அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

ஞாயிறு, பிப்ரவரி 14, 2016

இந்த உலகம் ஒரு சோதனை களம் .......

இந்த உலகம் ஒரு சோதனை களம் .......
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்...

அல்லாஹ்  கூறுகிறான்..
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன் , மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்,, மேலும் அவன்[யாவரையும்] மிகைத்தவன்,, மிக மனிப்பவன்.
அல்குர் ஆன்..67..2]

ஒரு முஸ்லிம் அவர் வீட்டில் இரண்டு ஆடுகளை வளர்த்து வருகிறார். அதில் ஒரு ஆடு நல்ல கொளுத்த ஆடு. இன்னொரு ஆடு மெலிந்த நொண்டி ஆடு .
ஒரு தடவை கொளுத்த ஆடு நொண்டி ஆட்டை பார்த்து கேட்டதாம்.'' இதோ பார் என் எஜமான் எனக்கு நிறைய தீணி போடுகிறார், நல்லவிதமாக என்னை கவனித்து வருகிறார். நான் நன்றாக சாப்பிட்டு எப்படி இருக்கேன் என்று அந்த கொளுத்த ஆடு சொன்னதாம். அதற்கு அந்த நொண்டி ஆடு பதில் சொன்னதாம் ''நீர் சொல்வது உண்மைதாம்!  இன்ஷாஅல்லாஹ்  ஹஜ்பெருநாள் வரட்டும் அப்பொழுது தெரியும் என்று''. [ஆட்டை அறுத்து குர்பானி கொடுப்பதற்காக ]


ஒரு அறிஞர் இடத்தில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது..
அல்லாஹ்வை தொழுது , நோன்பு பிடித்து வருபவருக்கு சோதனை வருவது எதனால் ..? அதற்கு அவர் பதில் சொன்னார்.. மேலே கூறிய அல்லாஹ்வின் வசனத்தை கூறி. பிறகு வாழ்க்கை எதார்த்தத்தை புரிந்து கொள்ளவேண்டும். உலக வாழ்க்கை என்பது ஒரு சோதனை களம்! அல்லாஹ்  கூறுகின்றான்.. ''நாங்கள் உங்களை நன்மையை கொண்டும் , தீமையை கொண்டு சோதிப்போம் என்று.''
பெரும்பாலும் நினைக்கிறார்கள் சோதனை என்பது , வறுமை, தொழில் இல்லை, பணம் இல்லை என்று . அப்படி இல்லை . அவர் கூறும்போது '' நாங்கள் இலங்கையில் இருக்கும்போது எங்களுக்கு வாழ்க்கையில் நெருக்கடி இருந்தது. இப்பொழுது நாங்கள் சிங்கப்பூரில் இருக்கிறோம் நிம்மதியாக வசதியாக அல்லாஹ்  வைத்திருக்கிறான் '' இல்லை '' அல்லாஹ்  வசதியை கொடுத்து பணத்தை கொடுத்து சோதிக்கிறான்.

மேலும் அவர் கூறும்போது..
எனக்கு இலங்கையில் ஒரு நண்பர் இருந்தார் . அவர் பணக்காரர் மட்டுமல்ல . அவர் 800 விதவை பெண்களுக்கு மாதம் மாதம் கடந்த 15 வருடமாக பணம் கொடுத்து வருகிறார். அந்த பணக்காரர் நண்பர் கூறியதை இவர் கூறுகிறார்.. நான் ஒருநாள்  வறுமையில் இருந்தேன். என் சகோதரி பசியின் காரணத்தினால் அவள் இறந்துவிட்டாள் . பிறகு அல்லாஹ்  எனக்கு நிறைய செல்வத்தையும், பொருளையும் கொடுத்தான். அன்று பசியால், பட்டினியால், வறுமையில்  இருக்கும்போது நான் உணர்ந்தேன்! ஆனால் இப்பொழுது எனக்கு அல்லாஹ்  செல்வத்தையும் , வசதியும் கொடுத்துள்ளான். இப்பொழுது என்னால் உணரமுடியவில்லை .
பசி, பட்டினி , வறுமை பணம் இல்லாமல் சோதிப்பதைவிட  செல்வம் ,பணம், பட்டம் பதவி எல்லாம்  கொடுத்து சோதிப்பது தான் மயங்கரமான சோதனை என்று கூறி முடித்தார். அதனால்தான் இந்த சோதனையை வெல்ல வெற்றிப் பெற  நல்ல காரியங்களுக்கு செலவு செய்கிறேன். தீனுக்காக பணத்தை கொடுக்கிறேன் என்று கூறி முடித்தார்.
என்ன ஒரு அற்புதமான தெளிவான விளக்கம்!

ஒரு பணக்கார் ஒரு ஏழையை பார்த்து கேட்டார்.. ''நீங்கள் எப்பொழுதும் தினந்தோறும்  ஐந்து வேளை  தொழுகிறீர்கள்''  ரமலான் மாதத்தில் நோன்பு பிடிக்கிறீர்கள்  அல்லாஹ்க்கு பயந்து நடக்கிறீர்கள். அப்படி இருந்தும் அல்லாஹ்  உங்களை எப்பொழுதும் அப்படியே வைத்திருக்கிறான். என்னை பாருங்கள் நான்  தடுக்கி விழுந்தால் கூட பள்ளிப் பக்கம் விழ மாட்டேன். என்னை அல்லாஹ்  நல்ல வசதியாக வைத்திருக்கிறான். அந்த மனிதர் பதில் சொன்னார்! எனக்கு போதுமென்று மனம் இருக்கிறது நபிமொழி .கருத்து. யார் போதுமென்று மனம் உள்ளவர்களாக இருக்கிறார்களோ அவர்கள்தான் உண்மையான பணக்கார் என்று  கூறினார். மேலும் அவர் இன்ஷாஅல்லாஹ்  எனக்கு அல்லாஹ்  மறுமையில் நிரப்பமாக நற்கூலி கொடுப்பான். அல்லாஹ்  எனக்கு கொடுத்ததை பொருந்திக் கொண்டு வாழ்கிறேன் என்று அழகாக பதில் சொன்னார்.

இந்த உலகத்தில் பணமோ, பதவியோ பட்டமோ , செல்வமோ , செல்வாக்கோ இவைகள் முக்கியம் அல்ல! இவைகள் யாருக்கு கொடுக்கப்பட்டதோ , அவர்களை அல்லாஹ்  கடுமையாக சோதிக்கிறான் என்று பொருள் ! நல்லதாக எண்ணிவிட கூடாது. நமக்கு பணம் இல்லை, வசதி இல்லை, தொழில் இல்லை  , குழந்தை செல்வம் இல்லை, அது இல்லை இது இல்லை என்று புலம்ப வேண்டாம். இதுவும் உங்களுக்கு லேசானா சோதனைதான் என்பதை உணர முடியும். பணமும் செல்வமும் குவிந்தால் நமக்கு எந்த உணர்வும் இருக்காது. பாவத்தின் பக்கமும் ஆணவத்திலும்  வாழ்ந்து வருவோம்! என்பதை ஒவ்வொரு உண்மையான முஸ்லிம் புரிந்தாலே வாழ்க்கை  நல்ல முறையில் செல்ல அல்லாஹ்  உதவியும் கிருபையும் தருவான். குறிப்பாக சகீனத் என்னும் அமைதி வரும்!
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!