அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

சனி, ஜூலை 23, 2016

பிள்ளையை பயபக்தியுடன் வளர்த்த தாய் !

பிள்ளையை பயபக்தியுடன் வளர்த்த தாய் !
அல்லாஹ்வின் திருப்பெயரால் ......................
ஓர் ஊரில் ஒரு வாலிபர் சென்று கொண்டிருக்கும் பொழுது ஓர் ஆற்றின் ஓரத்தில் கிடந்த ஒரு பலத்தை எடுத்து சாப்பிட்டு விட்டார். அப்பழம்  யாருடையது என்று தெரியாமலும் மேலும் அதன் உரிமையாளரின் அனுமதி இன்றி அதை சாப்பிட்டது தவறு என்பதையும் அவரின் தாயார் அறிவித்தார் . எனவே அப்பழத்தின்  உரிமையாளரைக் கண்டுபிடித்து அவரிடம் மன்னிப்புக் கோரும்படியும் அவர் தாயார் கூறினார். அவரின் தாயார் கூறியபடி பழத்தின் உரிமையாளரை எப்படியோ விசாரித்து கண்டு பிடித்தார் அவ்வாலிபர். அந்த உரிமையாளரிடம் நடந்தவற்றைக் கூறி அவ்வாலிபர் மன்னிப்பை வேண்டினார். இவ்வாலிபரின் பக்தி நிறைந்த வாழ்க்கையைக் கண்ணுற்ற அவ்வுரிமையாளர் தம்முடைய பக்தி நிறைந்த அருமை மக்களுக்கு அவரைத் திருமணம் செய்து வைக்க எண்ணங் கொண்டார்.


எனவே அவ்வாலிபரிடம்  ''என்னுடைய மகளை நீர் திருமணம் செய்து கொண்டால்  உம்முடைய இந்த தவறை மன்னிப்பேன்,, இல்லையானால் மன்னிக்க முடியாது'' என்று கூறினார். மேலும் அவ்வாலிபரிடம் உரிமையாளர் கூறினார் ''என்னுடைய மகளுக்கு  கண் குருடு, மேலும் காது செவிடு ஊமை, கால் நொண்டி ஆக இத்தகைய தன்மையுடைய என்னுடைய மகளைத்தான்  நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

இதை செவியுற்ற  அவ்வாலிபர் சிந்திக்கலானார். இந்த பெண்ணை திருமணம் செய்து  கொண்டு என்ன செய்ய முடியும்? ஆனால் இப்பெண்ணை திருமணம் செய்து கொள்ளா விட்டால் குற்றத்தை மன்னிக்க மாட்டாரே! இவர் இவர் மன்னிக்கா விட்டால் அல்லாஹ் என்னை மன்னிக்க மாட்டானே என்ன செய்வதென்று புரியவில்லை.

மேலும் நாளை மறுமையில் இந்தப் பழம்  சாப்பிட்டதை பற்றி அல்லாஹ் தண்டித்தால் என்ன செய்ய முடியும்? இவற்றையெல்லாம் சிந்தித்து  அந்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ள சம்மதித்து விட்டார். எனவே திருமணம் நடந்து முடிந்தவுடன் புதுப்பெண்ணை நோட்டமிட்டார். அப்பெண்னைப் பார்த்து பார்த்து ஆச்சிரியமடைந்தார் . அதற்கு காரணம் அப்பெண்ணின் தந்தை சொன்னதற்கு நேர்மாற்றமாக இருந்ததுதான்.

அப்பெண் அழகுஉள்ளவள்  . மேலும் எந்த குறையும் இன்றி எல்லா அவயங்களும் நல்லபடியாக இருந்தன. எனவே அவ்வாலிபர் குருடு, செவிடு, நொண்டி, ஊமை என்று சொன்னதற்கு காரணம் கேட்டபொழுது  ''அல்லாஹ் எதைப்  பார்க்கக் கூடாது என்று கட்டளையிட்டானோ அதை அப்பெண் பார்த்ததில்லை,, அதனால்தான் குருடு என்று கூறினோம். அதை போன்றே அந்தப் பெண் அல்லாஹ்விற்கு மாறாக எந்த உறுப்பையும் உபயோகம் செய்தது கிடையாது. எனவேதான் செவிடு, ஊமை, நொண்டி என்று கூறினோம்.'' என்று அவ்வாலிபரிடம் பதில் கூறினார் அப்பெண்ணனின் அத்தந்தை.

மேற்கண்ட சம்பவத்திலிருந்து நமக்கு பல படிப்பினைகள் கிடைக்கின்றன. 1- அவ்வாலிபரைத் தக்வாவுடையவராக அவரின் தாய் பழக்கி வைத்தார். எனவேதான் தாயார் சொல்லைத்த தட்டாமல் உடனே நிறைவேற்றினார். 2- எப்படியும் தம்முடைய குற்றம் மன்னிக்கப்பட வேண்டும் என்று உறுதி கொண்டார். 3- அப்பெண்ணைத் தக்வாவுடைய பெண்ணாக அப்பெண்ணின் பெற்றோர்கள் வளர்த்திருந்தார்கள்.4- தம்முடைய மக்களுக்கு தக்வாவுடைய கணவனாக எதிர்பாத்திருந்ததற்குத் தோதுவாக அல்லாஹ்வே தக்வாவுடைய கணவனை அளித்தான். 5- தக்வாவுடைய அவ்வாலிபருக்கு தக்வாவுடைய அழகான மனைவியை  அடையும் பாக்கியத்தை அல்லாஹ் அருளினான்.

தன்  இறைவனின் முன் [விசாரணைக்காக மறுமையில்] நிற்க வேண்டுமென்பதை பயந்தவனுக்கு இரு சுவர்க்கச் சோலைகள் இருக்கின்றன.
அல்குர் ஆன் - 55-46]

ஈமான் கொண்ட விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வை முறைப்படி பயந்து கொள்ளுங்கள். மேலும் நிச்சயமாக நீங்கள் முஸ்லிமாக இன்றி மரணிக்க வேண்டாம்.
அல்குர் ஆன் ]
ஈமான் உறுதியும், இறையச்சமும் கொண்ட உள்ளம் எப்பொழுதும் அமைதியும், நிம்மதியும்  இருக்கும். மறுமையில் அவர்களுக்கு எந்த கவலையும், துக்கமும் இருக்காது  .
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!