வெள்ளி, ஏப்ரல் 08, 2016

ஆதமுடைய மகனே!

ஆதமுடைய மகனே!
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்...

ஆதமுடைய மகனே! அல்லாஹூ தஆலாவின்  மீதுள்ள நம்பிக்கையிலிருந்து தளர்ந்துவிடாதே ! ஏனென்றால் ஷைத்தானாவன் உனக்கு வறுமையைக் காட்டி அல்லாஹூ தஆலாவின்  இபாதத் செய்வதிலிருந்து உன்னை தடுத்திட முயற்சி செய்வான், எனவே, நீர் அவனுடைய வலையில் சிக்கிக் கொள்ளாதே !

ஆதமுடைய மகனே! உன்னையே நீ சிந்தித்துப் பார்! நீ இல்லாதவனாக இருக்க, ஒரு துளி இந்திரியத்திலிருந்து அல்லாஹூ தஆலா  உன்னை இரு அழகான மனிதனாக [மேலான படைப்பாக] படைத்தான். நீ உன் தாய் வயிற்றிலிருக்கும் போதே உன்னுடைய உடலில் ரூஹை அவனே புகச் செய்தான். அந்த ரூஹ் புகுந்ததை உன் தாய் கூட அறியமாட்டாள் . நீ உன் தாய் வயிற்றிலிருக்கும்போது உன்னைப் பாதுகாத்தது யார்? அவன்தானே [அல்லாஹ் ] பாதுகாத்தான்.


ஆதமுடைய மகனே! நீ உன் தாயின் வயிற்றிலிருந்து வெளிவருவதற்கு முன்பே உன்னுடைய தாயின் மார்புகளிலேயே உனக்கு தேவையான உணவை அவன் உனக்கு உண்டாக்கி வைக்கவில்லையா? குளிரான காலங்களில் சூடான பாலையும் சூடான காலங்களில் குளிரான பாலையும் உனக்காக அவன்தானே உண்டாக்கினான். நீ அதையெல்லாம் மறந்துவிட்டாயா?

ஆதாமுடைய மகனே! உன்னுடைய பெற்றோர்கள் உன்மீது நீ சிறுவனாக இருக்கும்போது அன்பு செலுத்தினார்களே, அந்த அன்பைத் தூண்டியது யார்? அவர்களின் உள்ளங்களிலே உன்மீது அன்பை அல்லாஹ்  தானே வைத்தான். நீ குழந்தையாக இருக்கும்போது குவா குவா என்று இரவு நேரங்களில் கத்தும்போது உன்னுடைய தாய் பதறித் துடித்துக் கொண்டு உன்னைத் தூக்குவதற்கு ஓடிவருவாளே , நீ தூங்கும் வரை அவள் விழித்துக் கொண்டிருப்பாலே, உனக்காக வேண்டி உன்னுடைய தாய் எத்தனையோ இரவுகள் விழித்திருந்தாள் . நீ எதுவும் சாப்பிடாதவரை அவள் எதுவும் சாப்பிடமாட்டாள் . இவைகளெல்லாம் இப்போது உனக்கு எங்கே நினைவு இருக்கபோகிறது? நீ உன் தாய்க்குக் கொடுத்த அத்தனை சிரமங்களையும் சந்தோஷமாகத் தாங்கிக் கொண்டிருந்தாளே . அம்மாதறி சிரமங்களையும் தாங்கக் கூடிய சக்தியை அளித்து அல்லாஹ்தானே! அதையெல்லாம் மறந்துவிட்டாயா?

ஆதமுடைய மகனே! அல்லாஹ்வின் சக்தியை ஒவ்வொன்றாக நோட்டமிட்டுப் பார்! உனக்குச் செய்த அருட்கொடைகளை எல்லாம் எண்ணிப் பார்!
ஆதமுடைய மகனே! மனிதர்களையும், ஜின்களையும் தன்னை வணங்குவதற்காகவே படைத்ததாக அல்லாஹ்  கூறுகிறானே, நீ எந்த அளவு அவனை வணங்குகிறாய்? நீ எவ்வள்ளவு நன்றிகெட்டவனாக ஆகிவிட்டாய்? சிந்தித்துப் பார்! சீர்திருந்து!!!

ஆதமுடைய மகனே! மற்ற எல்லாப் படைப்புகளையும் உனக்காகவே படைத்தகாக அல்லாஹ்  கூறுகிறானே, நீ அவற்றையெல்லாம் நோட்டமிட்டுப் பார்த்தாயா? கழுதையைப் பார்! அது உன்னுடைய மூட்டையைச் சுமந்து செல்கிறது. என்றாவது ஒரு நாள் கழுதை மூட்டையைச் சுமக்க முடியாது என்று உன்னிடம் சொன்னதுண்டா? குதிரைகளை பார்! அவைகளை நீ எங்கெல்லாம் ஓட்டிச் செல்கின்றாயோ அங்கெல்லாம் ஓயாது ஓடிகொண்டிருக்கின்றது! ஒவ்வொன்றும்  தன்னுடைய கடமைகளை சரிவரச் செய்கிறது. ஆனால் மனிதனாக நீர் மட்டும்  கடமையைச் சரிவர செய்வதற்கு நீ மட்டும் ஏன்  தயங்குகிறாய்? உனக்காக படைத்தவைகள் தவறாமல் கடமையை நிறைவேற்ற தவறுவதில்லை! நீ எவ்வளவு நன்றி கெட்டவனாக ஆகிவிட்டாய்!..
சிந்தித்துப் பார்! மற்றவர்களை நன்றி கெட்டவர்கள்  என்று சொல்வதற்கு முன் நீர் நன்றி உள்ளவனா என்று  சிந்தித்துப் பார்!!!
அல்லாஹ்  மிக்க அறிந்தவன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!