அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

புதன், ஏப்ரல் 27, 2016

சுவனவாசிகளின் இன்பகரமான வாழ்க்கை

சுவனவாசிகளின் இன்பகரமான வாழ்க்கை ...
அல்லாஹ்வின் திருபெயரால்................................
[அந்நாளில்] கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின் பால் அழைத்து வரப்படுவார்கள்.அங்கு அவர்கள் வரும் சமயத்தில், அதன் வாயில்கள் திறக்கப்பட்டு, அதன் காவலாளிகள் அவர்களை நோக்கி, ''உங்களுக்கு சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக  ! என்றென்றுமே [இதில்] தங்கிவிடுங்கள்'' என்று கூறுவார்கள்.


''நீங்கள் உங்களுடைய மனைவிமார்களும் மகிழ்ச்சியுடன் சுவனபதியில் நுழைந்து விடுங்கள் '' என்று கூறப்படும். பலவகை ஆகாரங்களும், பானங்களும் நிறைந்த பொற்தட்டுகளும் கிண்ணங்களும் அவர்களைச் சுற்றி இருந்து கொண்டேயிருக்கும். அங்கு அவர்கள் மனம் விரும்பியவையும் அவர்களுடைய கண்களுக்கு இரம்மியமானவையும் அவர்களுக்கு கிடைக்கும்.

ஹூருல் ஈன்களையும்  நாம்  அவர்களுக்குத் திருமணம் செய்து வைப்போம். முந்திய மரணத்தைத் தவிர , அதில் அவர்கள் வேறு யாதொரு மரணத்தையும் அனுபவிக்க மாட்டார்கள்.

சுவனபதியில்] அடுக்கடுக்காக உள்ள மேல்மாடிகள் [கொண்ட] மாளிகைகள் உண்டு. அவற்றில் நீரருவிகள் சதா ஓடிக்கொண்டே இருக்கும்.

மாறாத இளமையுடைய இளைஞர்கள் [வேலை செய்வதற்காக எந்த நேரமும்] இவர்களை சுற்றிக் கொண்டே இருப்பார்கள்,, இன்பமான பானம் நிறைந்த குவளைகளையும், கெண்டிகலையும் , கிண்ணங்களையும் தூக்கிக் கொண்டு [அவர்களை சுற்றிக் கொண்டே இருப்பார்கள்]

அங்கு இஅவர்கள் தீயவார்த்தைகளையும், வீணா பேச்சுக்களையும் கேட்கமாட்டார்கள். ஆயினும் ஸலாம்  ஸலாம்  என்ற சப்தத்தை இன்றி.

உயர்ந்த மேலான விரிப்புகளில் [அமர்ந்திருப்பார்கள்] அங்குள்ள சிம்மாசனங்களின் மீது சாய்ந்து கொண்டிருப்பார்கள். அதில் சூரிய வெப்பத்தையும், பனியின் கொடிய குளிர்ச்சியையும் காணமாட்டார்கள்.
அதிலுள்ள [விருட்சங்களில்] நிழல்கள் அவர்கள் மேல் கவிந்து கொண்டிருக்கும். அதன் கனிகள் தாழ்ந்து வரும்.

அந்நாளில் நிச்சயமாக சுவனவாசிகள், மகிழ்ச்சியில் நிலைத்திருப்பார்கள். அவர்களும், வர்களுடைய மனைவிமார்களும் நிழலின் கீழ் கட்டில்களின் மேல் சாய்ந்து கொண்டிருப்பார்கள். அதில் அவர்களுக்கு [வகை வகையான] பழவர்க்கங்களுடன்  அவர்கள் கேட்பதெல்லாம் கிடைக்கும்.

அவர்களின் முகங்களைக் கொண்டே அவர்களின் சுகவாசத்தின் செழிப்பை [நபியே] நீர் அறிந்து கொள்வீர்.

''திருப்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவன்பால் செல்! அவனைக் கொண்டு நீ  திருப்தியடை ! உன்னை பற்றி அவன் திருப்தியடைந்திருக்கிறான். நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, சுவனபதியில் நீ நுழைந்து விடு! '' [என்று] கூறுவான்.
அல்குர் ஆன் ......... திருமறை கூறும் சுவனத்தை பற்றி..]

அல்லாஹ்வின் நல்லடியார்களே! சிந்தித்துப் பாருங்கள்! அல்லாஹ்  சுவனத்தில்  நல்லடியார்களுக்காக ஏற்படுத்திய சுகபோகங்கள், இன்பங்கள். இவைகளைவிட இரு பெரிய அருட்கொடைகள் இருக்கிறது.  அல்லாஹ்வின் திருப்பொருத்தமும், அல்லாஹ்வை எந்த திரையும் இல்லாமல் தரிசிப்பது! இதுதான் இன்பத்தில்லேயே பேரின்பம்!  நம்மைப் படைத்த சுவனத்தை படைத்த அல்லாஹ்  வை காண்பது என்பது எவ்வளவு பெரிய பேரின்பம்!
சுவனத்தை பற்றி ரொம்ப சுருக்கமாக கூறியிருக்கிறேன். விரிவாக அதைப் பற்றி யாராலும் சொல்லிவிட முடியாது. இதை படித்தவுடன் நமக்கு ஆர்வமும், ஆசையும் உள்ளத்தில் வரும்.  இன்ஷாஅல்லாஹ்  ரமலான் வருகிறது அந்த மாதத்தை நாம் கண்ணியப்படுத்த வேண்டும். அப்பொழுது நிறைய நல்ல அமல்கள் இஹ்லாசுடன் செய்ய வேண்டும். அந்த சுவனத்தை அடைய எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்  கிருபைச் செய்வானாக  !
சொற்ப கால வாழ்க்கை .. இந்த வாழ்க்கைக்காக நீங்கள் அதிக நேரம் செலவு செய்யாதீர்கள்! நிரந்தரமான வாழ்க்கைக்காக அதிகம் அதிகம் நற்கருமங்கள் செய்து அவைகளை பாதுகாத்து  வையுங்கள்!
அல்லாஹ்  மிக்க அறிந்தவன்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!