வியாழன், ஆகஸ்ட் 25, 2016

குறைவாக இருப்பினும் நிரந்தரம் தேவை !

குறைவாக இருப்பினும் நிரந்தரம் தேவை !
ஓ மக்களே! உங்கள் சக்திக்கு உட்பட்டதையே  செய்து வாருங்கள்.. ஏனெனில் நற்கூலி தருவதில் அல்லாஹ் தளர்வதில்லை ! ஆனால் நீங்கள் நல்ல செயல்கள் புரிந்து, புரிந்து தளர்வடைந்து  விடுவீர்கள் ! [கொஞ்சமாக இருந்தாலும் ] நிரந்தரமாகச் செய்து வருவதையே அல்லாஹ் விரும்புகிறான் -அது எவ்வளவு குறைவாக இருந்தாலும் சரியே!
ஆதாரம்.. புகாரி , முஸ்லீம், திர்மிதி, நஸயீ  இப்னு மாஜா மற்றும் அபூதாவூத் ]

நம்மில் சிலர் இருக்கிறார்கள் , அவர்கள் ஒவ்வொரு வெள்ளி கிழமை இரவுகளில் சில நல்ல அமல்கள் செய்வார்கள் , தர்காக்கு போவார்கள் அங்கு சென்று யாசின் ஓதுவார்கள் .  ஒவ்வொரு வெள்ளி இரவும் மட்டும் தான் செய்வார்கள் .இது நபிகள் நாயகம் [ஸல்]காட்டித் தந்த வழிமுறை அல்ல! அல்லாஹ்வின் திருமறையை ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய பகுதி ஓதினாலும் அது நிரந்தரமாக செய்ய வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாத்திற்கு ஒரு முறை அல்லது வருடத்திற்கு ஒரு முறை என்று அல்லாமல் இன்ஷாஅல்லாஹ் ஒவ்வொரு நாளும் நாம் நல்ல அமல்கள் செய்ய வேண்டும் அது எவ்வளவு குறைவாக இருந்தாலும் நிறைவாக செய்ய வேண்டும்!  
எவன் கைவசம்  எனது உயிர் இருக்கிறதோ , அவன் மீது சத்தியம் [செய்து கூறுகிறேன்]  மக்களை நற்செயலின்  பால் அழைத்துக் கொண்டே இருங்கள்.. தீயச் செயல்களை விட்டுத் தடுத்துக் கொண்டே இருங்கள். இப்படிச் செய்யா விடில் , விரைவில் அல்லாஹ்வின் வேதனை உங்களை சூழ்ந்து கொள்ளும்! பிறகு நீங்கள் [மன்னிப்பு வேண்டி அல்லாஹ்வை] அழைத்தாலும் . அவன் கேட்கமாட்டான் .
ஆதாரம்.. திர்மிதி]-25]


நாம் மற்றவர்களுக்கு ஒரு நல்ல காரியத்தை ஏத்தி வைக்கு முன்  நாம் அதை முதலில் பின்பற்ற வேண்டும் ! பிறகு மற்றவர்களுக்கு கூறவேண்டும் ! ஆனால் இன்று அப்படி நடக்கவில்லை.  மற்றவர்களுக்கு சொல்கிறார்கள் ஆனால் அவர்கள் சொல்வதோடு மட்டும் நின்று கொள்கிறார்கள்.  

இன்று எல்லோரும் மார்க்க பணிகள் செய்கிறார்கள் ஆனால் அது எந்தளவுக்கு இக்லாஸ் இருக்கிறது என்பது அல்லாஹ் மிக்க அறிந்தவன்! சொல்பவருக்கும் /செய்பவருக்கும் இருவருக்கும் இக்லாஸ் அவசியம் இருக்கவேண்டும்! அப்படி இல்லாவிட்டால் நிச்சயமாக அல்லாஹ்வால் ஏற்றுக்  கொள்ளப்படமாட்டாது !  குறைவாக நல்ல அமல்களை செய்தாலும் அது இக்லாஸூடன் இருக்கவேண்டும் அப்பொழுதுதான்  அல்லாஹ் அதை ஏற்றுக் கொள்வான். பெருமை , மற்றவர்கள் பாராட்டவேண்டும் , முகஸ்தூதி, புகழுக்காக , ரியா இவைகள் உள்ளத்தில் ஒரு கடுகு அளவுக்கு இருக்கக்கூடாது!

விருப்பும்- வெறுப்பும்.
ஓரிடத்தில் ஒரு பாவமானச் செயல் நடக்கிறது,, அங்குள்ள ஒருவர் , அதனை பார்த்து வெறுப்படைகிறார் என்றால், அவர், அங்குள்ளவரை சாராதவராகி விடுகிறார். ஒருவர் அங்கு இல்லை எனினும் , அப்பாவச் செயலைக் கேள்விப் பட்டு சந்தோஷப்படுகிறார் என்றால், அவர் அங்குள்ளோரில் ஒருவராக ஆகிவிடுகிறார் .
ஆதாரம்.. அபூதாவூத் ]

ஒரு சிறிய உதாரணம் கூறலாம்...
ஒரு ஊரில் அங்கே சந்தனக்கூடு என்ற பெயரிலே அனாச்சாரம் நடக்கிறது [பாட்டு கச்சேரி , கூத்து, வாணவேடிக்கை , இன்னும் பல செயல்கள்]  அங்குள்ள ஒருவர் அதை வெறுக்கிறார் ''இது மார்க்கத்தில் கூடாத  அனாச்சாரம் என்று வெறுத்து ஒதுங்கிவிடுகிறார் ! இன்னொருவர் அவர் அந்த ஊரில் இல்லை , அவர் கேள்விப்பட்டு  அவர் சந்தோஷப்படுகிறார்  ''  ஆஹா நான் இந்த நேரத்தில் அங்கு இருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும் நண்பர்களுடன் ஜாலியாக இருந்திருக்குமே என்று நினைப்பார் . இப்படியெல்லாம் நடக்கிறதா என்று உங்களுக்கு நினைக்க தோணும். இல்லை என்று யாரும் மறுக்கமுடியாது.    நடந்ததை ,இன்னும் நடந்து கொண்டிருக்கிரதை தான் சொல்கிறேன்..
குறிப்பு.. என்னுடைய பதிவில் ஏதாவது குறைகள் அல்லது தவறுகள் இருந்தால் தயவுசெய்து சுட்டிக் காட்டவும் , அதை திருத்திக் கொள்ள எனக்கு சந்தர்ப்பமாக இருக்கும்!
அல்லாஹ் மிக்க அறிந்தவன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!