அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வியாழன், ஜூலை 07, 2016

உத்தமப் பெண்களின் உரிய குணங்கள்...

உத்தமப் பெண்களின் உரிய குணங்கள்...
அல்லாஹ்வின் திருப்பெயரால்...

மானத்தையும், கற்பையும் போற்றிக் காப்பவள்தான் உத்தமி! அவள்தான் பெண்களில் உயர்ந்தவள்!!  எந்த ஆணையும் ஏறிட்டுப்  பார்க்காது, யாரிடமும் எவ்விதப் பேச்சும், பழக்கமும் இராதவர்களுக்கு வேறு இந்தப் பெண்ணும் நிகராக முடியாது. ஆண்களை  'அழகு' என்ற இரை  போட்டு இழுக்கும் தூண்டிலாகப் பெண்கள் இருக்கக்கூடாது. தீய எண்ணத்தோடு பார்ப்பவளையும், கெட்ட  எண்ணத்தோடு பேசுபவனையும் அவளுடைய நடத்தை தலைகுனிய  வைக்கவேண்டும். தன்மான உணர்வு உடைய ஒவ்வொரு பெண்ணும், தன்னுடைய செயலை மார்க்கம் என்ற உரை கல்லில் உரசிப் பார்க்க வேண்டும்.


தன்  நடப்பு, செயல், பேச்சு, பழக்கம் அனைத்தையும் இஸ்லாத்துக்கு ஏற்றவைத்  தாமா? என சிந்தித்து நடக்க வேண்டும். ஆசியா , மர்யம் , கதீஜா [ரலி] ஆயிஷா [ரலி] பாத்திமா [ரலி] பரம்பரையில் வந்த பெண் இனம்.  எந்த நேரத்திலும் நேர்மை வழியில் நின்று வாழ வேண்டும். கணவன் சொல்படி நடப்பதும், கணவனிடம் பேசும்போது சப்தமாகப் பேசாமல் மரியாதையுடன் அமைதியாகப் பேசுவதும். கணவன் துணை இல்லாமல் எங்கும் செல்லாதிருப்பதும், கணவன் வெளியில் சென்ற சமயம் [அல்லது வெளிநாடு]  அவனுடைய உடமையைப் பாதுகாப்பாக வைப்பதும் உத்தமப் பெண்களின் அழகிய குணங்களாகும்.

பாத்திமா [ரலி] அவர்கள் வெளியில் கிளம்பினாள், தன்னை ஒரு கிழவி வேடத்தில் அமைத்துப் சென்று வந்தார்கள். அதுபோல் முக்கிய தேவை இருப்பின், கணவரின் உத்தரவு பெற்று உத்தமி பெண்கள்  வெளியில் செல்லும்போது , தன்  அழகையும், ஆடை அழகையும், ஆபரண அலங்காரத்தையும், வெளிக்காட்டாமல் அடக்க ஒடுக்கமாகச் சென்று விட்டு  உடனே திரும்பி விடவேண்டும்.

உத்தமிப் பெண்கள் தம் அழகைத் தம் கணவனையன்றி மற்றவர்கள் இரட்சிப்பதை  விரும்பமாட்டார்கள். தன்  குரலை மற்றவர்கள் கேட்டு இரட்சிக்கும்படி பேசமாட்டார்கள். இவர்கள்தான் உண்மையான சிதேவிகள்! இறைவனுக்கும், இறை தூதருக்கும் உகர்ந்தவர்கள் .

இறைவனுக்கும் இறை தூதருக்கும் வெறுப்பான மூதேவிகள்  இருக்கிறார்கள். அவர்கள் கணவனை மதிக்க மாட்டார்கள்  , கணவருடைய பேச்சை மீறி நடப்பார்கள். தம் இஷ்ட்டப்படி செலவழிப்பார்கள். கணவன் அனுமதி இல்லாமல் ஊருச்  சுற்றுவார்கள். சினிமா , கூத்து, வேடிக்கை பார்க்க செல்வார்கள். நாணம், வெட்கம், மானம், மரியாதை, பயம், என்பவை பெண்களுக்கு அழகிய ஆபரங்கள்  , அவற்றைத் துப்பட்டியில் சுருட்டிக் கொண்டு சினிமா, கூத்து, வேடிக்கை, பார்க்க போகும்போது இஸ்லாத்தின் பெயருக்கு ஒரு களங்கத்தையும் சுமந்து செல்கிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியைத் தரவேண்டும். உத்தமிப் பெண்களின் பட்டியலில் சேர்த்து அருள் புரியவேண்டும்.
அல்லாஹ் மிக்க அறிந்தவன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!