சகோதரிடம் அல்லாஹ்  கூறுவான். உனது சகோதரனுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிடு, இறைவனிடம் அவர் கேட்பார் எவ்வாறு கொடுப்பது, இறைவன் கூறுவான் உனது நன்மைகள் மூலமாக, இறைவா! எனது நன்மைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டனவே, அப்போது அந்த  முதல்  ஆளிடம் இறைவன் கூறுவான் . உனது சகோதரிடம் நன்மைகள் எதுவும் இல்லையே, அவர் இறைவா! அவ்வாறெனில் பகரமாக எனது தீமைகளை எடுத்து அவருக்குக் கொடு என்பார். அப்போது இறைவன் அவரிடம்  இதற்குப் பகரமாக உனக்கு வேறு ஏதாவது  வேண்டுமா..? இதைவிடச் சிறந்தது வேறு என்ன இருக்கின்றது இறைவா..? அந்தக் கோட்டையை பார்! அப்போது அநீதி இழைக்கப்பட்ட அந்த அடியான் மிக அழகான சுவனத்தின் ஒரு கோட்டையைப் பார்ப்பான்  அதன் அழகில் சொக்கி நிற்பான். மெய் மறந்தவாறு  அல்லாஹ்விடம் கேட்பான் . இறைவா! யாருக்காக இந்தக்கோட்டை? நபிமார்கள் எவருக்கேனும் இதனை தயார் செய்து  வைத்துள்ளாயா? அல்லது  ஷுஹதாக்களுக்கா  தயார் செய்து வைத்துள்ளாயா ? இறைவன், யார் இதற்கான  கூலியை தருகின்றாரோ அவருக்காக என்று கூறுவான். இறைவா யாரால் இதற்கான கூலியை கொடுக்க முடியும் ? உன்னால் முடியும், என்னால் முடியுமா... எப்படி இறைவா ...? உனது சகோதரனை மன்னிப்பதன் மூலமாக இந்தக்கோட்டையை  உனக்குச் சொந்தமாகும். உடனடியாக அடியான் மகிழ்ச்சியில் துல்லியவாறு கூறுவான்.  எனது சகோதரனை நான் மன்னித்துவிட்டேன் இறைவா! மன்னித்துவிட்டேன். அப்போது இறைவன் கூறுவான். உனது சகோதரரின் கையைப் பிடித்தவாறு நீங்கள் இருவரும் அந்தச் சுவனத்தில் நுழையுங்கள்.[ இப்னு கஸீர் ]

பாருங்கள் நம்மைப் படைத்த இறைவன் நம்மிடையே சண்டை சச்சரவுகள் இருக்கக் கூடாது என விரும்புகின்றான்.   அதற்கான கூலியும் மகத்தானதாக இருக்கும் என்று அறிவிக்கின்றான். எனில் அந்த இறைவனது உயர்ந்த சுவனத்தை அடைவதற்காக நாமும் சகோதரர்கள் செய்த அநீதிகளையும், தவறுகளையும் மன்னிக்ககூடாதா..!  இன்னும் நிறைய சம்பவங்கள் இருக்கிறது சொல்லிக் கொண்டே போகலாம்... கட்டுரை நீண்டதாக ஆகிவிடும் .
முற்றும் ...
அல்லாஹ்  மிக்க அறிந்தவன்.
நன்றி..மௌலவி நூஹ் மஹ்லரி  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!