அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

புதன், மே 18, 2016

வாலிபப் பருவமே பக்குவத்தின் வழிகாட்டி !

வாலிபப் பருவமே பக்குவத்தின் வழிகாட்டி !
அல்லாஹ்வின் திருபெயரால் !!!!
மறுமையில் விசாரணையில் ''உன்னுடைய பருவத்தை எப்படி கழித்தாய் ?
உன் செல்வத்தை எப்படி சம்பாதித்தாய்? அதை எந்த வழியில் செலவழித்தாய்?
கல்வியை கற்று அதன்படி அமல் செய்தாயா? இதுப்போன்ற கேள்விகள் அல்லாஹ்  மறுமையில் கேட்பான்...

கல்லூரி விடுமுறை காலம். இந்த காலத்தை எப்படிவேண்டுமானாலும் கழிக்கலாம் .. இன்று நிறைய பொழுதுபோக்கு சாதனங்கள் இருக்கிறது. நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம். நீங்கள் அதற்குமுன் கொஞ்சம் சிந்தித்து பார்க்கவேண்டும். மறுமையில் நடக்கும் விசாரணைப் பற்றி.


எதையும் சிந்தித்துப் பார்க்கும் தன்மை, பகுத்துணரும் திறமை வாலிப வயதில் தான் உண்டாகின்றன. தாய், தந்தையின் குறுக்கீடு இல்லாமல், கற்ற அறிவின் துணையில்லாமல் இறைமறை காட்டிடும் வழியில் நடக்கவேண்டிய அவசியம் அந்த வயதில்தான் ஏற்படுகிறது. வாலிபப் பருவம் மனிதனுக்கு மிக முக்கியமான சந்தர்ப்பமாகும். நன்மை, தீமை உண்மை நிலையை உணர்ந்து, ஏவல்  விலக்கல்கலைப்  பேணி நடக்கவேண்டிய பருவம், வானவர்களின் குணாதிசயம், பூத வர்க்கத்தின் குணாதிசயம் என்ற இரு குணாதிசயங்களையும்  கொடுத்து மனிதனை இறைவன் பூமிக்கு அனுப்பினான் அல்லவா? அந்தக் குணாதிசயம் வாலிப கட்டத்தில் தான் வெளிக் கிளம்புகிறது. இரண்டு குணாதிசயமும் ஒன்றையொன்று மிகைக்காமல் இரண்டும் நடுநிலைமையமாக  இருந்தால் மனிதனின் வாழ்க்கை சாதாரண மனிதனுக்கு ஒப்பாகி விடுகிறது.

வானவர்களின் குணாதிசயம் மிகைக்கும்போது , அடக்கம், பணிவு, அச்சம், மார்க்க அறிவு, தொழுகை பக்தியாகவும் ஏற்படும். கெட்ட  ஜின்னுடைய குணாதிசயம் மிகைக்கும்போது, தீய பழக்கம், கெட்ட  நடத்தை, பாவமான காரியம், அக்கிரமம், அகம்பாவம், ஆணவம், இறைவனை நிராகரித்தல் யாவும் ஏற்படும்.

தன்னை இழந்து, தன்  நிலையை மறந்து ஒரு பைத்தியகாரத்தனமும், வெகு சுலபமாக ஷைத்தான் வழியில் சிக்க வேண்டிய வாய்ப்பும், எதையும் பொருட்படுத்தாது முரட்டுத்தனமாக நடக்கத் தூண்டும் குணமும் வறட்டுத்  தைரியமும் வாலிப வயதில்தான் ஏற்படுகின்றன உடலில்  எதிரெதிரே ஓடும் இரத்தம். இறுமாப்பை உண்டாக்கி விடுகிறது. இறையச்சத்தைப் போக்கி, நல்ல அமல் செய்யும் வாய்ப்பை நழுவவிட்டு விடுகிறது.

இவ்வித நேரத்தில் ஷைத்தான் விரித்த வலையை அறுத்தெறிந்து விட்டு, அவனுடைய நயவஞ்சகப் பேச்சைக் காதில் வாங்காமல் ஓடிவந்து தீனுல் இஸ்லாம்  என்ற புனிதமான கோட்டையின்  ''ஈமான் என்ற வாசலில் நுழைந்தவர்கள். நிச்சயமாக ஜெயமடைந்து விடுவார்கள்.

உலக வாழ்வின் இன்பத்தை அனுபவிக்கும் ஆனந்தத்தில் வாலிபத்தை வீணாக்கி, வாழ்நாளை விரயமாக்கி விட்டு நரையும் மூய்பும்  கண்ட பிறகு தஸ்பீஹ்  மணிகளை உருட்டுவதால் என்ன லாபம்?  ''பருவத்தே பயிர் செய்! என்ற முதியோர் வாக்குப்படி வாலிபத்திலே  நல்ல அமல் செய்து வரவேண்டும். வயோதிகத்தில் செய்து கொள்ளலாம் என நினைப்பது, கானல் நீராகத்தான் முடியும்.
வாலிப ஆண்களே! வாலிப பெண்களே! விழித்துக்கொள்ளுங்கள்! விசாரணை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தூங்கியது போதும்!
அல்லாஹ்  மிக்க அறிந்தவன்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!