அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

ஞாயிறு, பிப்ரவரி 28, 2016

சிந்திக்க வேண்டிய தருணம் [உழைப்பு]

சிந்திக்க வேண்டிய தருணம் [உழைப்பு]
அல்லாஹ்வின் திருபெயரால்..
ஹலாலான-அனுமதிக்கப்பட்ட வழியில் சம்பாதித்தல்

பெருமானார் [ஸல்] அவர்கள் கூறியுள்ளார்கள் .. ''எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவூத் ]அலை] அவர்கள் தம் கரங்களால் [உழைத்து] சம்பாதித்த உணவையே உண்பவர்களாய்  இருந்தார்கள்.
அறிவிப்பாளர்.. மிக்தாத் பின் ம அதீகரீப் [ரலி]
நூல்..புகாரி]


விளக்கம்..*****
மற்றவர்களிடம் கையேந்தி உதவி நாடித் திரிவதிலிருந்து இறை நம்பிக்கையாளர்களைத் தடுப்பது இந்த நபிமொழியின் நோக்கமாகும். மேலும் ஒவ்வொரு மனிதனும் தனக்கு வேண்டிய உணவைப் பெறுவதற்குத் தானே உழைக்க வேண்டும். வேறு எவருக்கும் சுமையாக இருந்து வாழ்க்கையைக் கழிக்கலாகாது என்றும் இந்த நபிமொழியில் அண்ணலார் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

பெருமானார் [ஸல்] அவர்கள் கூறினார்கள்..  ''மக்களிடையே ஒரு காலம் வரும். அப்போது மனிதன் தான் ஈட்டிய பொருள் ஹலாலானதா [அனுமதிக்கப்பட்டதா] அல்லது ஹராமானதா [தடுக்கப்பட்டதா] என்பதையெல்லாம் பொருட்படுத்த மாட்டான்.
அறிவிப்பாளர்.. அபூஹுரைரா [ரலி]
நூல்.. புகாரி]

அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கூறிய காலம் , இப்பொழுது நாம் வாழ்கின்ற காலமா என்று அச்சம் வந்துவிட்டது! பணம் பணம் பணம் ! என்று அலையக் கூடிய சில மக்ககளைப் பார்க்கிறோம். அவர்கள் பணம் ஈட்டுகிறார்கள். ஆனால், எந்த வழியில் என்பதை அவர்கள் சிந்திப்பதில்லை.  எப்படி இருந்தாலும் பரவாயில்லை! பணம் ஈட்ட வேண்டும் என்ற ஒரு குறிக்கோள் ! இந்த செயல்பாடு நிச்சயமாக ஒரு உண்மையான முஸ்லிமிடம் இருக்காது. இருக்கவும் கூடாது! உங்களுடைய சிந்தனைக்கு!

நபிகள் நாயகம்  [ஸல்] அவர்கள் நவின்றார்கள்..  'ஒருவன் விலக்கப்பட்ட வழியில் செல்வத்தை ஈட்டி, அதிலிருந்து இறைவழியில் செலவு செய்தால் அந்த தர்மம் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்படாது. தனக்காகவும் தன்  வீட்டாருக்ககவும் அதிலிருந்து செலவிட்டால் பாக்கியம் அற்றதாகவே இருக்கும். அதனை விட்டு விட்டு அவன் இறந்துவிட்டால் அவனது நரகப் பயணத்திற்கு சாதகமாகத் தான் அது விளங்கும். அல்லாஹ்  தீமையை தீமையின் வாயிலாக அழிப்பதில்லை . மாறாக தீய செயலை நற்செயலின் வாயிலாக அழிக்கின்றான் . ஓர் அசுத்தம் இன்னொரு அசுத்தத்தை அழிப்பதில்லை .
அறிவிப்பாளர்.. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் [ரலி]
நூல்.. மிஷ்காத்]

விளக்கம் ..***
இந்த நபிமொழியிலிருந்து தெரிவது, நன்மையான ஒரு செயலைக் கூட ஆகுமான வழிமுறைகளின்படியே செய்திட வேண்டும். அப்போது தான் நர்செயலாகக் கருதப்படும். நோக்கமும் தூய்மையானதாக இருக்க வேண்டும். அதனை அடைகின்ற வழிமுறைகளும் தூய்மையானவையாக இருக்க வேண்டும்.
ஒரு தீமையான காரியத்தை செய்துவிட்டு உடனே ஓர் நன்மையான காரியம் செய்தால், அந்த நன்மையான காரியம் அந்த தீமையை அழித்துவிடும் . என்ன ஒரு அருமையான்  நபிமொழி பாருங்கள்!  இன்ஷாஅல்லாஹ்  வட்டியை பற்றி அடுத்த தலைப்பில் கூறுவோம்.. அந்த வட்டியை மக்கள்கள் எப்படி எல்லாம் பாவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று இன்ஷாஅல்லாஹ்  கூறுவோம் ...
அல்லாஹ்  மிக்க அறிந்தவன்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!