அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வியாழன், மே 05, 2016

நாம் உறுதி எடுப்போம் ...!

நாம் உறுதி எடுப்போம் ...!
அல்லாஹ்வின் திருபெயரால்..
தொழுகையைத் தவிர்த்து மற்ற எல்லா கடமைகளும் இந்த பூமியில் தான் அல்லாஹ்  கடமையாக்கினான் என்பது எல்லோரும் அறிந்த உண்மை! தொழுகை மட்டும் அல்லாஹூதஆலா  அண்ணல் நபியை வானுலகம் அழைத்து , அந்த தொழுகையை கடமையாக்கினான். இந்த தொழுகையின் சிறப்பு, அதன் மகிமை சிலரை தவிர மற்றவர்கள் அறியாமல் இருக்கலாம். அப்படி அறிந்தால் அவர்கள் ஒருபோதும் தொழாமல் இருக்கமாட்டார்கள்.

ரமலான் மாதம் நெருங்கிகிறது ... அந்த மாதத்தில் பள்ளிகள் முதல் பத்து நாட்களில் நிரம்பி வழியும் . பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கும் . இந்த நிலை ஒவ்வொரு ரமலான் மாதத்திலும் நடக்கின்ற ஒரு விடயம்தான்!


உமர்பின் கத்தாப் [ரலி] அவர்களைப்பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தம்முடைய ஆளுநர்கள் அனைவருக்கும் பின்வருமாறு கடிதம் எழுதினார்கள்.. உங்களுடைய பணிகளில் என்னிடம் அனைத்தையும்விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது தொழுகையே!  எவன் தன்  தொழுகையைப் பேணுகின்றானோ - அதனைக் கண்காணித்தவண்ணம் இருப்பானோ அவன் தான் மார்க்கம் முழுவதையும் பேணி நடப்பான். எவன் தன்  தொழுகையை வீணடித்து விடுகின்றானோ அவன் மற்ற விஷயங்களைத் தாராளமாக வீணடிக்கக் கூடியவனாகவே இருப்பான்.
நூல்.. மிஷகாத்]

இன்ஷாஅல்லாஹ்  இந்த ரமலான் மாதத்தில் நாம் எல்லோரும் மனஉறுதியுடன் சபதம் எடுப்போம்...  இந்த ராமலாம் மாதத்திலிருந்து இனி எங்கள் மரணம் வருவரை நாங்கள் தொழுகையை பேணி வருவோம். இன்ஷாஅல்லாஹ்  இனி நாங்கள் அல்லாஹ்வின் வேதத்தை திருக்குர்ஆனை  தினமும் தவறாமல் ஓதி வருவதுடன் , வாழ்க்கையில் கடைப்பிடிப்போம்! நபிகள் நாயகம் [ஸல்] அவர்களின் வாழ்க்கையை நெறிகளை எங்கள் வாழ்க்கையில் இறுதி மூச்சு வரை பின்பற்றி வாழ்வோம். இன்ஷாஅல்லாஹ்  சாந்தியுடம் சுவனம் செல்வோம்...

தொழுகையில் நாம் எல்லாக் காரியத்தையும் அல்லாஹ்விடம் முறையிட முடியும்! நிம்மதியான வாழ்வை பெற முடியும்! மறுமையில் தொழுகையைப் பற்றி கேள்வியிலிருந்து தப்பித்துக் கொள்ளமுடியும்!  சுவனத்தின் திரவுக் கொள் சாவி என்று ஒரு ஹதீஸின் கருத்து நமக்கு எல்லோருக்கும் தெரியும்!

திருக்குர் ஆன் ஒதிவதினால் நம் வீட்டில் எப்பொழுதும் நல்ல சூழ்நிலை ஏற்படும்! பரக்கத்  ஏற்படும்! அல்லாஹ்வின் சகினத் வரும்! [அமைதி] வீட்டில் ஷைத்தானின் தொல்லைகள் இருக்காது! இந்த குரான் நமக்கு இன்ஷாஅல்லாஹ்  பரிந்துரைச் செய்யும் [மறுமையில்] இன்னும் நிறைய சிறப்புகள் இருக்கிறது  . சொல்லிமாளாது......

அல்லாஹ்வின் நல்லடியார்களே! சொற்பக் கால வாழ்க்கை. இந்த உலகத்தில் நீங்கள் சாதித்தது என்ன..? இன்னும் நீங்கள் சாதிக்கபோவது என்ன..? இதனால் உங்களுக்கு மறுமையில் ஏதாவது பலன் உண்டா என்று என்றைக்காவது சிந்தித்தது உண்டா..? தயவு செய்து இந்த ரமலானை போடுபோக்கியாக விட்டுவிடாதீர்கள் ! அடுத்த ரமலானில் நாம் உயிருடன் இருப்போமா என்பது யாருக்கு உத்திரவாதம் இருக்கு..? முடிந்தவரை அல்லாஹ்வின் திருப்தியை நாடி அதிகம் அதிகம் நல்ல அமல்கள் செய்ய இன்ஷாஅல்லாஹ்  முயற்சி செய்வோம்! அல்லாஹ்  நம் அனைவருக்கு தௌபீக் செய்வானாக.. [ஆமீன்]
அல்லாஹ்  மிக்க அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!