அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

புதன், ஜூலை 13, 2016

தாயின் தவிர்க்க முடியாத கடமைகள்!

தாயின் தவிர்க்க முடியாத கடமைகள்!
அல்லாஹ்வின் திருப்பெயரால்.......

வீண் வேடிக்கைகளில், அனாவசிய பிரச்சனைகளிலும், மார்க்க விரோத அனாச்சாரங்களிலும் பிள்ளைகளின் கவனம் திரும்பி விடாமல் கண்காணிப்பது பெற்றோர்களின் கடமையாகும்.  பத்து வயது வந்ததும் கண்டிப்பான முறையில் தொழச் சொல்ல வேண்டும்.  அல்லாஹ்வின் அச்சத்தை சொல்லி , மறுமை நாளை பற்றி சொல்லி , நரகம் சொர்க்கம் பற்றி சொல்லி பிள்ளைகளுக்கு பக்குவமாக எடுத்து வைக்கவும்!


பிஞ்சு உள்ளத்தில் தன்னம்பிக்கையை வளர்ச் செய்து , இறை நம்பிக்கையும், அல்லாஹ்வின் அச்சத்தையும் ஊட்டவேண்டும்! நல்ல தைரியத்தை உருவாக்குவதும், உன்னத லட்சியத்தையும், உயர்ந்த நோக்கத்தையும் கடைபிடிக்கச் செய்வதும், எதையும் தாங்கும் இதயத்துடன் உண்மையான முறையில் உழைத்துப் பிழைக்க  தன்மையை உண்டாக்குவதும், உண்மையே பேசுவதும், சத்தியத்திற்கு கட்டுப்படுவதும், அல்லாஹ்க்கும், அல்லாஹ்வுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு வாழுவதும் , ஹலாலான உணவைத்  தேடுவதும் முதலிய நல்ல பழக்கங்களை உருவாக்குவதும் பெற்றோர்களின் கடமையாகும்.

இதில் தாயின் பங்குதான் அதிகம். குழந்தை தன்  தாயிடம் தான் அதிகமாக  கழிக்கிறது . அதிக பொறுப்பு தாய்க்கு தான்! தாயைப் போல பிள்ளை! நூலை போல சேலை என்று ஒரு தமிழ் பழமொழி சொல்வார்கள். ஒரு குழந்தை செல்லமாகவும் வளர்க்கவேண்டும்! கண்டிப்பாகவும் வளர்க்கவேண்டும்! ஏதாவது ஒன்று மீறினால் ஆபத்துதான் என்பது தாய்மார்கள் விளங்கி கொள்ளவேண்டும். மனைவி, மக்களை காப்பாற்றுவதற்காக பொருளீட்டுவதிலேயே  தந்தை கவனமாக இருப்பதால், அவர் அதிக நேரம் குழந்தையின் அருகில் இருக்க முடியவில்லை. ஆகவே , ஒரு குழந்தை தந்தையோடு இருக்கும் நேரத்தை விட தாயிடம் இருக்கும் நேரம் அதிகமானவையாகும். எனவே, தாய் தன்  குழந்தைக்கு ஆரம்பப் பள்ளிக்கூடமாகவும், அன்பின் இருப்பிடமாகவும் , அறிவின் சிறப்பிடமாகவும், நம்பிக்கையின் உறைவிடமாகவும் அமைந்து விடுகிறாள். இதற்காக தந்தையின் பாரம் குறைந்ததாக கொள்ளக் கூடாது. தந்தையும் குழந்தையின் உடல் வளர்ச்சி, அறிவு வளர்ச்சி , சுற்றுப்புறத்  சூழ்நிலை, பழக்க வழக்கம் முதலியவற்றை கண்காணிப்பது கடமையாகும்.

இன்னும் வாலிபப் பருவத்தை அடைந்ததும் பையன் குணத்திற்கும், அறிவுக்கும், உடல் அமைப்பிற்கும் ஏற்ற மார்க்கத்தைப் பேணி , ஐங்காலத் தொழுகையைக் கடைபிடித்து தொழுகும்  பெண்ணைப் பார்த்து மணமுடித்து வைக்கவேண்டும். பெண் பிள்ளைகளாக இருந்தால், அறிவும், அடக்கமும், நற்பண்பும், நல்லொழுக்கமும் நிறைந்த மார்க்கப் பற்று உள்ள நல்ல மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்து மணமுடித்துக் கொடுக்க வேண்டும்.  மாறாக, பணத்திற்காக, சொத்து அல்லது பட்டம், பதவி அதற்காக மணமுடித்து கொடுக்கக் கூடாது. திருமணம் என்பது இருமணமும்  இணைவதுதான் ஒரு நல்ல திருமணம்! இரண்டு மனமும் ஒன்று சேரவில்லை என்றால் அது திருமணமா..? இப்பொழுது நடக்கும் அநேக திருமணம் , ஆடபரமும், அனாவசிய செலவுகளும், அனாச்சாரங்களும்  நிறைந்த திருமணமாகத்தான் இருக்கிறது.

சில திருமணத்தில் லட்சம் லட்சமாக செலவு செய்து, வாணவேடிக்கை, கூத்து , கும்மாளம்,   எல்லாம் நடக்கும் . ஆனால், மணமக்களுக்கு பொருத்தம் இல்லாமல் , இருவருக்கும் மகிழ்ச்சி இல்லாமல் போய் இறுதியாக விவகாரத்தில் முடியும்! எல்லாவற்றையும் பார்த்தார்கள் . பார்த்து பார்த்து செய்தார்கள். ஆனால், மணமக்கள் அவர்களை பற்றி எந்த அக்கறையும் இல்லை. அவர்களுடைய பொருத்தம் , விருப்பம் இவைகளை பற்றி கவலையில்லாமல்  . திருமணத்தின் ஆடபரம் , அதிக செலவில் உணவு பல வகைகள். இப்படி நினைத்து நினைத்து செய்த திருமணம். மணமக்களின் மனமும் ஒத்து போகாமல் இருவருக்கும் மன கசப்பு ஏற்பட்டு விடுகிறது.

பெற்றோர்கள்  நன்கு சிந்திக்கவும் . எளிதான திருமணமா..? அல்லது ஆடபரம் திருமணமா? உங்கள் சிந்தனைக்கு!!!
அல்லாஹ் மிக்க அறிந்தவன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!