அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

சனி, பிப்ரவரி 06, 2016

காதல் படுத்தும் பாடு

காதல் படுத்தும் பாடு....[ஈமானும் இறையச்சமும் குடிக் கொண்ட உள்ளத்தில் இந்த காதல் தீண்டாது.நெருங்கவும் முடியாது]
இந்த காதல் நம் சில இஸ்லாமிய பெண்களையும் விட்டுவைக்கவில்லை.
காதல் தூய அன்பு என்று பொருள் . காதல் காமத்துக்கு தூதுவிடும் பொருளாக மாறிவிட்டது. பெற்றோர்கள் மீது இல்லாத காதல்[அன்பு] . ஒருவன் மீது உனக்கு காதல். ''எனக்கு இவனை ஒரு மாதமாக தான் தெரியும் , இவன் மீது எனக்கு காதல். உன் பெற்றோர்கள் உனக்கு பல வருடமாக தெரியும் ஆனால், அவர்கள் மீது உனக்கு காதல்[அன்பு] வரவில்லை. கல்லூரிப் போனால் படிப்புதான் வரும் என்று சொல்வார்கள் ஆனால் காதல் வரும் என்று யாரும் சொல்லவில்லை.
தகாத நட்பு காரணத்தினால் வாழ்க்கை பாதை தடம் புரளும் நிலைக்கு இந்த காதல் கொண்டு போய் விடுகிறது. பெற்றோர்கள் தலைக் குனிந்து , அவமானப்பட்டு நிற்கும் நிலைக்கு இந்த காதல் கொண்டு வந்து விடுகிறது. இன்று பெண்பிள்ளைகளை  வளர்ப்பது ஒரு எளிதான காரியம் அல்ல . பெற்றோர்கள்  எந்தநேரமும் அச்சத்துடனும் , மன அழுத்தத்துடனும் பெண்பிள்ளைகளை கரைச் சேர்க்கும் வரை அவர்களுக்கு நிம்மதியான தூக்கமும் , மன அமைதியும் இருக்காது. பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை  சிறிய வயதில் உணவு ஊட்டம்போது. கூடவே ஈமானியும், இறையச்சத்தையும் ஊட்ட வேண்டும். வாலிப பருவம் வரும்போது , ஈமான் நல்ல காரியங்களைத் தூண்டும், இறையச்சம் தீமைகளை தடுக்கும். காதலில்  விழாமல் இறையச்சம் தடுக்கும். ஈமான் நபிவழியை போதிக்கும் ''ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தனியாக இருந்தால் மூன்றாவதாக ஷைத்தான்  இருப்பான் என்ற ஹதீஸ் ஞாபகம் வரும். வெட்கம் ஈமானின் ஒரு கிளை என்று அண்ணல் நபி [ஸல்] அவர்கள் சொன்ன ஹதீஸ் மனதில் இருக்கும். ஆண்களை பார்த்தால் பெண்கள் தலையை கீழே போட்டுக் கொண்டு வெட்கத்துடன் செல்வார்கள் . இது குரான் போதிக்கும் ஒழுக்கம் !
பெற்றோர்களே ! நீங்கள் உங்கள் பிள்ளைகளிடம் ஒரு கையில் அல்குரானும் , இன்னொரு கையில் ஹதீஸும் கொடுங்கள் ! நிச்சயமாக உங்கள் பிள்ளைகள்  வழி தவறமாட்டார்கள். [ இதற்கு என்ன பொருள் என்னவென்றால்  அந்த பிள்ளைகள் குரான் சொல்வதையும் , நபிமொழிகள் போதிப்பதையும் இந்த இரண்டையும் பற்றிப் பிடித்துக் கொண்டார்கள் என்றால் வழி தவறமாட்டார்கள் என்று பொருள் ]

இன்று முஸ்லிம்கள் அதிகமாக உலக கல்வியைக் கற்க ஆர்வமுள்ளவர்களாக  இருக்கிறார்கள். முஸ்லிம் பெண்கள் இன்னும் கல்வியில்  தேர்ச்சிப் பெற்று வருகிறார்கள். உலக கல்வி ஒரே நோக்கத்துடன்   கற்றுக்கொள்ளப்படுகிறது. அந்த நோக்கம் ஒரு நல்ல வேளையில் அமர வேண்டும். ஒரு திருப்தியான ஊதியம் கிட்ட வேண்டும். எல்லோருடைய குறிக்கோள் பணம் சம்பாதிக்க வேண்டும். யாரும் சும்மா படித்துவிட்டு வீட்டில் இருப்பதற்கோ அல்லது வேலை வெட்டி இல்லாமல் சுற்றுவதற்கோ அல்ல !

