செவ்வாய், ஏப்ரல் 26, 2016

நோயும் ,மருந்தும் !

நோயும் ,மருந்தும் !
அல்லாஹ்வின் திருபெயரால் .......
விதி என்றால் என்ன ..? விதியின் படிதான் எல்லாம் நடக்கிறது. விதியை மாற்றும் ஒரு சக்தி இருக்கிறது என்றால் அது ''துஆ '' . விதியைப் பற்றி அதிகமாக கேள்வி கேட்கக்  கூடாது என்பதின்  நபிமொழியின் கருத்து! நேர்ச்சை செய்வது விதியில் இல்லாததை கொண்டுவராது என்பதின் நபிமொழி கருத்து! அதாவது ஒருவர் நேர்ச்சை செய்து அது நடந்துவிட்டால் அது விதியில் இருந்தது என்று பொருள் கொள்ளவும். அப்படி நடக்காவிட்டால் விதியில் இல்லை என்று நினைத்துக் கொள்ளவும்.


அறிவிப்பாளர் அபூ கிஸாமா [ரலி] அவர்கள் தம்  தந்தையிடமிருந்து.
எனது தந்தை கூறினார்கள்.. நான் அண்ணல் நபி [ஸல்] அவர்களிடம்,  '' நாங்கள் எங்களுடைய நோயிகள்  குணமாவதற்கு ஓதி ஊதி பிரார்த்தனை செய்வதும், எங்களுடைய நோய்களை நீக்கிக் கொள்வதற்காக நாங்கள் மருந்துகளைப் பயன்படுத்துவதும், துன்பங்கள், துயரங்களிலிருந்து தப்பித்திட நாங்கள் மேற்கொள்ளும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அல்லாஹ்வின் விதியைக் கொஞ்சமாவது தடுத்திடுமா?'' என்று வினவினேன். அதற்கு  ''இவையனைத்தும் கூட  அல்லாஹ்வின் விதியே ஆகும்'' என அண்ணலார் கூறினார்கள்.
ஆதாரம்..திர்மிதி]

விளக்கம்..****
அண்ணல் நபி [ஸல்] அவர்களுடைய பதிலின் சாரமாவது.. எந்த இறைவன் இந்த நோயை நம் விதியில் எழுதினானோ, அதே இறைவன்தான் இந்த நோயை இன்ன மருந்தினால் அல்லது இன்ன வழிமுறையினால் போக்கிட முடியும் என்று தீர்மானித்துள்ளான் . நோயைக் கொடுத்தவனும் இறைவனே! அதனை நீக்கும் மருந்தை படைத்தவனும் அவனே! அனைத்துமே அவனால் தீர்மானிக்கப்பட்ட நியதிகள், சட்டங்களின்படியே நடைபெறுகின்றன.

ஒரு முஸ்லிம் இப்படி நினைக்கக் கூடாது.. இந்த மருந்தைக் கொண்டுதான் எனக்கு குணம் ஆச்சு! இந்த டாக்டரிடம் சென்றுதான் எனக்கு நல்லாபோச்சு! என்று நினைக்கக் கூடாது. எதையும் கொண்டும் , எந்த மருத்துவரையும் கொண்டு எதுவும் ஆகாது. எல்லாம் இறைவனின் ஆற்றலைக் கொண்டுதான் ஆகும் , நடக்கும் என்று ஒவ்வொரு முஸ்லிமும் மனதில் ஆழமாக பதிய வைக்க வேண்டும்  . இவரிடம் போனால் எனக்கு ராசியான டாக்டர் ! இவரிடம் போனால் எந்த பலனும் இல்லை என்று எந்த ஒரு முஸ்லிம் ஒரு துளிக் கூட எண்ணக் கூடாது  .
அல்லாஹ் மிக்க அறிந்தவன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!