அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

புதன், மார்ச் 02, 2016

நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே மணந்துக் கொள்!

மார்க்கப் பற்று உள்ள பெண்ணை
நீர் மணந்தால் ,உன் வாழ்க்கையில்
சுவனக்காற்று வீசும்!
இல்லையெனில் புயல் காற்றுதான்
அடிக்கும்!
நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே மணந்துக் கொள்!
நபிகள் நாயகம்  [ஸல்] அவர்கள் நவின்றார்கள்..
''நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள் ,, அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக , அவளுடைய மார்க்கப்பற்றுக்காக ! நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும்,, உமக்கு நலம் உண்டாகட்டும் !''
அறிவிப்பாளர்.. அபூஹுரைரா [ரலி]
நூல்.. புகாரி, முஸ்லிம்]


விளக்கம்..****
இந்த நபிமொழியின் கருத்தாவது .. பெண்ணிடம் நான்கு விஷயங்கள் பார்க்கப்படுகின்றன. சிலர் செல்வத்தைப் பார்க்கின்றார்கள். சிலர் குளைச் சிறப்பை கவனிக்கின்றார்கள். வேறு சிலர் பெண்ணின் அழகிற்காக மணம் முடிக்கின்றார்கள். இன்னும் சிலரோ  மார்க்கப்பற்றைப் பார்க்கின்றார்கள். ஆனால், நபி [ஸல்] அவர்கள் முஸ்லிம்களுக்கு வழங்கியிருக்கும் அறிவுரை  ''ஒரு பெண்ணிடம் பார்க்க வேண்டிய உண்மையான தகுதி அவளுடைய மார்க்கப்பற்றும், இறையச்சமும் ஆகும். இதனுடன் மற்றச் சிறப்புகளும் தகுதிகளும் ஒன்று சேர்ந்து விட்டால் அதுவும் நன்றே! எனினும் மார்க்கப்பற்றைப் பார்க்காமல் புறக்கணித்து விடுவதும், செல்வத்தையும் அழகையும் மட்டும் பார்த்து மணமுடிப்பது ஒரு முஸ்லிமின் செயலன்று .''

நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் நவின்றார்கள்..
''பெண்களை அவர்களின் அழகுக்காக  திருமணம் முடிக்காதீர்கள்,, அவர்களுடைய அழகு அவர்களை அழித்துவிடக் கூடும். பெண்களைச் செல்வந்தர்கள் என்பதற்காக மணம் முடிக்காதீர்கள்,, அவர்களுடைய செல்வம் வரம்பு மீறுவதிலும் அடங்காப் பிடாரித்தனத்திலும் அவர்களை ஆழ்த்திவிடக் கூடும். மாறாக மார்க்கப்பற்றின் அடிப்படையில் அவர்களை மணமுடித்துக் கொள்ளுங்கள்.
மார்க்கப்பற்று கொண்ட கருப்புநிற அடிமைப்பெண், அல்லாஹ்வின் பார்வையில்  வெண்ணிறமுடைய மார்க்கப் பற்றில்லாக் குடும்பப் பெண்ணைவிடச் சிறந்தவள் ஆவாள்.
அறிவிப்பாளர்.. அப்துல்லாஹ் பின் அமர் [ரலி]
நூல்.. அல்முன்தகா ]

அண்ணல் நபி [ஸல்] அவர்கள் மொழிந்தார்கள்..
''எவருடைய மார்க்கப் பக்தியையும் நற்குணத்தையும் நீங்கள் விரும்புகின்றீர்களோ அத்தகைய மனிதர் உங்களிடம் திருமணம் கேட்டு வந்தால் அவருக்கு மணமுடித்துக் கொடுத்து விடுங்கள் . நீங்கள் இப்படிச் செய்யாவிட்டால் பூமியில் குழப்பமும் தீமையும் விளைந்து விடும்.
அறிவிப்பாளர்.. அப்துல்லாஹ் பின் அமர் [ரலி]
நூல்.. திர்மிதி]
விளக்கம்..***
நபி [ஸல்] அவர்களுடைய கருத்து இதுதான்.. மண விவகாரத்தில் பார்க்க வேண்டிய தகுதி மார்க்கப்பற்றும் நல்லொழுக்கமுமே ஆகும். இவற்றைப் பார்த்திடாமல் சொத்து சுகங்களையும் குலச் சிறப்பையும் மட்டுமே பார்த்தால் முஸ்லிம் சமூக அமைப்பில் அதனால் பெரும் தீமை விளையும் . எவருடைய பார்வையில் மார்க்கம் இவ்வளவு தாழ்ந்து போய் சொத்து சுகம் மட்டுமே கவனிக்கத் தகுந்ததாகவும் , மதிப்புகுரியதாகவும் விளங்கிகிறதோ அத்தகைய உலகாயதவாதிகளிடம் மார்க்கம் எனும் தோட்டத்தை - தியாக நீரைப் பாய்ச்சி செழிக்கச் செய்திட வேண்டும் எனும் உணர்வு எங்கே பிறக்கப்போகிறது ? இத்தகைய நிலையைத்தான் நாயகம் [ஸல்] அவர்கள் சோதனை [குழப்பம்] என்றும் தீமை என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

வருங்கால இஸ்லாமிய இளஞர்களே ! உங்களுக்கு பெண் பார்க்கும் பெற்றோர்களுக்கு நீங்கள் அவர்களுக்கு கூறுவது என்னவென்றால் .. ''நான் ஒரு மார்க்கப்பற்று உள்ள பெண்ணையே மணமுடிக்க ஆசைப்படுகிறேன் '' ஆகையால் , நீங்கள் ஒரு நல்ல சாலிஹான மார்க்கப்பற்று உள்ள பெண்ணை  தேடுங்கள்! என்று சொல்லிவுடுங்கள் ! இன்ஷாஅல்லாஹ் உங்களுக்கு அல்லாஹ்    அருளும் , வாழ்க்கையில் மன நிம்மதியும் தருவான்... இஸ்லாமிய பெண்களே! நீங்களும் உங்கள் பெற்றோர்களிடம் .. ''நான் ஒரு மார்க்கப்பற்று உள்ள நற்குணமும் , நல்ல பண்பும் , நன்னடத்தையும் உள்ள ஆணை  திருமணம் செய்ய விரும்புகிறேன் என்று கூறுங்கள்! இன்ஷாஅல்லாஹ் உங்கள் வாழ்க்கையில் சுவனக்காற்று வீசும்..
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!