சனி, ஆகஸ்ட் 27, 2016

இறந்தபின் செய்ய வேண்டியது ..[பெற்றோர்களுக்கு]

இறந்தபின் செய்ய வேண்டியது ..[பெற்றோர்களுக்கு]

பெறோர்களில் ஒருவர் அல்லது இருவரும் இறந்துவிட்டால் அவர்களுக்கு பிள்ளைகள் என்ன செய்யவேண்டும்..? மையத்து கிடக்கும்போதே , அப்பொழுது குரானை ஓதவேண்டுமா ..? மையத்தை அடக்கம் செய்தபிறகு  ஹத்தம் ஃ பாத்திஹா  ஓதவேண்டுமா ..?  இந்த இரண்டு விடயங்களும் பெரும்பாலும் வீட்டில் செய்யப்படுகிறது. இந்த பழக்கம் நம் உள்ளத்தில் வேரூன்றி   விட்டது! இன்ஷாஅல்லாஹ் வருங்களாத்தில் வரக்கூடிய புதிய தலைமுறைகள் மாறலாம்..


அண்ணல் நபி [ஸல்] அவர்களிடம் ஒருவர் வந்து,  ''எனது பெற்றோர்கள் இறந்த பிறகும் அவர்களுக்கு ஏதேனும் சேவை செய்ய எனக்கு வழி இருக்கிறதா? '' என்று கேட்டார்.  ''அவர்களுக்காக  ''துஆ செய்து வாரும்,, அவர்களுக்காக பாவ மன்னிப்புக் [இஸ்திக் ஃ பார்] கேட்டு வாரும்,, அவர்களுக்குத் தந்த வாக்குறுதிகளை பூர்த்தி செய்து வாரும்,, அவர்கள் பொறுப்பிலிருந்த உறவுகளைக் காப்பாற்றி வாரும்,, அவர்களது உறவினருக்குச் சேவை செய்து வாரும்'' என்றார்கள் , அண்ணலார் .
ஆதாரம்- அபூதாவூத்

நம்முடைய சமுதாயம் எதை செய்யவேண்டுமோ அதை செய்யமாட்டார்கள் , மார்க்கத்தில் இல்லாத எந்த ஒரு விடயமாக இருந்தாலும் சிரமப்பட்டாவது செய்வார்கள் ஒழிய நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் காட்டித்தந்த  வழிமுறையில்  ஒருபோதும் செய்யமாட்டார்கள்.   ''கேட்டால் முன்னோர்கள் , பின்னோர்கள் என்று சொல்லி வாயை அடைத்துவிடுவார்கள்.

நிச்சயமாக நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. ''மனிதன் மரணமாகும் பொழுது மூன்றைத் தவிர அவருடைய அமல்கள் முடிந்துவிடும் . 1.நேமமான தர்மம் [ஸதக்கத்துள் ஜாரியா ] 2. பயன் தரக்கூடிய கல்வி , 3. அவருக்காக துஆச் செய்யக் கூடிய ஸாலிஹான குழந்தை [பிள்ளை]

நேமமான தர்மம் ... கிணறு வெட்டுவது [அதன் மூலம் மக்கள்கள் பயன் அடைவது] நிழற்குடை , குளம் , மதரஸா , மஸ்ஜித் , மரம் நடுவது இன்னும் இதுப்போன்ற நிலையான தருமங்கள் செய்வது.
கல்வி ..  நீங்கள் ஒருவருக்கு கல்வியை கற்றுக் கொடுக்கிறீர்கள் , அவர் அதைக் கற்று அமல் செய்கிறார் . நீங்கள் ஒருவருக்கு ஒரு நல்ல நன்மையான  விடயத்தை கூறுகிறீர்கள் , அவர் அதைக் கேட்டு செயல்படுத்துகிறார் . உங்கள் பிள்ளைகளுக்கு மார்க்க கல்வியை கற்றுக் கொடுக்கிறீர்கள், அவர்கள் அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். நல்ல ஸாலிஹான பிள்ளைகளாக வாழ்கிறார்கள். அந்த பிள்ளைகள் துஆச் செய்கிறார்கள் இப்படி இன்னும் பல நல்ல காரியங்களை பிள்ளைகள் செய்கிறார்கள் என்றால், நன்மைகள்  எல்லாம் இறந்த பெற்றோர்களுக்கு போய்ச் சேரும்.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!