அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வியாழன், ஜூலை 28, 2016

வைரமா ..? அல்லது சாக்லேட் கேக்கா ..?

வைரமா ..? அல்லது சாக்லேட் கேக்கா ..?
அல்லாஹ்வின் திருப்பெயரால் ...............

ஹஜ்ரத் அனஸ் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்..
''யா அல்லாஹ் ! மறுமையின் வாழ்வைத்  தவிர வேறு வாழ்வு இல்லை என [ஒருமுறை] அண்ணல் நபி [ஸல்] துஆச் செய்தார்கள்.
நூல் புகாரி]
விளக்கம்..
உலக வாழ்வு நிலையற்றதாகும், மறுமையின் வாழ்வே நிலையானதாக. ஆகவே மறுமையின் வாழ்வே உண்மையான வாழ்வாகும் என இந்த துஆவில் அண்ணல் நபி [ஸல்] அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.


ஒரு ஊரில் ஒரு பெரிய பணக்காரர் இருந்தார். அவர் வீட்டில் ஒரு சமையல்க்காரர் ரொம்ப காலமாக சமைத்து கொடுத்து வேலை பார்த்து வந்தார். ஒருநாள் அவருக்கு ஓய்வு காலம் வந்தது!  அந்த சமையல் காரரின் முதலாளி ஒரு பெரிய விருந்தை ஏற்பாடுச்  செய்தார் அந்த சமையல்காரரின் சந்தோஷத்துக்காக . அந்த விருதுக்காக எல்லோருரையும் அழைத்தார் . அந்த முதலாளி கூறினார் அந்த சமயல்க்காரரிடம் '' நீர் விருந்துக்கு வரும்போது உன்னுடைய  பிள்ளையை அழைத்து வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்பொழுது எல்லோரும் அந்த விருந்துக்கு எல்லோரும் வந்தார்கள். சமையல்க்காரர் தன்னுடைய மகனை அழைத்துக் கொண்டு வந்தார். அவருக்கு ஒரே மகிழ்ச்சி ! இன்று நமக்கு நம்முடைய முதலாளி  ஒரு பெரிய பரிசு கொடுப்பார் என்று மனத்தில் நினைத்துக் கொண்டு இருந்தார். ஒரு பெரிய மேஜையில் மீது இரண்டு மூடப்பட்ட தட்டு இருந்தது.

அந்த சமயல்க்காரரை பார்த்து முதலாளி  '' இந்த இரண்டு தட்டில் ஏதாவது ஒரு தட்டைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் அந்த பொறுப்பை உன்னுடைய மகனிடம் கொடுக்கிறேன் அவன் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்ட்டார் ''.  பிறகு அந்த இரண்டு தட்டையும் திறந்து பார்த்தான் சமயல்க்காரரின் மகன் . ஒரு தட்டில் சாக்லேட் கேக்கும் , இன்னொரு தட்டில் வைரமும் இருந்தது. அந்த வைரம் மின்னிக் கொண்டே இருந்தது! விலை உயர்ந்த வைரம்  .  அந்த பிள்ளை எதை தேர்ந்தெடுக்கும் ? வைரமா அல்லது அந்த பிள்ளைக்கு பிடித்த சாக்லேட்டா  ..? நிச்சயமாக அந்த பிள்ளை தேர்ந்தெடுப்பது அந்த  சாக்லேட் கேக்கை தான்! அந்த பிள்ளைக்கு அந்த விலை உயர்ந்த வைரத்தை பற்றி என்ன தெரியும்..? அப்படி நம்மில் யாராவது வைரத்துக்கு பதிலாக அந்த சாக்லேட் கேக்கை எடுத்தால்  '' நாம் அவரை என்ன சொல்வோம்  '' இவர் ஒரு சரியான முட்டாள் என்றுதான் கூறுவோம்!

நம்மில் பல பேர்கள்  விலை உயர்ந்த மதிப்புள்ள நிலையான வைரத்தை விட்டு விட்டு . அர்ப்பமான இந்த சாக்லேட் கேக்கை விரும்புகிறார்கள். அந்த சாக்லேட் தான் இந்த உலகம்  ! வைரம் என்பது  மரணத்துக்கு பின் கிடைக்கும் நிலையான வாழ்க்கை! அன்பார்ந்த இஸ்லாமிய மக்கள்களே! கொஞ்சம் சிந்தியுங்கள்!  துன்யாவை கையில் வைத்து , மறுமை வாழ்க்கையை உள்ளத்தில் வைத்து  நாம் இந்த உலகத்தில் வாழவேண்டும் என்பதின் கருத்து!

