அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

புதன், ஏப்ரல் 27, 2016

சிந்திக்க சில துளிகள்.......

  சிந்திக்க சில துளிகள்.......  ஒருகாலத்தில் பெற்றோர்கள் தன்னுடைய பெண்பிள்ளைகள் அவர்களுடைய மாமியார் வீட்டில் வாழ்வதை பெருமையாகவும், சந்தோசமாகவும் நினைத்தார்கள். இப்பொழுது  பெற்றோர்கள் தங்களுடைய  பெண்பிள்ளைகள் வெளிநாட்டில் வாழ்வதை [அதாவது இருப்பதை] பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் நினைக்கிறார்கள்.
******************************************************************
ஹிந்து சகோதரியின் ஒரு கேள்வி ..? எப்படித்தான் இந்த கடுமையான வெப்பத்திலும் சூட்டிலும்  இந்த முஸ்லிம் பெண்கள் உடலை மறைத்துக் கொண்டு ஹிஜாப் அணிந்துக் கொண்டு வெளியில் செல்கிறார்களோ .
நம்மால் முடியாதும்மா ...! நாம் மெல்லிய ஆடை அணிந்தும் நமக்கு அவ்வளவு  கஷ்ட்டமாக இருக்கிறது . இவர்களுக்கு எப்படி சத்தியமோ..?
பதில்.. இந்த உலகத்தின்  வெப்பத்தைவிட  மறுமையில் இதைவிட பல மடங்கு வெப்பம் இருக்கும். சூரியன் கண்ணுக்கு எட்டிய தூரம் இருக்கும். நரகத்தின் நெருப்பு இந்த உலகத்தின் நெருப்பைவிட 70 மடங்கு அதிகம். ஒரு பெண் ஹிஜாப் அணிவது அவளை கஷ்ட்டபடுத்துவதற்கு அல்ல! மாறாக அவளைப் பாதுகாப்பதற்க்காக ! தீய கண்களைவிட்டு பாதுகாப்பு பெறுவதற்காக !

***************************************************************************
சூரியன் பல கோடி மைல் தூரத்தில் இருக்கும்போதே நம்மால் இந்த வெப்பத்தை தாங்கமுடியவில்லை. அருகில் வந்தால் எப்படி இருக்கும்? இப்பொழுது இருக்கின்ற வெப்பமும் , வெயிலின் தாக்கமும் , அனல் சூடும், இது அனைத்தும் நரகத்தின் வெளிப்பாடு என்று ஒரு நபிமொழி கருத்து. மக்கள்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காக . இறைவன் பல சோதனைகளை  தருகின்றான். படிப்பினை பெறவேண்டும் என்பதற்காக இதுபோன்ற நிகழ்வுகள் வருகிறது.
****************************************************************************
அல்லாஹ்வின் மிகப் பெரிய அருட்கொடை இந்த தண்ணீர்!  தண்ணீர் இல்லாத ஊருகளில் தண்ணீருக்காக படும் அவஸ்த்தை , கஷ்ட்டம் கொஞ்சம் நஞ்சம் இல்லை. சில ஊருகளில் அந்த தண்ணீரை வீண் விரயம் செய்கிறார்கள். தண்ணீர் பஞ்சம் என்றால் என்ன என்பது அவர்களுக்கு ஒரு நாள் தெரிய வரும்.. இந்தியாவில் எல்லாவற்றையும் வீணடிப்பதை தான் கற்றுக் கொண்டார்கள் தவிர அவைகளை சேமிக்க வேண்டும் என்பது கற்றுக்கொள்ளவில்லை! இப்பொழுதே அல்லாஹ்விடம் நாம் அதிகம் அதிகம் பிரார்த்தனைச் செய்யவேண்டும் . ''யா அல்லாஹ்! எங்களுக்கு தண்ணீர் பஞ்சத்தை ஏற்படுத்தி விடாதே ! தண்ணீர் இல்லாமல் எங்களை அவதிக்கு ஆளாக்கி விடாதே! அந்த தண்ணீரை சிக்கனமாகவும் , சிறந்தமுறையில் பயன்படுத்தவும் , அதற்காக நல்லமுறையில் நன்றி செலுத்தவும் எங்களை ஆக்கி வைப்பாயாக ..! [ஆமீன்]
*************************************************************************
இன்ஷாஅல்லாஹ்  ரமலான் வருகிறது..  அதற்காக நாம் இப்பொழுதே தயார் படுத்தவேண்டும்! அல்லாஹ்விடம் துஆச் செய்யவேண்டும். ரமலானை முழுமையாக பிடிப்பதற்கு , உடல் வலிமையையும் , உறுதியான ஈமானையும் அல்லாஹ் நமக்கு தந்தருள வேண்டும். வெப்பம் கடுமையாக இருந்தாலும் இன்ஷாஅல்லாஹ் நாம் எல்லோரும் முழுமையாக ரமலான் நோர்ப்போம் ! இந்த வெப்பத்தைவிட நாளை [மறுமைநாளில்] இதைவிட பல மடங்கு வெப்பம் இருக்கும் என்று எண்ணிக் கொண்டு , பொறுமை காத்து எல்லாம் அல்லாஹ்வுக்காக ! என்று தூய எண்ணத்துடன் ரமலானை அடைவோம்.
*************************************************************************************
ரமலான் மாதத்தில் அந்த ஒரு மாதம் முழுதும் யாரும் இந்த முகநூல் பக்கம் வரமாட்டோம் என்று உறுதி கொள்வோம்! எந்த ஒரு நல்ல விஷயமாக இருந்தாலும் ரமளானுக்கு முன்னே கூறிவிடுவோம்.  அழைப்பு பணி செய்தாலும், மார்க்க விஷயம் கூறினாலும், எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும். அந்த ஒரு மாதம் அல்லாஹ்வுக்காக தியாகம் செய்வோம்! அந்த மாதத்தில் ஒவ்வொருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு , நல்ல அமல்கள் செய்வதிலும், மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் , தர்மங்கள் செய்வதிலும், திலாவத் குரான் ஓதுவதிலும் ஈடுபடுவோம் ! இன்ஷாஅல்லாஹ்  அந்த ரமலான் மாதம் முடிந்த பிறகு நாம் எல்லோரும் அல்லாஹ்வின் இறையச்சமுள்ளவர்களாக மாறியிருக்க வேண்டும் ! அல்லாஹ் கூறியதுபோல் .. ஈமான் கொண்டவர்களே! இந்த நோன்பு கடமையாக்கப்பட்டது நீங்கள் இறையச்சம் உள்ளவர்களாக ஆகலாம் ..
****************************************************************
அல்லாஹ்வின் நல்லடியார்களே! போன ரமலானில் நம்முடன் இருந்தவர்கள் . இப்பொழுது இல்லை . நாம் அடுத்த ரமாலனில் இருப்போமா என்பது நமக்கு தெரியாது . ஆகையால் , நம்மால் முடிந்தளவு நல்ல அமல்கள் செய்து , அல்லாஹ்விடத்தில் நெருக்கமானவர்களாக ஆகவேண்டும்!
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!