வெள்ளி, ஏப்ரல் 01, 2016

விருந்தாளிகளை உபசரிக்கட்டும்!!

விருந்தாளிகளை உபசரிக்கட்டும்!!
அல்லாஹ்வின் திருபெயரால்...........

அண்ணல் நபியவர்கள் நவின்றார்கள்..
''அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கை வைத்திருப்போர் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்! முதல் நாள் அன்பளிப்புக்குரிய தினமாகும். அதில் மிக உயர்ந்த உணவை [விருந்தாளிக்கு] ஊட்டிட வேண்டும். விருந்துபசாரம் மூன்று நாட்கள் வரை உண்டு. [அதாவது, இரண்டாவது -மூன்றாவது நாட்களில்  உபசரிப்பதற்கு அதிக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை] அதற்குப்பின் அவர் செய்யும் உபசாரம் அனைத்தும் அவருக்குத் தர்மமாகும். விருந்தாளி தனக்கு விருந்தளிப்பவரை நெருக்கடியிலும் கவலையிலும் ஆழ்த்தும் அளவிற்கு அவரிடம் தங்கியிருப்பதும் கூடாது.
அறிவிப்பாளர்.. குவைலித் பின் அம்ரு [ரலி]
நூல்.. புகாரி, முஸ்லிம்]


ஒரு காலத்தில் நம் சொந்தங்கள் நம் வீட்டுக்கு விருந்தாளியாக வரும்போது . அவர்களை வரவேற்க வாசலில் இன்முகத்துடன் காத்திருப்போம்! அவர்களின் வருகை நமக்கு அவ்வளவு சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.
அவர்கள் தங்கியிருக்கும் காலம்வரை , வீடு அவ்வளவு மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியிருக்கும்! அப்பொழுது அவர்களுக்கும், நமக்கும் அன்பு, பாசமும் ம் நேசமும் பிணைக்கப்பட்டிருக்கும். மனதில் எந்த ஒரு  சூதும் வாதும் இருக்காது. தூய உள்ளத்துடன் பழகி வருவோம்! அவர்கள் அப்பொழுது மாட்டுவண்டியில் தான் வருவார்கள். அப்போ அது ஒரு விதமான சுகம் ! கலகல்லப்பு ! அவர்கள் நம் வீட்டை விட்டு புறப்படும்போது . அப்பொழுது நம் கண்களியிருந்தும், அவர்களின் கண்களியிருந்தும் கண்ணீர் சிந்தும்....  ஒரு விதமான சோகம் மனதில் இருக்கும்.  இதை இப்பொழுது நினைத்தாலும் எவ்வளவு மனசுக்கு சுகமாகவும், பழைய நினைவுகள் ஒரு இன்பமாகவும் இருக்கிறது!

இன்று பழைய உறவுமுறைகள் காணாமல் போய்விட்டது!  இப்பொழுது உறவுகள் என்றைகாவது வந்துபோவது நிலை வந்துவிட்டது. விசேஷங்கள் இருந்தால் வருவார்கள் , சிலர் வராமல் இருப்பார்கள். இன்று உறவுகளைப் பற்றி பிள்ளைகளுக்கு எதுவும் தெரியாது. இவர்கள் யார்..? அவர்கள் யார்..? அவர்கள் எப்படி எந்த முறையில் அழைப்பது என்ற விபரங்கள்  அறியாமல் இருக்கும் பிள்ளைகள் . பிள்ளைகளுக்கு சொல்லாமல் இருக்கும் பெற்றோர்கள்! இதான்  இன்றைய நிலை! இன்னும் சில காலம் போனால் எப்படி இருக்கும் என்பதை அல்லாஹ்  ஒருவன் மட்டும் தான் அறிவான்!

வீட்டுக்கு  யாராவது  வந்தால் ...  அவர்களுக்கு ஸலாம்  கூறவேண்டும் என்று எந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள்..? [சிலரை தவிர]  விருந்தாளிகள் வந்திருந்தாள் '' சில பிள்ளைகள் கண்டும் காணாமல் போகும் காட்சியைப் பார்க்கின்றோம்!  ஸலாம்  கூறவேண்டும் என்ற தர்பியத்தை யார் சொல்லிக் கொடுக்க எவ்ண்டும் என்பதை பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.

அல்லாஹ்வையும், மறுமைநாளையும் நம்பக்கூடிய முஸ்லிம்கள் தான் விருந்தாளிகளை  கண்ணியப்படுத்துவார்கள் ... பெயர் அளவில் இருக்கும் முஸ்லிம்கள் அவர்கள் எப்பொழுதும் போல்  மற்ற மதத்தினர் போல்  இருப்பார்கள்.  ''மறுமை நாள் '' அதை அப்பொழுது பார்த்துக் கொள்வோம்! இப்பொழுது இந்த உலக சுகபோகங்கள்  இருக்கு அனுபவிப்போம்.......
அல்லாஹ்  நம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்.
அல்லாஹ்  மிக்க அறிந்தவன்... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!