அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

திங்கள், மே 16, 2016

நேர்ச்சை என்பது ஒரு வணக்கம் !

நேர்ச்சை என்பது ஒரு வணக்கம் !

 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நேர்த்திக்கடன் செய்ய வேண்டாம் என்று எங்களுக்குத் தடை விதிக்கலானார்கள். மேலும் "நேர்த்திக்கடன் (விதியிலுள்ள) எதையும் மாற்றிவிடாது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக் கொணரப்படுகிறது (அவ்வளவுதான்)" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
நூல்.முஸ்லிம்]
சில மக்கள்கள் இருக்கிறார்கள் , அவர்கள் இன்னும் அறியாமையினால் செய்துக் கொண்டுதான் வருகிறார்கள் .  இறைநேசர்களின் பெயரால் , இன்ன இன்ன அவுலியாக்கள் பெயரினால் விளங்காத சில மக்கள்கள் நேர்ச்சைச் செய்து வருகிறார்கள். நேர்ச்சை என்பது ஒரு வணக்கம் , அந்த இபாதத்தை அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் நாம் செய்ய வேண்டும். மற்றவர்களின் பெயரால் செய்துவது கூடாது. சில சுன்னத்துவாதிகள் இதற்கு  விளக்கம் கொடுப்பார்கள் , அது விளக்கம் அல்ல மாறாக அது ஒரு குழப்பம் . மக்கள்கள் மார்க்கத்தை முறையாக அறிந்துக் கொண்டால் இந்த பிரச்சனைகள் வராது ! மார்க்க அறிவு இல்லாததனால் நம்மை சிலர் குழப்பிக் கொண்டுதான் இருப்பார்கள். 


 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இறைவன் விதியாக்காத எதையும் நேர்த்திக் கடன் அவனுக்குக் கொண்டுவந்து சேர்க்காது. மாறாக, விதியை ஒத்ததாகவே நேர்த்திக் கடன் அமையும். அதன் மூலம் கஞ்சனிடமிருந்து அவன் வெளிக்கொணர விரும்பாதது வெளிக்கொணரப்படுகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

உங்களுக்கு அல்லாஹ்  தடுத்ததை யார் தான் கொடுக்க முடியும் ?  அல்லாஹ் உங்களுக்கு கொடுக்க நாடிவிட்டால் அதை யார்தான் தடுக்கமுடியும்? உங்களுக்கு அல்லாஹ் விதித்ததை நிச்சயமாக வந்தே தீரும். உங்கள் விதியில் இல்லாததை , நீங்கள் என்னதான் குட்டிகாரம் அடித்தாலும் உங்களுக்கு கிடைக்காது!  அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு முதியவர் தம் இரு புதல்வர்களுக்கிடையே சாய்ந்தபடி நடந்துவருவதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், "இவருக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள். அதற்கு அப்புதல்வர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இவர் (கஅபாவிற்கு நடைப்பயணம் மேற்கொள்வதாக) நேர்த்திக் கடன் செய்துள்ளார்" என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், "பெரியவரே,வாகனத்தில் ஏறிச் செல்வீராக! (தம்மைத் தாமே வேதனை செய்துகொள்ளும்) நீரோ உமது நேர்த்திக் கடனோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாக வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

சில தாயிமார்கள் இருக்கிறார்கள் . அவர்கள் தங்கள் குழந்தைக்கு நல்லபடியாக பேச்சு வர நேர்ச்சை செய்வார்கள் .'' என் பிள்ளைக்கு நல்லபடியாக பேச்சு வர இன்ன மகானுக்கு நேர்ச்சை செய்கிறேன் என்று நேர்ச்சைச் செய்வார்கள். என் மகனுக்கு விசா கிடைக்க வேண்டும் என்று சிலர் வேறுவிதமாக நேர்ச்சை செய்வார்கள் . அல்லாஹ்விடம் தொழுது இருகரம் ஏந்தி அழுது முறையிடுவோம் என்று அவர்களுக்கு தோணாது. அவர்களுக்கு தவறாகத்தான் சொல்லிவைத்தியிருக்கிரார்கள் . அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியை கொடுக்கவேண்டும்!

பொறுமையைக் கொண்டும் தொழுகையை கொண்டும் அல்லாஹ்விடம் உதவித் தேடுங்கள் என்றுதான் அல்லாஹ் தனது திருமறையில் கூறியுள்ளான்  தவிர நீங்கள் அந்த தர்காக்கு போய் இன்ன இன்ன அவுலியாக்களிடம் கேளுங்கள் அல்லது அவர்களின் பெயரால் நேர்ச்சைச் செய்யுங்கள் என்று சொல்லப்படவில்லை .. 
அல்லாஹ் மிக்கஅறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!