சனி, ஏப்ரல் 09, 2016

மார்க்க அறிவை இழிவாக நினைக்கலாமா?

மார்க்க அறிவை இழிவாக நினைக்கலாமா?[படிப்பினைத் தரும் ஒரு சம்பவம்]
அல்லாஹ்வின் திருபெயரால் ...........................
தீன் சம்பந்தமான கல்வி கற்பதை இக்காலத்தில் முஸ்லிம்களில் அனேகர்  இழிவாகக் கருதுகின்றனர். சில ஊர்களில் சில பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளைத் தீனுடைய கல்வியைக் கற்க வேண்டாமென்றும் கண்டித்துத் தடுத்து நிறுத்தி விடுகின்றனர். தானாகவே தீனுடைய கல்வியைக் கற்க ஆசைப்படும் பிள்ளைகளைத் தடுத்து நிறுத்துவதனால் ஏற்படும் கேடுகளைப் படித்துப்பாருங்கள்!

ஓர் ஊரில் ஒரு சிறுவன் பள்ளியில் கல்வி பயின்று கொண்டிருந்தான்., அச்சிறுவனுக்கு எப்படியோ தீனுடைய கல்வியைக் கற்றுக் கொள்ள வேண்டுமென்று ஆசையுண்டாகிவிட்டது.


எனவே, தன்னுடைய தந்தையிடம் போய்  அனுமதி கோரினான், தந்தை கூறினார்.. முடியாது! ஒருக்காலும் முடியாது, மார்க்கக் கல்வி படிப்பதற்கு நான் அனுமதி தரமாட்டேன். நீ ஆங்கிலம் படித்து டாக்டராகி நிறைய சம்பாதிக்க வேண்டும். நீ டாக்டரானால் தானே எனக்கு மதிப்புக் கிடைக்கும்  என்று கூறி அவனது தந்தை அவனைத் தடுத்து விட்டார். ஆனால் அப்பையனுக்குத் தீனுடைய கல்வியைப் படிக்க வேண்டுமென்ற ஆசை அதிகரித்துக் கொண்டிருந்தது. என்ன செய்வது? தந்தையின் உத்தரவு வேண்டுமே!

நாட்கள் நகர்ந்தன, பையனும் கல்லூரிப் படிப்பை ஆரம்பித்துப் படித்துக் கொண்டிருந்தான். இன்னும் சில ஆண்டுகளில் என்னுடைய மகன் டாக்டராகி விடுவான் என்ற தந்தையின் ஆசைக்கும் அளவே இல்லை. ஒரு நாள் அப்பையனுக்கு திடீரென்று மண்டையில் வலி ஆரம்பித்து. எவ்வளவோ சிகிச்சை செய்தும் வியாதி சுகமடையவில்லை. நாட்கள் செல்லச் செல்ல வியாதியும் கடுமையாகி மரணிக்கும் நேரமும் நெருங்கிவிட்டது. அப்பையனின் தந்தை படுக்கையில் கிடக்கும் மகனைப் பார்த்து அழுதார்....

அவருடைய கண்ணீர் மகனுடைய நெற்றியின் மீது படவே பையன் தந்தையைக் கூர்ந்து கவனித்தான். அப்பொழுது அவர்... ''எனது அருமை மகனே!  நீ தீனுடைய கல்வியை படித்துக் கொள்ள வேண்டுமென்று எவ்வளவோ என்னிடம் கேட்டுக் கொண்டாய். ஆனால் நானோ அதைத் தடுத்து நிறுத்தி விட்டேன். தீனுடைய கல்வியைப் படிக்க வேண்டுமென்ற ஆசை எல்லோருக்கும் வருவதில்லை, அந்த ஆசையை அல்லாஹ்தான் உன்னுடைய உள்ளத்தில் ஏற்படுத்தினான். ஆனால் நானோ அதைத் தடுத்து நிறுத்தி விட்டேன்,, மேலும், நீ  தீனுடைய கல்வியைக் கற்று ஓர் ஆலிமாக ஆகியிருந்தால் நம் குடும்பத்தினர்களையும் தீனுள்ளவர்களாக மாற்றியிருப்பாய். மறுமையில் உன்னுடைய அந்தஸ்தும்  உயரும்.

''அதே சமயம் பெற்றோர்களாகிய எங்களுக்கும் நன்மை கிடைக்கும். ஆனால் இப்போது என்னைப் போன்ற பாவி யாருமே இருக்கமுடியாது'' என்று கூறி கோவென்று கதறினார். பையனுடைய கண்களிலிருந்து கண்ணீர் ஓடியது. சற்று நேரத்தில் அப்பையனுடைய ஆத்மா அவனுடைய உடலைவிட்டும் பிறந்து சென்றது. ஆங்கிலம் படித்து டாக்டர் பட்டம் பெறுவதை இஸ்லாம் தடைசெய்ய வில்லை . ஆனால் மார்க்கக் கல்வியைப் படிக்கவேண்டுமென்ற ஆர்வம் யாதுக்கு ஏற்பட்டிருக்கிறதோ அவர்களைத் தடை செய்யக்கூடாது.

1.கல்வி என்பது ஒருவனின் காணாமற்போன பொருள். அதனை அவன் எங்கு கண்டாலும் எடுத்துக் கொள்வான்.
நபிமொழி கருத்து]
2.தீனுடைய கல்வியைக் கற்க நாடித் தன்  வீட்டை விட்டுப் புறப்பட்டுப் போனவர், கல்வி கற்றுவரும் காலத்தில் இறந்துபோவாரானால் அவருக்கும் நபிமார்களுக்கும் இடையில் தகுதியில் ஒரே படித்தரம் தான் வித்தியாசம்.[நபிமொழி கருத்து]

அருமை பெற்றோர்களே! கொஞ்சம் சிந்திக்க வேண்டும்!

அல்லாஹ்  நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்..
யா அல்லாஹ்  நீ தான் அறிந்தவன்! நாங்கள் அறியாதவர்கள்! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!