உலக கல்வி ஆர்வம் உள்ளவர்கள். அது ஏன் மார்க்க கல்வியில் அலட்ச்சியமாக இருக்கிறார்கள். இஸ்லாம் உலக கல்வி வேண்டாம் என்று சொல்லவில்லை. அதே நேரத்தில் மார்க்க கல்வியைக் கற்றுக் கொள்வது ஒவ்வொரு ஆணும் /பெண்ணும் மீது அவசியம் என்பது தெரியாதா>>?

கல்வி என்பது முஸ்லிமின் சிறப்பும் கட்டாயக் கடமையாகும் . கல்வியின் மூலமே அறிவு மேலோங்கும் என்பதை முஸ்லிம் உறுதி கொள்ளவேண்டும்.உலகிலுள்ள அல்லாஹ்வின் அருட்கொடைகளை அறிந்துகொள்ள கல்வியைப் பயன்படுத்திக் கொள்வது கடமையாகும்.
நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் .. ''கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கட்டாயக் கடமையாகும்.
ஆதாரம்.. இப்னு மாஜா]
கல்வி மற்றும் ஞானத்தின் மூலம்தான் மனிதன் தனது அறிவை சீற்படுத்திக்கொள்ள முடியும்  என்பதால் கல்வி கற்றுக்கொள்வது கட்டாயக் கடமையாகும். இறுதி மூச்சுவரை  முஸ்லிம் கல்வியைத் தேடவேண்டும்.

நிச்சயமாக எவர்கள் [அல்லாஹ்வுக்குப்] பயப்படுகிறார்களோ அவர்களுள்  ஷைத்தானுடைய [தவாறன ] எண்ணம் ஊசலாடினால், அவர்கள் [அல்லாஹ்வை] நினைக்கிறார்கள். அது சமயம் அவர்களுடைய  [அறிவுக்] கண் திறந்து விழிப்படைந்து விடுகிறார்கள் .
அல்குர் ஆன் .. 7..201]

நிச்சயமாக முஸ்லிம் தனது இறையச்சம் பற்றியும் மனத்தூய்மை  பற்றியும் விசாரிக்கப்படுவார். எனவே அவர் கீழ்த்தரமான செயல்களிலிருந்து  தன்னை எல்லா நிலையிலும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

ஆத்மாவின் மீதும் அதனை [மனிதனாக] உருவாக்கியவன் மீதும், அதன் நன்மை, தீமைகளை  அதற்கு அறிவித்தவன் மீதும் சத்தியமாக, எவன் [பாவங்களை விட்டும்] தன்னை பரிசுத்தமாக்கிக் கொண்டானோ அவன் நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டான். எவன் அதனைப் [பாவத்தில்] புதைத்து விட்டானோ அவன் நிச்சயமாக நஷ்டமடைந்துவிட்டான் .
அல்குர் ஆன் .. 91..7-10]

முஸ்லிம் தனது இறையச்சத்தையும் நற்பண்புகளையும் ஈமானையும் அதிகப்படுத்தும் சிறந்த நண்பர்களையும் சபைகளையும் தேர்ந்தெடுத்து கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். மனித ஷைத்தான்களின் தீய நட்பையும் இதயம்  கடினமாகி ஆத்மாவுக்கு அநீதி இழைக்கப்படும் பாவங்கள் நிறைந்த சபைகளையும் புறக்கணித்து விடவேண்டும்.

மேலே கூறப்பட்ட கருத்துக்கள் உங்களுக்கு நன்றாக விளங்கியிருக்கும் என்று நம்புகிறேன். இறுதியாக ஒரே ஹதீஸ் சொல்லி முடிக்கிறேன்..
நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் .. நல்ல நண்பருக்கும் கெட்ட நண்பருக்கும் உதாரணம் கஸ்தூரியை  வைத்திருப்பவனுக்கும் கொல்லனுக்கும் ஒத்ததாகும். கஸ்தூரியை வைத்திருப்பவன் உனக்கு தடவி விடலாம் அல்லது அதிலிருந்து கொஞ்சம் நீ வாங்கிக் கொள்ளலாம். அல்லது நறுமணத்தையாவது நீ நுகரலாம். கொல்லன்  உனது ஆடையை எரித்துவிடுவான் அல்லது அவனிடமிருந்து துர்நாற்றத்தை நுகர்வாய்.
ஆதாரம்.. சஹீஹூல் புகாரி. முஸ்லிம்]

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!