வெள்ளி, ஏப்ரல் 15, 2016

ஆத்மீக அமைதிக்குள்ள பத்தியங்கள்

ஆத்மீக அமைதிக்குள்ள பத்தியங்கள்
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கின்றேன்....
1.மற்றவர்களுடன் பேசும்போது சப்தமிட்டுப் பேச கூடாது,
2.சப்தமிட்டு சிரிக்கக் கூடாது [வெடிச் சிரிப்பு]
3.எந்த விஷயமானாலும் விவாதம் செய்யக் கூடாது ,
4.மற்றவர்களுடன் பேசும்போது தனக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணத்துடன் பேசக் கூடாது,
5.மற்றவர்கள் யார் பேசினாலும் அவர்கள் வாய் மூடுவதற்கு முன் பதில் பேசக்கூடாது,

6.மற்றவர்கள் ஏதாவது யோசனை கேட்டால் உடன் பதில் கூறாமல் நன்றாக சிந்தித்துக் கூற வேண்டும். ஆனால் அதில் தன்னுடைய சுய நலத்தை மட்டும் நோக்கமாக கொள்ளக் கூடாது,
7.மற்றவர்களுடன் பேசும்போது அவர்களுக்கு மதிப்பு கொடுப்பதுடன் அவர்கள் பேசக்கூடிய ஒவ்வொரு வார்த்தைக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும்,
8.நாம் பேசக்கூடிய பேச்சைத்தான் எல்லோரும் கேட்டு நடக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கக் கூடாது,
9மற்றவர்கள் நம்மை ஏதாவது குற்றம் சுமத்தினால் உடனே மறுப்புக் கொடுக்காமல் தனிமையில் அமர்ந்து அக்குற்றம் தம்மிடம் இருக்கிறதா? என்று சிந்தித்து அப்படி அக்குற்றம் இருந்தால் அதைப் போக்குவதற்காக முயற்சிக்க வேண்டும். குற்றம் இல்லாவிட்டால் குற்றம் சுமத்தியவரின் உள்ளத்தில் நல்லெண்ணம் உண்டாவதற்காக வேண்டி துஆச் செய்யவேண்டும்,
10.தான் சொல்லக்கூடிய விஷயத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்ளவேண்டுமென்று பிடிவாதம் செய்யக் கூடாது,


11.மற்றவர்களின் குறைகளைத் தேடி அலையக் கூடாது. எதிர்பாராமல் மற்றவர்களின் குறைகள் ஏதும் நமக்கு தென்பட்டால் அவரைத் தனிமையில் அழைத்து சாந்தமான முறையில் விஷயத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்,
12.ஆசைக்காக எதையும் செய்யவோ, பேசவோ கூடாது. அத்தியாவசியமான விஷயங்களை மட்டும் செய்ய வேண்டும்,
13.தீனில்லாத அதாவது இஸ்லாமிய வாழ்க்கை முறை இல்லாத செல்வந்தர்களிடம் அதிகமாக தொடர்பு கொள்ளக் கூடாது,
14.மற்றவர்கள் நம்மை மதிக்க வேண்டும். மேலும் ஏதும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அறவே வரக் கூடாது,
15.நமக்கு முன்னாள் நம்மைப் பாராட்டினால் அதற்காக வேண்டி மகிழ்ச்சியடையக் கூடாது. மேலும் நம்மை பாராட்டுவதை நாம் விரும்பவும் கூடாது,
16.எந்த ஒரு நற்செயலையும் மனிதருக்காக செய்ய கூடாது. மேலும் எந்த ஒரு கெட்ட  செயலையும் மனிதருக்காக விடக் கூடாது. அதாவது நல்ல காரியத்தைச் செய்வதும் அல்லாஹ்வுக்காக, கெட்ட  காரியத்தை விடுவதும் அல்லாஹ்வுக்காக என்ற எண்ணம் இருக்க வேண்டும்,
17மனதில் தோன்றிய விஷயங்களை எல்லாம் பேசக் கூடாது,
1

18.ஆகுமான பேச்சாக இருந்தாலும் அளந்து குறைத்துக் கொள்ள வேண்டும்,
19.இயன்றவரை அனுமதிக்கப்பட்ட பேச்சுக்களையும் குறைத்துக் கொள்ள வேண்டும்,
20.மற்றவர்களுடன் உரையாடும் போது  இன்னும் அதிகமாக பேச வேண்டுமென்று உணர்வு ஏற்பட்டவுடன் உரையாடலை நிறுத்திவிட வேண்டும்,
21.தன்னுடைய திறமைகளை தானாகவே மற்றவர்களிடம் சொல்லிக் காட்டக் கூடாது,
22.இன்னென்ன வேலைகளுக்கு நான்தான் தகுதியுள்ளவன் என்ற எண்ணம் அறவே கூடாது,
23எடுத்ததற்கெல்லாம் கோபப்படக் கூடாது,
தயவு செய்து என் மீது  கோபப்படாதீர்கள் உங்களுக்கு புத்திமதி சொல்கின்றேன் என்று  . எனக்கு தகுதி இல்லை யாருக்கும் புத்திமதி சொல்ல..
அல்லாஹ்  மிக்க அறிந்தவன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!