அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வெள்ளி, மே 20, 2016

நான் ஒரு முஸ்லிம் ..! ஆனால் எனக்கு இன்னும் தொழுகை கடமை ஆகவில்லை ..
நான் ஒரு முஸ்லிம் ..! ஆனால் எனக்கு இன்னும் தொழுகை கடமை ஆகவில்லை ..

அல்லாஹ்  கூறுகின்றான்..
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின்  வேதத்தை ஓதுகிறார்களோ- தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுகிறார்களோ- நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகசியமாகவும் வெளிப்படையாகவும் [அல்லாஹ்வின் பாதையில்] செலவு செய்கிறார்களோ, [ஆகிய இவர்கள்] என்றும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள்.
அல்குர் ஆன் .. 35.29]

ஒரு காணொளி . ஒருவர் தொழுதுக் கொண்டிருக்கையில் , சுஜூதில் அவருக்கு மரணம் வருகிறது.  அவர் சுஜூதிலேயே  இருந்து மரணித்து விடுகிறார். இது ஒரு பெரிய பாக்கியம்! நிச்சயமாக அவர் ஒரு தொழுகையாளியாக இருந்ததினால்தான்  அவருக்கு இந்த ஒரு பாக்கியம் கிடைத்து! அவர் தொழாமல் இருந்திருந்தால் அவருக்கு இந்த மரணம் இப்படி கிட்டிருக்குமா..? சிந்திக்க வேண்டும்!
இரண்டாவது காணொளி .. ஒரு வயது முதிர்ந்த 121 வயது உள்ள ஒரு முஸ்லிம் . அவர் இந்த வயதிலும் தொழுகையை விடாமல் தொழுது வருகிறார். இவரின் மூலமாக நமக்கு ஒரு நல்ல படிப்பினை இருக்கிறது. நம்மில் எத்தனை பேர்கள் உடல் வலிமையும்  , திடமான உடலும், நல்ல ஆரோக்கியமும், எந்த ஊனமும் இல்லாமல்  நாம் தொழாமல் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த காணொளியை பார்த்தும் நமக்கு எந்த உணர்வும் , இறைவனின் அச்சமும் வரவில்லை என்றால்  . நிச்சயமாக நம் ஈமானில் எதோ ஒரு பெரிய குறைப்பாடு இருக்கிறது. இந்த நிலையில் நம்மில் யாராவது ஒருவருக்கு மரணம் வந்தால் எப்படி இருக்கும்..? சிந்திக்க வேண்டாமா! என்ன நிலையில் நாம் மரணிப்போம்?

போனது போகட்டும் இனி நாம்  ஐவேளை தொழுகையாளிகளாக ஆகவேண்டும்! விட்டு போன தொழுகைக்கு அல்லாஹ்விடம் தௌபா செய்யவேண்டும்! தொழுகை விடயத்தில் அல்லாஹ்விடம் எந்த ஒரு சாக்கு போக்கும் சொல்லமுடியாது! வாலிபர்களே! சிந்திக்க வேண்டாமா..!
அல்லாஹ்  மிக்க அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!