அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வியாழன், பிப்ரவரி 25, 2016

செயல்படாமல் அழைப்பு விடுத்தல் ...

செயல்படாமல் அழைப்பு விடுத்தல் ...
அல்லாஹ்வின்  திருபெயரால் .....
அண்ணல் நபி[ஸல்] அவர்கள் நவின்றார்கள் 
''ஒரு மனிதன் இறுதித் தீர்ப்பு நாளில் கொண்டுவரப்பட்டு  நரக நெருப்பில் தூக்கியெரியப்படுவான் . அவனது குடல் வெளிப்பட்டு நெருப்பில் விழும்! பிறகு அக்குடலை எடுத்துக்கொண்டு அவன், கழுதை தன்  செக்கில் சுற்றுவதைப்போல் நரகத்தைச் சுற்றுவான். இதைப் பார்த்து மற்ற நரகவாசிகள் அவனிடம் ஒன்றுகூடி,  ''உனக்கு இந்த நிலைமை ஏன்  ஏற்பட்டது? நீ நன்மைகள் புரியும்படி உலகில் எங்களுக்கு போதித்துக் கொண்டிருக்கவில்லையா? தீமைகளை விட்டு எங்களை தடுத்துக் கொண்டு இருக்கவில்லையா? [இப்படிப்பட்ட நற்செயலைப் புரிந்தும்கூட நீ எப்படி இங்கே வந்து விட்டாய்?] '' என்று கேட்பார்கள் . அந்த மனிதன் ,  ''நான் உங்களுக்கு நன்மை புரியும்படி போதித்துக் கொண்டு இருந்தேன்! ஆனால் நானோ அதன் அருகில் கூடச் செல்லாமலிருந்தேன்,, தீமைகளை விட்டு உங்களைத் தடுத்துக் கொண்டிருந்தேன்! ஆனால் நானோ அந்தத் தீமைகளைப் புரிந்து கொண்டிருந்தேன் '' என்று பதிலளிப்பான். [புகாரி, முஸ்லிம்]
அறிவிப்பாளர் .. உஸாமா  பின் ஜைத் [ரலி]


இன்று நம்மில் பரவலாக பலவகையில் facebook  மற்றும் whatsapp  வாயிலாக நல்லதை ஏவி தீயதைத் தடுத்துக் கொண்டு வருகிறோம். பல இஸ்லாமிய பதிவகளை இட்டுக் கொண்டு வருகிறோம். நம்மை மறந்துவிட்டு பிறர்களுக்கு போதிப்பதா? கொஞ்சம் சிந்திக்கவும்! சொல்வது எளிது ஆனால் செய்வது கடினம். மற்றவர்களுக்கு அழகாக சொல்லிவிடலாம் ஆனால் அதை பின்பற்றுவது ..? இப்பொழுது ஆழாமாக சிந்திக்க வேண்டிய தருனாமாக உள்ளது.

ஒரு மனிதர் இப்னு அப்பாஸ் [ரலி] அவர்களிடம்  ''நான் நன்மை புரியுமாறு ஏவுதல், தீமையை விட்டு தடுத்தல், மார்க்கத்தின் பால் அழைத்தல் ஆகிய  பணிகளைச் செய்ய விரும்புகிறேன்'' என்றார்.
இப்னு அப்பாஸ் [ரலி] இத்தகைய அந்தஸ்தை நீர் அடைந்து விட்டீரா ?
வந்தவர் .. அடைந்திட விரும்புகிறேன்.
இப்னு அப்பாஸ் [ரலி] அப்படியாயின் குர்ஆனில் உள்ள மூன்று வசனங்கள் மூலம் கேவலப்படுத்தப்படுவீர் எனும் அச்சம்  உமக்கு இல்லையெனில் நீர் அவசியம் அழைப்புப் பணி  செய்யலாம்.

வந்தவர்.. அவ்வசனங்கள் யாவை?
இப்னு அப்பாஸ்  [ரலி] .. முதல் வசனம் இது..  'பிற மனிதர்களை நன்மை செய்யும்படி நீங்கள் ஏவி விட்டு உங்களை   நீங்கள் மறந்து விடுகின்றீர்களா?' [2..44] - இந்த வசனத்தின்படி நீர் நல்ல முறையில் செயல்புரிந்து விட்டீரா?
வந்தவர்.. இல்லை.
இப்னு அப்பாஸ் [ரலி] இரண்டாவது வசனம் இது.. 'நீங்கள் செய்யாதவற்றை ஏன்  சொல்கின்றீர்கள் ? ' [61..2] - இதன்படியாவது நல்ல முறையில் நீர் செயல்புரிந்து விட்டீரா ?
வந்தவர்.. இல்லை!
இப்னு அப்பாஸ் [ரலி] மூன்றாவது வசனம் இது.. ஷூஐப் [அலை] தம் சமூகத்தாரிடம் கூறினார்கள்.. 'மேலும் எவற்றை செய்ய வேண்டாம் என்று உங்களை நான் தடுக்கின்றனோ அவற்றை நான் செய்வதற்கு ஒருபோதும் விரும்பவில்லை. என்னால் முடிந்தவரை சீர்திருத்தம் செய்யவே நான் விரும்புகின்றேன்'.[11..88] - இந்த வசனத்தின்படியாவது நல்ல முறையில் செயல்புரிந்துள்ளீரா ?
வந்தவர் இல்லை! 
இப்னு அப்பாஸ் [ரலி] .. நன்மை புரியவும் தீமையிலிருந்து விலகி இருக்கவும் முதலில் நீர் உமக்கே கட்டளையிடுவீராக! இதுவே ஓர் அழைப்புப் பணியாளனுக்குரிய  முதல் கட்டமாகும்!
விளக்கம் .. இந்த மனிதர் தன்னைப் பொறுத்து அலட்சியமாய் இருந்துவிட்டு பிறருக்கு பிரச்சாரம் செய்ய ஆர்வம் கொண்டார். அதனால்தான் இப்னு அப்பாஸ்[ரலி] அவர்கள் அந்த மனிதருக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கினார்கள்.
அல்லாஹ்  மிக்க அறிந்தவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!