அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

திங்கள், ஏப்ரல் 11, 2016

பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டது .......

பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டது .......
அல்லாஹ்வின் திருபெயரால்........................
நம்முடைய பிராத்தனை ஏன்  ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை ..? என்ன காரணம் ..? தினமும் நாம் அல்லாஹ்விடம் துஆச் செய்கிறோம் ... செய்துக் கொண்டியிருக்கிறோம்.. ஆனால் ... நம் துஆ அல்லாஹ்  ஏற்றுகொள்வதில்லையே  ஏன் ஏன் ..?


ஒரு சமயம் மதீனா முனவ்வராவில் மழையில்லாமல் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. எனவே பொது மக்கள் அனைவரும் ஓர் இடத்தில் ஒன்றுகூடி ஆலோசித்துக் கொண்டிருந்தார்கள்! அப்பொழுது ஒரு பெரியார் அங்கு விஜயம் செய்து அவர்களிடம்  ''எதற்காக இங்கு குழுமியுள்ளீர்கள்'' என்று கேட்டதற்கு, ''இங்கு மழையில்லாமல் பெரும் கஷ்ட நிலையை அடைந்துள்ளோம். அதற்காக வேண்டி என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்வதற்காக இங்கு ஒன்று சேர்ந்துள்ளோம்'' என்று அம்மக்கள் கூறினார்கள். அம்மக்கள் சொன்ன அவ்விஷயங்களை கேட்ட அப்பெரியார் அப்பொழுது அந்த இடத்திலேயே நல்ல விதமாக ஒளுவு  செய்து பயபக்தியோடு இரண்டு ரக்அத்துகள்  தொழுது முடித்து எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் மன்றாடினார்கள் , ''யா அல்லாஹ் ! இவ்வூரில் மழையைப்  பொழியச்  செய்வாயாக! '' என்று பிரார்த்தனை புரிந்துவிட்டு கையை முகத்தில் தடவிக் கொள்வதற்குள்ளாகவே மழை  கொட்டோ கொட்டென்று கொட்டியது, எங்கு பார்த்தாலும் ஒரே தண்ணீர் மயமாகவே இருந்தது. அவ்வளவுக்கு அதிகமான மழை ! மீண்டும் அப்பெரியார் இரு கரங்களையும் மேந்தி இறைஞ்சினார்கள், ''யா அல்லாஹ் ! இந்த இடத்திற்கு இம்மழை  போதுமேன்றிருந்தால் இம்மழையை  நிறுத்துவாயாக! '' என்று பிரார்த்தனை செய்து முடிப்பதற்குள்ளாக, மழை  நின்றுவிட்டது.

அங்கு குழுமியிருந்த மக்கள் அப்பெரியார் அவர்களிடம்  ''இத்தகைய சக்தியைத் தாங்கள் எவ்வாறு அடைந்தீர்கள்? மழைக்காக துஆச் செய்ததும் உடனே மழை  பெய்தது,, மழையை  நிறுத்தவும் துஆ செய்தவுடனே மழையும் நின்றுவிட்டதே? இது எங்களுக்கு ஆச்சிரியமாக இருக்கிறது என் வினவினார்கள்..

இங்குதான் அந்த பெரியார் சொல்வதை நாம் கவனிக்கவேண்டும்! சிந்திக்கவேண்டும்! நாம் ஹலாலை பேணுவதில்லை.. நாம் ஹராமை விட்டு இன்னும் விலகவில்லை.. கடமையான விஷயங்களில் போடுபோக்கித்தனம்.. இஸ்லாத்தில் நாம் இன்னும் முழுமையாக நுழையவில்லை..  இன்னும் நம்மிடத்தில் அனாச்சாரமும் , மூடநம்பிக்கையும் குடிகொண்டிருக்கிறது.. மார்க்கத்தில் பெயராலே புது புது நூதன காரியங்கள்..  இப்படி ஏராளமான பழக்கங்கள் நம்மிடத்தில் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

அதற்கு அப்பெரியார் அவர்கள் ''இதில் ஆச்சிரியப்பட வேண்டிய விஷயம் என்ன இருக்கிறது? அல்லாஹூதஆலா  என்மீது எவை எவைகளையெல்லாம்  கடமையாக்கியுள்ளானோ  அவைகளையெல்லாம் செய்கிறேன்,, மேலும் எவைகளையெல்லாம்  செய்ய வேண்டாமென்று தடுத்துள்ளானோ , அவைகளை எல்லாம் செய்யாமலிருக்கிறேன்  .
அல்லாஹ்  மிக்க அறிந்தவன்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!