சனி, பிப்ரவரி 27, 2016

முத்தான முத்துக்கள் வாழ்வின் சொத்துக்கள் !

முத்தான முத்துக்கள் வாழ்வின் சொத்துக்கள் !
அல்லாஹ்வின் திருபெயரால் ....

இஸ்லாம் வாழ்க்கைக்கான அனைத்து தீர்வுகளையும் , வழிக்காட்டுதளையும் சொல்லிருக்க . அதைவிட்டு விட்டு வேற வழியைத் தேடுகிறார்கள். தீர்வு கிட்டுமா  ..? குழப்பத்தான் மிஞ்சும்!

அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..
''ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன்  இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக் கூடும்.
அறிவிப்பாளர்.. அபூஹுரைரா [ரலி]
ஆதாரம்.. முஸ்லிம்]


அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..
''மனிதன் மறுமையில் நற்கூலி பெரும் எண்ணத்துடன் தன் வீட்டாருக்காகச் செலவிடும்போது அது அவனுக்கு அறமாக [சதகாவாக] அமைந்து விடுகின்றன.''
அறிவிப்பாளர்.. அபூ மஸ்ஊத் அல்  பத்ரீ [ரலி]
ஆதாரம்.. புகாரி,முஸ்லிம்]

அண்ணல் நபி [ஸல்] அவர்கள் நவின்றார்கள்..
''மனிதன் தான் எவர்களுக்கு  உணவளிக் [கக் கடமைப்பட்டிருக்]கின்றானோ அவர்களை [கண்காணிக்காமல்] வீணாக்கி விடுவதே அவனைப் பாவியாக்கிடப் போதுமானதாகும்.''
அறிவிப்பாளர்.. அப்துல்லாஹ் பின் அம்ர் [ரலி]
ஆதாரம் .. அபூதாவூத்]

நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் நவின்றார்கள்..
''மனிதனுக்கு இரண்டு மனைவிகள் இருந்து, அவன் அவர்களுடைய உரிமைகளை வழங்குவதில் நீதியுடனும் சமத்துவத்துடனும் நடந்து கொள்ளவில்லை என்றால் , அவன் இறுதித் தீர்ப்புநாளில் தன்னுடைய பாதி உடல் விழுந்து விட்ட நிலையில் வருவான்.
அறிவிப்பாளர்.. அபூஹுரைரா [ரலி]
ஆதாரம்.. திர்மிதி]

நபி [ஸல்] அவர்கள் அருளினார்கள்..
''ஒரு பெண் ஐவேளைத் தொழுகையையும் தொழுது, ரமளான்  மாதத்தில் நோன்பு நோற்று வருகின்றாள்,, மேலும் தன்  வெட்கத்தலத்தைப் பாதுகாத்துக் கொண்டு, தன்  கணவனுக்கு கீழ்படிந்து நடக்கின்றாள் எனில், அவள் சொர்க்கத்தின் வாயில்களில் எந்த வாயிலை விரும்புகின்றாளோ, அதன் வழியாக சுவனத்துள் நுழையட்டும்.
அறிவிப்பாளர்.. அனஸ் [ரலி]
நூல்..மிஷ்காத்]

நபி [ஸல்] அவர்களிடம் வினவப்பட்டது..  ''எந்தப் பெண் [மனைவி ] அனைவரையும் விடச் சிறந்தவள்?'' அண்ணலார் [ஸல்] நவின்றார்கள்..  ''எந்தப் பெண் தன்  கணவன் தன்னைப் பார்க்கும்போது அவனை மகிழ்விப்பாலோ , அவன் கட்டளையிட்டால் அவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பாளோ, தன்  விஷயத்திலும், தன்னுடைய பொருளிலும் தன்  கணவனுக்கு விருப்பமில்லாத எந்தப் போக்கையும் மேற்கொள்ளமாட்டாலோ அத்தகையவளே, அனைவரையும் விடச் சிறந்தவள்.''
அறிவிப்பாளர்.. அபூஹுரைரா [ரலி]
நூல்.. நஸாஈ ]
அல்லாஹ்  மிக்க அறிந்தவன்.
கற்றதை கடைப்பிடிப்போம்! கடைப்பிடித்ததை மற்றவர்களுக்கு எத்திவைப்போம்! இரண்டு நற்கூலியைப் பெறுவோம்!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!