ஹஜ்ரத் அபூ ஸயீதில்  குத்ரி  [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்..
அண்ணல் நபி [ஸல்] அவர்கள் மின்பரில்  அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச்  சூழ்ந்து அமர்ந்தோம், அப்பொழுது கூறினார்கள்.. எனக்குப்பின் உலகின் அலங்காரங்கள் உங்களுக்கு திறக்கப்படுவது [பெருகிவிடுவது ] நான் உங்கள் மீது பயப்படும் விஷயங்களில் ஒன்றாகும்.
நூல் புகாரி, முஸ்லீம்]

இப்பொழுது நாம் கண்கூடாக பார்க்கிறோம் . அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி [ஸல்] அவர்கள் இன்னொரு ஹதீஸில் ஒரு அழகான விடயத்தை சொன்னார்கள்.
அண்ணல் நபி [ஸல்] கூற தாம் செவிமடுத்ததாக ஹஜ்ரத் கஃபு  இயாள்  [ரலி] கூறுகிறார்கள்.. நிச்சயமாக ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனை உண்டு. என் சமுதாயத்திற்கு சோதனை செல்வம் ஆகும்.[ என் சமுதாயத் மக்களுக்குச் செல்வம்  பெருகி அதனால் அவர்கள் சோதிக்கப்படுவார்]
நூல்- திர்மிதி]

ஒரு மனிதனுக்கு செல்வம் பெறுக பெறுக  அவனுக்கு இந்த உலகத்தில் வாழும் ஆசையும் , பற்றும் அதிகமாக இருக்கும். மறுமை சிந்தனை அவனுக்கு இல்லாமல் போய்விடும்! இறுதியான ஒரு ஹதீஸை சொல்லி இந்த கட்டுரையை முடித்து கொள்கிறேன்.
ஹஜ்ரத்  அம்ரு பின் ஆஸ் [ரலி] அறிவிக்கிறார்கள்..
அண்ணல் நபி [ஸல்] அவர்கள் எங்களுருகே  நடந்து சென்றார்கள் அப்பொழுது நாங்கள் மரம் மற்றும்  மூங்கில்களினால் ஆன  எங்கள் வீட்டை செப்பனிட்டுக் கொண்டிருந்தோம், அப்பொழுது அண்ணலார் , இது என்ன? என வினவினார்கள். நாங்கள், இவ்வீடு வீணாகிவிட்டது அதனை நாங்கள் சீர்படுத்துகிறோம் எனக் கூறினோம். அதற்கு அண்ணலார் ,  ''மரணம் இதைவிட விரைவானதாக இருப்பதை  பார்க்கிறேன் எனக் பகர்ந்தார்கள்
நூல்-அபூதாவூத்]

மாட மாளிகைகளில் வாழ்ந்தவர்கள் இப்பொழுது அவர்கள் எங்கே? மரணத்தை மறந்து படைத்த இறைவனை மறந்து மனம் போன போக்கிலே வாழ்ந்தவர்கள் இப்பொழுது அவர்கள் நிலையை யார் அறிவார்கள்? போட்டி போட்டுக் கொண்டு புதிய வீடு கட்டுவதில் நாம் நிறைய பணத்தையும் நம்முடைய பொன்னான நேரத்தையும் செலவுச் செய்து, அந்த வீடு கட்டிய பிறகு நாம் எவ்வளவு காலம் அந்த புதிய வீட்டில் வாழ போகிறோம் என்பதை கூட சிந்திக்காமல் இருக்கிறோம். பார்த்து பார்த்து புதிய வீடு கட்டி பிறகு அந்த வீட்டில் தங்க முடியாமல் மரணம் அடைந்தவர்கள் இந்த உலகத்தில் எத்தனை பேர்கள் என்பது தெரியாமல் நாம் இருக்கிறோம். வீடு ரொம்ப அவசியம் தேவை! அதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. நிலையான வீட்டை மறந்துவிட்டு அழிய போற வீட்டுக்காக பாடுப்படக்  கூடியவர்கள் அவர்களுக்குத்தான் இந்த அறிவுரை!
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!