அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வெள்ளி, ஜூலை 22, 2016

புறம் பேசலாமா ..?

புறம் பேசலாமா ..?
அல்லாஹ்வின் திருப்பெயரால் ....
புறம் பேசுவது விபச்சாரத்தைவிட கொடியது ... புறம் பேசுவதினால் வாய்க்கு இனிமையாக இருக்கும், நாளை மறுமையில் வேதனை ரொம்ப கடுமையாக இருக்கும்!

''புறம்'' என்பது ஒருவருக்கு முன்னாள் ஒரு விஷயத்தை பேசப்பட்டால் அதை அவர் பொருந்திக் கொள்ளமாட்டாரே  அதற்குத்தான் புறம் என்று கூறப்படும். அவரிடம் அச்செயல் இருந்தாலும் சரிதான் . ஆனால் அவரிடம் இல்லாத விஷயங்களை மற்றவர்களிடம் கூறுவதை ''அபாண்டம்'' என்று கூறப்படும். இதில் இரண்டு விதமான குற்றம் உண்டாகிறது. ஒன்று புறம் பேசின குற்றம்,, மற்றொன்று பொய்  பேசின குற்றம்.  '' உங்களில் சிலர் சிலரை புறம் பேசவேண்டாம்' என்றும்,  ''இறந்து போன சகோதரரின் மாமிசத்தைப் புசிக்க நீங்கள் விரும்புகிறீர்களா?  அதனை நீங்கள் வெறுப்பீர்களா? என்றும் திருமறையின் கருத்துக்களை நாம் ஓதித்தான்  வருகிறோம் . அதாவது புறம் பேசுவதானது இறந்து போன சகோதரரின் மாமிசத்தைப் புசிப்பதை போன்றதாகும் என மேற்கண்ட திருமறை வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்கின்றோமல்லவா?


''புறம் பேசக்  கூடியவர்களுக்கு நாளை மறுமை வாழ்வில் நகங்கள் இரும்பினால் அளிக்கப்படும்,, அவர்கள்  நகங்களினால் தங்களின் நெஞ்சங்களையும் முகங்களையும் வரண்டிக்  கொண்டிருப்பார்கள்'' என்ற ஹதீஸின் கருத்தையும் நாம் காண முடியும். மேற்கண்ட கண்ட காட்சியை பெருமானார் [ஸல்] அவர்கள் மிஃராஜ் சென்ற சமயம் கண்டார்கள்.  புறம் பேசுவது விபச்சாரத்தை விட கொடியது என்ற விஷயத்தை நாம் அறிந்திருக்கிறோம்!  நாம் ஒருவரைப் பற்றி புறம் பேசினால் நம்முடைய நன்மைகள் அவருக்கு அளிக்கப்படும். மேலும் நம்மிடத்தில் நன்மைகள் இல்லாத பட்சத்தில் அவருடைய பாவங்கள் நம் மீது சுமத்தப்படும்.

மேலும் புறம் பேசுவதினால் உள்ளத்திலுள்ள பிரகாசம் அணைகின்றது . அதன் காரணமாக நாம் புரியும் நல்ல அமல்களிலும் பிரகாசம் இல்லாமலாகி விடுகின்றது. மேலும் உள்ளத்தின் சக்தியை இழந்து விடுகின்றோம். புறம் பேசுவதினால் பல தீமைகள் உண்டாகின்றது. எனவே இந்த மாபெரும் பாவத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இந்த புறம் பேசுவதில் அதிகமாக ஈடுபடுபவர்கள் பெண்கள்தான்!  பெண்களுக்கு ஒத்து ஒரு பொழுது போக்கு கருவியாக  இருக்கிறது. தினந்தோறும் யாரைப் பற்றியேனும்  புறம் பேசியே தீர வேண்டும். மேலும் புறம் பேசுவதை  சில பெண்கள் தம் மீது கடமை போன்று ஆக்கிக் கொண்டார்கள். இன்னும் சில பெண்கள்  செல் போனில் மணி கணக்கில் மற்றவரை பற்றி புறம் பேசி கொண்டே இருக்கிறார்கள். தாய்மார்களே! சிந்தியுங்கள்! மறுமை  நாளை பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்! உங்கள் பொன்னான நேரங்களை வீணிலே புறம் பேசிக் கழிக்காமல் தொழுகை, திலாவதில் குரான் ஓதுவது , நல்ல விஷயங்களை பேசுவது, ஆகியவற்றில் நேரத்தை செலவு செய்யுங்கள்!
நாம் மாதம் முழுதும் கஷ்ட்டப்பட்டு சம்பாத்தித்த பணத்தை நாம் யாரிடமாவது கொடுப்போமா? நமக்கு மனசுதான்  வருமா?  நாம் சம்பாதித்த நன்மைகள் மற்றவர்களுக்கு அளிக்கப்பட வேண்டுமா?? சிந்தியுங்கள்! இனி இன்ஷாஅல்லாஹ் நம் நன்மைகளை பாதுகாப்போம்! புறம் பேசிய பாவத்துக்காக உடையவரிடம் பாவமன்னிப்பு கேட்போம். அல்லாஹ்விடமும் முறையிடுவோம்!
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் இந்த பாவமான காரியங்களில் ஈடுபடுவதை விட்டும் பாதுகாப்பானாக!
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!