அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

புதன், மார்ச் 30, 2016

இந்த அந்தஸ்த்து நமக்கும் கிடைக்கவேண்டுமா..!

அல்லாஹ்வின் நல்லடியார்களே!
ஏப்ரல் ஒன்று வருகிறது.
கவனமாக இருக்கவும்.ஏமாறாதீர்கள்!
ஏமாற்றாதீர்கள்!
அல்லாஹ்வைச் அஞ்சிக் கொள்ளுங்கள்!
இந்த அந்தஸ்த்து நமக்கும் கிடைக்கவேண்டுமா..!
அல்லாஹ்வின் திருபெயரால்..........
மறுமையில் நல்லடியார்களுக்கு கிடைக்ககூடிய  நற்கூலிகளும் , அந்தஸ்த்துக்களும்  பற்றி நிறைய ஹதீஸ்கள் உள்ளன. அவைகளை அடைவதற்கு சகாபாக்கள் ஒருவொர்கொருவர்  போட்டிப் போட்டார்கள். நாம் இந்த உலகத்தை அடைவதற்கு ஒருவொர்கொருவர்  போட்டிப் போடுகிறோம் தவிர, மறுமையில் கிடைக்கும் பல அந்தஸ்த்துக்கள்  பற்றி நமக்கு கவலையில்லை, அக்கறையும் இல்லை!


அண்ணல் நபி [ஸல்] அவர்கள் நவின்றார்கள்..
''அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் இறைத்தூதராகவோ, இறைவழியில் உயிர் நீத்த தியாகிகளாகவோ  [ஷஹீத்களாகவோ ] இருக்கமாட்டார்கள். ஆனால் மறுமைநாளில் அல்லாஹ்விடம் அவர்களுக்கு கிடைக்கும்  அந்தஸ்த்தைக் கண்டு நபிமார்களும், தியாகிகளும் ஆதங்கப்படுவார்கள்!'' மக்கள் வினவினர் ..  ''அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யார்? அண்ணலார் பதில் அளித்தார்கள்..  ''அவர்கள் ஒருவருக்கொருவர் உறவினர்களாய் இல்லாமலிருந்தும், தமக்கிடையே எந்தவிதக் கொடுக்கல் வாங்கலும் இல்லாமலிருந்தும், இறைவனின் மார்க்கத்திற்காகவே  ஒருவரையொருவர் நேசித்து வந்தவர்கள். இறைவன் மீது ஆணையாக! அவர்களின் முகங்கள் ஒளிவீசிக் கொண்டிருக்கும். அவர்களைச் சுற்றிலும் எல்லாத் திசைகளிலும் ஒலிமையமாகவே இருக்கும். மக்கள் அனைவரும் அச்சத்திலும் ஆழ்ந்திருக்கும் [மறுமை] நேரத்தில் அவர்களுக்கு அச்சம் ஏதும் இராது. மக்கள் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் நேரத்தில் அவர்களுக்கு எந்தத் துயரமும் இராது.

பிறகு அண்ணலார்,  ''தெரிந்து கொள்ளுங்கள்! திண்ணமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எத்தகைய அச்சமும் இல்லை. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்'' எனும் திருமறை [10..62] வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
அறிவிப்பாளர்.. உமர் [ரலி]

நபிமொழியில் கூறப்பட்டுள்ள உயர் தகுதியுடைய மக்கள் மார்க்கத்தின் அடிப்படையிலேயே ஒருவர் மீதொருவர் அன்பு செலுத்தினார்கள். இரத்த உறவோ, வியாபாரக் கொடுக்கல் வாங்கலோ அவர்களை ஒருவரோடொருவர் இணைத்திடவில்லை, மாறாக இஸ்லாமும், 'இஸ்லாமிய வாழ்வை உருவாக்கிட வேண்டும்' எனும் ஆர்வத்துடிப்பும்தான் அவர்களை ஒருவருக்கொருவர் நண்பர்களாய், தோழர்களாய் விளங்கச் செய்தது. இத்தகையவர்களுக்கு இவ்வுலகில் வெற்றியும் உதவியும் கிட்டுமென்றும்  மறுவுலகில் நிரந்தர நற்கூலி கிடைக்குமென்றும் நற்செய்தி அளிக்கப்பட்டுள்ளது.

இன்று, குடும்பத்திலும் சரி, உறவினர்கள் மத்தியிலும் சரி, நண்பர்கள் மத்தியிலும் சரி, சமூகத்திலும் சரி ஒருவருக்கொருவர் தூய அன்பு உள்ளத்தில் இல்லாமல் போய்விட்டது.. சுயநலமும், ஏதாவது காரியத்தை சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பழகுவது  பேசுவது இப்படி நம் சமுதாயத்தில் வந்துவிட்டது.  சிலரைத் தவிர.........

எந்தவொரு நோக்கமும் இல்லாமல் பிரதிபலன் எதிர்பார்க்காமல்  ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி வந்தால்  எவ்வளவு சிறப்பாக இருக்கும். இதற்க்கு மேலாக   இறைவனின் மார்க்கத்திற்காகவே  ஒருவர்க்கொருவர் அன்பு செலுத்தி வந்தால் இன்ஷாஅல்லாஹ்  அந்த உயர்ந்த அந்தஸ்த்து கிட்டும் என்பதில் ஐயம் இல்லை!
அல்லாஹ்  நம் அனைவரையும் அந்த பாக்கியம் கிட்ட அருள் புரிவானாக ! ஒருவருக்கொருவர் அன்புடனும், நேசத்துடனும் வாழ தௌபீக் செய்வானாக..!
அல்லாஹ்  மிக்க அறிந்தவன்..
சத்திய பாதை இஸ்லாம்...வலைத்தளம் ....
உங்கள் முகநூல் பாக்கியாத் ஸாலிஹாத்  ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!