வியாழன், ஆகஸ்ட் 18, 2016

எழுவகை நரகத்தில் எழுவகையினர் புகுவார்கள்

எழுவகை நரகத்தில் எழுவகையினர் புகுவார்கள்
அல்லாஹ்வின் திருப்பெயரால்..

எந்த மனிதர் [இறைவனின் கட்டளைகளுக்கு] மாற்றம் செய்து உலக வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொண்டாரோ நிச்சயமாக அவர் மேலும் ஸ்தலம் நரகமாகும்  என்று இறைவன் திருமறையில் குறிப்பிடுகிறான்.

மேல் குறிப்பிட்ட திருமறை வசனத்தில் உலக வாழ்க்கையைப் பற்றி இறைவன் குறிப்பிட்டுள்ளான் . ஏனென்றால் உலக வாழ்க்கையின் மோகம் தான் மனிதனின் ஒவ்வொரு பாவங்களுக்கும் மூலவேராக இருக்கிறது. உலகத்தின் இன்பத்தை காட்டித்தான் ஷைத்தான் மனிதனை ஏமாற்றுகிறான். இதனாலேயே உலகத்தைத் தேர்ந்தெடுத்து கொண்டவர்கள் என்று இறைவன் குறிப்பிடுகிறான்.


இதே கருத்தில் தான் இமாம் கஸ்ஸாலி [ரஹ்] அவர்கள் உலக வாழ்க்கையை தூண்டியில் கோர்க்கப்பட்ட இறைக்கு ஒப்பிடுகிறார்கள். தூண்டியின்  இரைக்கு ஆசைப்பட்ட மீன் எப்படித் தன்னை கஷ்டத்தில் ஆழ்த்திக்கொள்கிறதோ இதே நிலைதான் உலகத்தின் மோகம் கொண்ட மனிதனின் நிலையம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

எந்த மனிதனின் உள்ளத்தில் உலக இன்பங்கள் சூழ்ந்து கொண்டதோ அம்மனிதரின்  உள்ளம் ஷைத்தான் தங்கும்  இல்லமாக மாறி விடுகிறது. இதனால் அம்மனிதனுக்கு ஞானப் பாதை அடைப்பட்டுவிடுகிறது. அவனின் உள்ளம் இருளடைந்து விடுகிறது.

நாளை மறுமையிலும் [மாறு செய்யும்]  அவர்கள் துக்கத்தில் ஆழ்ந்து இருப்பார்கள். அவர்கள் நம்பி இருந்த உலக செல்வங்களும் அந்தஸ்தும் தங்களை விட்டு பிரிந்துவிட்டதையும் அவைகளால் தங்களுக்கு எந்த உதவியையும் செய்ய முடியாததை நினைத்து வருந்துவார்கள்.
அல்குர் ஆன்]

நாளை மறுமையிலும் [மாறு செய்யும்] அவர்களைக் குருடர்களாகவும், ஊமைகளாகவும், செவிடர்களாகவும் அவர்களது முகங்களின் மீது [இழிவு சூழ்ந்த நிலையில்] அவர்களை ஒன்று கூட்டுவோம். அவர்கள் ஒதுங்கும் ஸ்தலம் நரகமாகும்.

மேலும் எவனது  பட்டோலை இடது கையில் கொடுக்கப்பட்டதோ , [அதைக்கண்டு அவன்] எனது பட்டோலையை நான் கொடுக்கப் படாமலிருந்திருக்க வேண்டுமே!''  நான் கொடுக்கப் படாமலிந்திருக்க வேண்டுமே! '' எனது கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியாமல் இருந்து விட்டேனே! மரணமே [எனக்கு முடிவாக [மரணத்திற்குப்பின் எழுப்பப்படாமல்]  இருந்திருக்க வேண்டுமே! எனது செல்வங்கள் எனக்கு உபயமளிக்கவில்லை [யே ] எனது அதிகாரம் என்னை விட்டும் பிரிந்து விட்ட [தே ][என பிரலாபிக்கிறான்] [இஇப்படி பிரலாபித்துக் கொண்டிருக்கும் அவனைப் பார்த்து இறைவன்]  அவனைப் பிடியுங்கள் அவனுக்கு விலங்கிடுங்கள்  . பின்னர் அவனை நரகத்தில் தள்ளுங்கள். அப்பால் எழுபது முழ [நீள ] முள்ள  சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்  [என மலக்குகளுக்கு ஆணையிடுகிறான்] திட்டமாக அம்மனிதன் மகத்துவமிக்க அல்லாஹுத்தஆலாவைக் கொண்டு ஈமான் கொள்ளாமலிருந்தான்.[அவனின் கட்டளைகளை ஏற்று  மதிக்காமல் வாழ்ந்தான்] எனக் கூறுவான்.
அல்குர் ஆன்]

இப்படிப்பட்ட தீய அடியார்களுக்கு இறைவன் நரகத்தை எழுவகையாகப் படைத்துள்ளான்.

1.ஜஹன்னம்'' என்னும் நரகத்தில் முஹம்மது [ஸல்] அவர்களின்  உம்மத்தில் உள்ள பெரும் பாவிகள் புகுவார்கள்.
2.''லழா '' என்னும் நரகத்தில் முனாஃபிக்கீன்கள் புகுவார்கள்.
3.'' சக்கா '' என்னும் நரகத்தில் யூதர்களும் நஸாராக்களும்  புகுவார்கள்.
4.''ஹுத்தமா'' என்னும் நரகத்தில் [மஜு ஸி  நெருப்பை வணங்குகிறவர்கள்] புகுவார்கள்.
5''ஜஹீம் '' என்னும் நரகத்தில் விக்ரக ஆராதனை புரிகிறவர்கள்  புகுவார்கள்.
6.''சார்'' என்னும் நரகத்தில் யா ஃ ஜுஜ் ம ஃ ஜுஜ் கூட்டத்தினர் நுழைவார்கள்.
7.'' ஹாவியா '' என்னும் நரகத்தில் பாவியான ஜின்களும், ஷைத்தான்களும் மற்றும் அல்லாஹ்வையும் ரஸூலையும் பொய்யாக்கி திருக்குர் ஆனை  புறக்கணித்தவர்களும் புகுவார்கள்.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!