அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

வியாழன், மார்ச் 03, 2016

சிந்திக்க சில நபிமொழிகள் .......

சிந்திக்க சில நபிமொழிகள் .......
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருபெயரால் துவங்குகிறேன்....

ஒருமுறை அண்ணல் நபி [ஸல்] அவர்கள் பள்ளிவாசலினுள் இருந்தபோது, தலைமுடியும் தாடியும் ஒழுங்கின்றிக் கிடந்த ஒருவர் பள்ளிவாசலினுள் நுழைவதைக் கண்ட அண்ணலார் அவர்கள், அவரைப் பார்த்து  ''திரும்பிப் போய்  தலையையும் தாடியையும் சீப்பால் வாரி ஒழுங்குபடுத்திக் கொண்டு வா'' என சைகை காட்டினார்கள். அவர் அவ்வாறே சென்று தலைமுடியை வாரிக் கொண்டு திரும்பி வந்தார். அண்ணல் நபி [ஸல்] அவர்கள்,  ''மனிதனின் தலைமுடி தாறுமாறாகக் கலைந்துபோய், அவன் ஷைத்தானைப் போல் காட்சியளிப்பதை விட இது நல்லதல்லவா? என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்.. அதாஉ பின் யஸார் [ரலி]
நூல்..மிஷ்காத்]


இன்று நம்மில் சிலபேர்கள் குறிப்பாக தௌஹீத் வாதிகள் ,   அவர்களில் சிலர் பள்ளிக்கு செல்லும்போது தலையை ஒழுங்காக வாரிக் கொண்டு வருவதில்லை. சிலர் தலையை தாறுமாறாகக் கலைந்துபோய் , ஒழுங்கின்றி வருவதை பார்க்கின்றோம். அவர்கள் நன்றாக விளங்கிக் கொள்ளவேண்டும். அல்லாஹ்வின் இல்லத்துக்கு நாம் எப்படி வரவேண்டும் என்பதை .
மேலே கூறியுள்ள ஹதீஸ் .. அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி [ஸல்] கூறியது அந்த மனிதரைப் பார்த்து, '' திரும்பி போய்  தலையையும் தாடியையும் சீப்பால் வாரி ஒழுங்குபடுத்திக் கொண்டு வா'' என்று தான் ஒழிய , நீர் தொப்பி அணிந்து  கொண்டு வா என்று கூறவில்லை. இதை சுன்னத்து ஜாமத்தினர் விளங்கிக் கொள்ளவேண்டும்! தொப்பி இல்லாமல் பள்ளிக்குள் வரக் கூடாது அதேநேரத்தில் தாடி இல்லாமல் வரலாம்... முரண்பாடுகள் நம்மிடத்தில் களைந்து போனால்.. சமாதானம் காணப்படும்! வீம்புக்காக , ''நீர் என்ன சொல்வது என்று பிடிவாதமாக தொப்பி இல்லாமல் வருவது பிரச்சனைகள் உருவாவதற்கு வழிவகுப்பது. சிந்திக்க வேண்டும் ! சமாதானம் முக்கியமா..? அல்லது இயக்கவாதம் முக்கியமா..?

[தம் தந்தையார் கூறியதாக அறிவிக்கின்றார்]
நான் அண்ணல் நபி [ஸல்] அவர்களின் திருச்சமுகத்திற்கு சென்றேன். அப்போது நான் அணிந்திருந்த ஆடைகள் சாதாரணமான வையாகவும், தரம் குறைந்தவையாகவும் இருந்தன. அண்ணலார்  ''உம்மிடம் செல்வம் உள்ளதா? என வினவினார்கள். நான் அதற்கு, ''ஆம்'' என்றேன் அதற்கு அண்ணலார்,  'எத்தகைய செல்வம்?'' எனக் கேட்டார்கள்.  ''அல்லாஹ்  எல்லாவிதமான செல்வத்தையும் எனக்கு வழங்கி இருக்கின்றான். என்னிடம் ஒட்டகங்களும் உள்ளன,, பசுக்களும் உள்ளன,, ஆடுகளும் உள்ளன,, குதிரைகளும் உள்ளன,, அடிமைகளும் உள்ளனர்'' என்று நான் பதில் கூறினேன். அதற்கு,  ''அல்லாஹ்  உமக்கு இவ்வளவு செல்வம் கொடுத்திருக்கிறான் எனில், அவனது அருளின் அடையாளம் உங்கள் உடலில் வெளிப்பட்டிருக்க வேண்டும்'' என்று அண்ணலார் கூறினார்கள்.
அறிவிப்பாளர்.. அபுல் அஹ்வஸ் [ரலி]
நூல்..மிஷகாத்]
விளக்கம் ..*** இதன் கருத்து .. அல்லாஹ்  எல்லாம் கொடுத்து வைத்திருக்கிறான் என்றால் உங்கள் வசதிகேற்றவாறு உண்ணுங்கள், பருகுங்கள்! மனிதனுக்கு வீட்டில் எல்லா வசதிகளும் இருக்க , பரம ஏழையைப்  போல் தன்னை ஏன்  ஆக்கிக் கொள்ளவேண்டும்? அது மிகவும் கெட்ட  பழக்கம். அல்லாஹ்வுக்கு நன்றி கொல்வதாகும் .

அண்ணல் நபி [ஸல்] அவர்களிடம் ஒரு மனிதர் ,  ''இஸ்லாத்தின் எந்தச் செயல் சிறந்தது? '' என்று வினவினார்கள். அதற்கு அண்ணலார், ''ஏழை எளியவர்களுக்கு உணவளிப்பதும், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஸலாம்  சொல்வதாகும்- அவர் உமக்குத் தெரிந்தவாராயிருப்பினும் சரி, தெரியாதவராயிருப்பினும் சரியே! '' [அதாவது அவர் உம்மிடம் பழகியவராயிருப்பினும்  சரி, பழகாதவராயிருப்பினும்  சரியே!]
அறிவிப்பாளர்.. அப்துல்லாஹ் பின் உமர் [ரலி]
நூல்..புகாரி, முஸ்லிம்]

இன்று நம்மில் ஒருவர்  மற்றவருக்கு ஸலாம்  சொல்வதே அரிது! அப்படி சொன்னாலும் கூட  '' அவர் எந்த ஜமாஅத் என்று பார்த்து விட்டுதான் சொல்லுவோம்! அப்படி நிலைமை ஆச்சு!  இன்று நம்மில் பெரும்பாலும் கேள்வி கேட்டால் ''என்ன கேட்ப்போம்'' மௌளது ஓதலாமா..? விரலை ஆட்டலா? இறை நேசர்களுக்கு நேர்ச்சை செய்யலாமா ? 786 போடலாமா ? இப்படி அறிவுபூர்வமான கேள்விகள் கேட்டு கேட்டு தான்  ஈமானை வளர்த்து கொள்வதற்கு பதிலாக ஈமானை  குறைத்துக் கொள்கிறார்கள். இனி உங்கள் ஈமானை அதிகரிக்க இறையச்சம் உள்ளத்தில் இருக்க என்ன  கேட்க வேண்டுமோ அதை கேளுங்கள்!
அல்லாஹ்  மிக்க அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!