அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

செவ்வாய், மே 10, 2016

தூங்கிக்கொண்டிருந்தவருக்கும் திருமணமா?[பாடமும்,படிப்பினையும் இருக்கிறது.]

தூங்கிக்கொண்டிருந்தவருக்கும் திருமணமா?[பாடமும்,படிப்பினையும் இருக்கிறது.]
அல்லாஹ்வின் திருபெயரால்..

ஒரு கிராமத்திலுள்ள உறவினர்களிடையே திருமணம் செய்வதற்காக ஒரு தேதியை குறிப்பிட்டு பெண் வீட்டினரும் மாப்பிளை வீட்டினரும் முடிவு செய்து  திருமண அழைப்பிதழும் அச்சிட்டு வெளியூர்களிலும் உள்ளூரிலும் விநியோகம் செய்தனர். குறிப்பிட்டப்படி திருமண நாளும் வந்துவிட்டது. மாப்பிளை வீட்டிலும் பெண் வீட்டிலும் பந்தல் போட்டு அப்பந்தளையும் ஜோடனை செய்து அன்று அக்கிராமவாசிகள் யாவரும் இன்று திருமணம் நடைபெறும் நாள் என்று பேசிக்கொண்டுமிருந்தனர் . பெண் வீட்டிலும் மாப்பிளை வீட்டிலும் ஒரே கொண்டாட்டம், உறவினர்கள் எல்லாம் இரு வீட்டிலும் ஒன்று கூடி சாப்பாடுகளும் பரிமாற்றபட்டன. அன்றிரவானதும் ஊர்மக்களேல்லாம் இரு வீட்டின் அழைப்பின்படி திருமண வீட்டுப் பந்தலுக்குச் சென்று பானங்கள் அருந்தி வெற்றிலை பாக்கும் போட்டுக் கொண்டு திருமணமாகும் சமயம் வந்து பங்கு பெருவதார்கச் சொல்லி விடைபெற்றுச் சென்றனர். அவ்வூர் சிறு பிள்ளைகள் எல்லாம் பந்தலில் ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தனர், அன்றிரவு பத்து மணிக்கெல்லாம் திருமணம் வைபவம் நடைபெற வேண்டும். ஆனால் இரவு ஒன்பது மணிகெல்லாம் மாப்பிளையின் தந்தைக்கு அளவில்லாத கோபம் வந்துவிட்டது. காரணம் பெண் வீட்டாரிடமிருந்து வரவேண்டிய பதார்த்தங்களில் எதோ ஒன்று குறைவாகக் காணப்பட்டது.


உடனே ஐந்து முழ சால்வையை மேலே போட்டுக் கொண்டு பெண் வீட்டிற்க்குச் சென்று பெண்ணுடைய தந்தையிடம் அனுப்பிய பதார்த்தங்களில் குறைவு காணப்படுவதாக மாப்பிளையின் தந்தை  முறையிட்டார். எனவே இருவருக்கிடையில் பேச்சு வார்த்தைகள் முற்றி கடைசியாக உன்னுடைய மகளுக்கு என்னுடைய மகனை நிக்காஹ் செய்து வைக்கமுடியாது என்று மிகவும் கண்டிப்புடனும் கோபத்துடனும் சொன்னார். உன்னுடைய மகனை என்னுடைய மகளுக்கு நிக்காஹ் செய்ய எனக்கு சம்மதம் கிடையாது என்று பெண்ணின் தந்தை கண்டிப்பாக சொல்லி விட்டார். இன்னும் முக்கால் மணி நேரத்தில் நிக்காஹ் நடைபெற வேண்டும். ஆனால் இதற்குள்ளாக எதிர்பாராத இந்த சண்டை ஏற்பட்டு திருமணமே இன்று நடக்காது என்று முடிவு தெரிந்துவிட்டது. இவ்வளவு நாட்களாக எங்குப் பார்த்தாலும் இருவருக்கும் திருமணம் நடைபெறபோகிறது  என்று பேச்சாகவே இருந்தது. ஆனால் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட குழப்பம் தீ போல் ஊரெல்லாம் பரவி விட்டது.

என்ன நடைபெறப் போகிறது என்பதை எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். என்ன செய்வது? இரு தரப்பினரும் ஒரே பிடிவாதமாகப் பேசுகின்றனர். சிறிது நேரம் சென்றதும் பெண்ணுடைய தந்தை நேராக பள்ளிவாசலுக்குச் சென்று அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஒருவரை  தட்டி எழுப்பி உடனடியாக வீட்டிற்கு அழைத்து வந்து தம்முடைய மகளை அவருக்கு திருமணம் செய்து வைத்தார். பல மாதங்களுக்கு முன் முடிவு செய்யப்பட்டிருந்த அப்பெண்ணை வேறு ஒரு மாப்பிளைக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. பல மாதங்களுக்கு முன் முடிவு செய்யப்பட்ட அத்திருமணம் எதிர்பாராத முறையில் சில நிமிஷங்களில் பெரும் மாற்றத்தையுண்டாக்கி  விட்டது.

மனிதன் என்னவெல்லாமோ திட்டம் போடுகிறான். ஆனால் அவன் போடும் திட்டங்கள் யாவும் நடைபெறுவதில்லை. இவன் போடும் திட்டம் ஒன்றாக இருக்கிறது  . ஆனால் அல்லாஹ்வின் நாட்டம் வேறு விதமாக இருக்கிறது. எனவேதான் ஒரு விஷயம் எப்பொழுது நிறைவுப் பெறுமோ அப்பொழுதுதான் உறுதியாக நம்பமுடியும். மனிதன் போடும் திட்டமெல்லாம் நிச்சயம் நடைபெற்று தான் ஆகுமென்று யாரும் உறுதியிட்டு கூறமுடியாது!
 திருமணம் நிச்சயக்கப்பட் சில பெண்ணும் ஆண்ணும்  நிக்காஹ்க்கு முன்பு பேசுவது மார்க்கத்தில் அனுமதி இல்லை. இருவரும் கணவன் மனைவி ஆகுவார்கள் என்று யாரும் உறுதியாக கூறமுடியாது.  பெண் வீட்டாரும் மாப்பிளை வீட்டாரும் சிந்திக்கவேண்டும். இன்ஷாஅல்லாஹ்  ரமலான் பிறகு நிறைய திருமணம் நடைபெற இருக்கிறது. பெண் வீட்டாரும் மாப்பிளை வீட்டாரும் அல்லாஹ்விடம் ரமலான் மாதத்தில் அல்லாஹ்விடம் அதிகம் அதிகம் துஆச் செய்யவும் ''நல்ல முறையில் நிக்காஹ் நடக்க''
அல்லாஹ்  மிக்க அறிந்தவன். -சிந்தப்பவர்களுக்கு இதில் நிறைய படிப்பினையிருக்கு]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!